அத்தியாயம்: 1, பாடம்: 56, ஹதீஸ் எண்: 178

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ ‏ ‏وَأَبُو مُعَاوِيَةَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏
‏لَمَّا نَزَلَتْ ‏
‏الَّذِينَ آمَنُوا وَلَمْ ‏ ‏يَلْبِسُوا ‏ ‏إِيمَانَهُمْ ‏ ‏بِظُلْمٍ ‏

‏شَقَّ ذَلِكَ عَلَى ‏ ‏أَصْحَابِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَالُوا أَيُّنَا لَا يَظْلِمُ نَفْسَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَيْسَ هُوَ كَمَا تَظُنُّونَ إِنَّمَا هُوَ كَمَا قَالَ ‏ ‏لُقْمَانُ ‏ ‏لِابْنِهِ ‏
‏يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ ‏

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عِيسَى وَهُوَ ابْنُ يُونُسَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ مُسْهِرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ إِدْرِيسَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ إِدْرِيسَ ‏ ‏حَدَّثَنِيهِ ‏ ‏أَوَّلًا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏أَبَانَ بْنِ تَغْلِبَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏ثُمَّ ‏ ‏سَمِعْتُهُ مِنْهُ ‏

“இறைநம்பிக்கை கொண்டு (பின்னர்) தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாதவர்களுக்கு அபயம் உண்டு …” எனும் (6:82) இறைவசனம் அருளப் பட்டபோது, அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு சஞ்சலத்தை ஏற்படுத்தியது. “நம்முள் யார்தாம் தமக்குத் தாமே அநீதி இழைக்காதவர்?” என்று கேட்டுக் கொண்டார்கள். (இதை அறிந்து கொண்டு) “நீங்கள் நினைப்பது போலன்று; மாறாக, லுக்மான் அவர்கள் தம் புதல்வரிடம், என் அன்பு மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே!. அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதுதான் மாபெரும் அநீதியாகும் என்று சொன்ன (31:13) அநீதியாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி).

Share this Hadith:

Leave a Comment