அத்தியாயம்: 1, பாடம்: 1.01, ஹதீஸ் எண்: 5

و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ جَمِيعًا عَنْ ابْنِ عُلَيَّةَ قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ أَبِي حَيَّانَ عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا بَارِزًا لِلنَّاسِ فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا الإيمَانُ قَالَ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلائِكَتِهِ وَكِتَابِهِ وَلِقَائِهِ وَرُسُلِهِ وَتُؤْمِنَ بِالْبَعْثِ الآخِرِ قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا الإسْلامُ قَالَ الإسْلامُ أَنْ تَعْبُدَ اللَّهَ وَلا تُشْرِكَ بِهِ شَيْئًا وَتُقِيمَ الصَّلاةَ الْمَكْتُوبَةَ وَتُؤَدِّيَ الزَّكَاةَ الْمَفْرُوضَةَ وَتَصُومَ رَمَضَانَ قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا الإحْسَانُ قَالَ أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ فَإِنَّكَ إِنْ لا تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ قَالَ يَا رَسُولَ اللَّهِ مَتَى السَّاعَةُ قَالَ مَا الْمَسْئُولُ عَنْهَا بِأَعْلَمَ مِنْ السَّائِلِ وَلَكِنْ سَأُحَدِّثُكَ عَنْ أَشْرَاطِهَا إِذَا وَلَدَتْ الأمَةُ رَبَّهَا فَذَاكَ مِنْ أَشْرَاطِهَا وَإِذَا كَانَتْ الْعُرَاةُ الْحُفَاةُ رُءُوسَ النَّاسِ فَذَاكَ مِنْ أَشْرَاطِهَا وَإِذَا تَطَاوَلَ رِعَاءُ الْبَهْمِ فِي الْبُنْيَانِ فَذَاكَ مِنْ أَشْرَاطِهَا فِي خَمْسٍ لا يَعْلَمُهُنَّ إِلا اللَّهُ ثُمَّ تَلا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الأرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ قَالَ ثُمَّ أَدْبَرَ الرَّجُلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رُدُّوا عَلَيَّ الرَّجُلَ فَأَخَذُوا لِيَرُدُّوهُ فَلَمْ يَرَوْا شَيْئًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا جِبْرِيلُ جَاءَ لِيُعَلِّمَ النَّاسَ دِينَهُمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒருநாள் மக்களுக்கு நடுநாயகமாக வீற்றிந்தார்கள். அப்போது ஒருவர் அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஈமான்(இறை நம்பிக்கை) என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்), “அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்(மலக்கு)களையும் அவனது வேதத்தையும் அவனுடனான சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீங்கள் நம்புவதும் மறுமையில் மீளெழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! ‘இஸ்லாம்'(கட்டுப் படுதல்) என்றால் என்ன?” என்று கேட்டார். நபி (ஸல்), “இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்குவதும் அவனுக்கு நீங்கள் எதையும் இணை கற்பிக்காமலிருப்பதும் கடமையான தொழுகையைக் கடைப்பிடிப்பதும் கடமையான ஜகாத்தைச் செலுத்தி விடுவதும்  ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்” என்றார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! இஹ்ஸான்(அழகிய அணுகுமுறை) என்றால் என்ன?” என்று  அவர் கேட்டார். நபி (ஸல்), “இஹ்ஸான் என்பது அல்லாஹ்வை நீங்கள் பார்ப்பது போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். நீங்கள் அவனைப் பார்க்கவில்லையென்றாலும் அவன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்” என்று பதிலளித்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! இஹ்ஸான்(அழகிய அணுகுமுறை) என்றால் என்ன?” என்று அவர் கேட்டார். நபி (ஸல்), “இஹ்ஸான் என்பது அல்லாஹ்வை நீங்கள் பார்ப்பது போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். நீங்கள் அவனைப் பார்க்கவில்லையென்றாலும் அவன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்” என்று பதிலளித்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! மறுமை(நாள்) எப்போது வரும்?” என்று அவர் கேட்க, நபி (ஸல்), “வினவுபவரைவிட வினவப்படுபவர் அதிகம் அறிந்தவர் அல்லர். ஆயினும் நான் உங்களுக்கு மறுமை நாளின் அடையாளங்கள் சிலவற்றை அறிவிப்பேன்: “ஓர் அடிமைப் பெண் தன் எஜமானைப் பெற்றெடுப்பாளாயின் அது மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும். அரைகுறை ஆடையணிந்த, செருப்பணியாதவர்கள் மக்களின் தலைவர்களாயின் அதுவும் மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும். ஆடு மேய்த்தவர்கள் போட்டி போட்டுக்கொண்டு வானுயர்ந்த கட்டடங்களைக் கட்டுவார்களாயின் அதுவும் மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும். மறுமை பற்றிய அறிவு என்பது அது, அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்தில் அடங்கும்.” எனக் கூறிய பிறகு, “நிச்சயமாக மறுமை பற்றிய முற்றான அறிவு அல்லாஹ்விடமே இருக்கின்றது. அவன்தான் (சூல்கொண்ட மேகத்திலிருந்து) மழையைப் பொழிவிப்பவன். மேலும் கருவறையில் உள்ளவற்றை அறிபவனும் அவனே. நாளைக்குச் சம்பாதிக்கப் போவது என்ன? என்பது எவருக்கும் தெரியாது. மரணிக்கப் போவது எந்த மண்ணில் என்பதையும் எவரும் அறியார். திண்ணமாக, அல்லாஹ் (அவற்றை) முற்றாய் அறிந்தவன்; நுண்ணறிவாளன்.” எனும் (அல் குர்ஆன் 31 :34 ஆவது) இறைவசனத்தை நபி (ஸல்) ஓதிக் காட்டினார்கள்.

பின்னர் (கேள்வி கேட்ட) அவர் சென்று விட்ட பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவரைத் திரும்ப என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று சொன்னார்கள். அவரைத் திரும்ப அழைத்து வரச் சென்றனர். (நீண்ட நேரம் தேடியும்) அவர்களால் அவரைக் காண முடியவில்லை. பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவர் ஜிப்ரீல்(அலை) ஆவார். மக்களுக்கு அவர்களது மார்க்கத்(தின் அடிப்படைத் தத்துவத்)தைக் கற்றுத் தருவதற்காக அவர் வந்திருந்தார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

Share this Hadith:

Leave a Comment