அத்தியாயம்: 1, பாடம்: 1.05, ஹதீஸ் எண்: 20

و حَدَّثَنَا سَهْلُ بْنُ عُثْمَانَ الْعَسْكَرِيُّ حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّاءَ حَدَّثَنَا سَعْدُ بْنُ طَارِقٍ قَالَ حَدَّثَنِي سَعْدُ بْنُ عُبَيْدَةَ السُّلَمِيُّ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بُنِيَ الإسْلامُ عَلَى خَمْسٍ عَلَى أَنْ يُعْبَدَ اللَّهُ وَيُكْفَرَ بِمَا دُونَهُ وَإِقَامِ الصَّلاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَحَجِّ الْبَيْتِ وَصَوْمِ رَمَضَانَ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்லாம் ஐந்து (அடிப்படைகள்) மீது நிறுவப்பட்டுள்ளது. அல்லாஹ்வை மட்டுமே வழிபட்டு, அவன் அல்லாத அனைத்தையும் நிராகரிப்பது; தொழுகையைக் கடைபிடிப்பது; ஸகாத் செலுத்துவது; இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்பு: மேற்காணும் ஹதீஸை எளிதாக விளங்கிக் கொள்வதற்காகத்தான் கடமைகள் வரிசைப் படுத்தப் பட்டுள்ளன. பொருள் வளம் நிறைந்த ஒருவர் ஷஃபான் மாதத்தின் இறுதியில் இஸ்லாத்தை ஏற்று விட்டால் முதலிரண்டு அடிப்படைக் கடமைகளான ‘ஏகத்துவக் கொள்கைப் பிரகடனம்’, ‘தொழுகை’ ஆகியவற்றோடு அடுத்து வரும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது மூன்றாவது அடிப்படைக் கடமையாக அவருக்கு அமையும். அவரே சற்றுத் தாமதமாக (ரமளான் கழிந்து) ஷவ்வால் மாதத்தில் இஸ்லாத்தைத் தழுவினால் அடுத்த இரண்டு மாதங்களில் வரும் ‘ஹஜ்’ அவருக்கு மூன்றாவது கடமையாக அமைந்து, நான்காவதாக அடுத்த ஹிஜ்ரீ ஆண்டின் நோன்பும் ஐந்தாவதாக (ஷவ்வால் மாதத்தில்) ஸகாத்தும் ஐந்தாவது கடமைகளாக மாறி விடும்.