அத்தியாயம்: 1, பாடம்: 44, ஹதீஸ் எண்: 148

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ أَوْ ‏ ‏شَقَّ الْجُيُوبَ ‏ ‏أَوْ دَعَا ‏ ‏بِدَعْوَى ‏ ‏الْجَاهِلِيَّةِ ‏
‏هَذَا حَدِيثُ ‏ ‏يَحْيَى ‏ ‏وَأَمَّا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏وَأَبُو بَكْرٍ ‏ ‏فَقَالَا ‏ ‏وَشَقَّ وَدَعَا بِغَيْرِ أَلِفٍ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَا وَشَقَّ وَدَعَا ‏

“(துக்கம் ஏற்பட்டால்) கன்னங்களில் அறைந்து கொள்பவன், அல்லது சட்டைப் பைகளைக் கிழித்துக் கொள்பவன், அல்லது அறியாமைக் கால வழக்கப்படி புலம்புகிறவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி).

குறிப்பு:
இப்னு நுமைர், அபூபக்ர் பின் அபீஷைபா ஆகியோரது வழி அறிவிப்பில் ‘அல்லது’ என்ற சொல் இடம்பெறாமல், “அறைந்து கொள்பவனும் கிழித்துக் கொள்பவனும் புலம்புகின்றவனும்” என உம்மைத் தொடர்களுடன் இடம் பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment