அத்தியாயம்: 1, பாடம்: 57, ஹதீஸ் எண்: 180

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي بَكْرٍ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏آدَمَ بْنِ سُلَيْمَانَ ‏ ‏مَوْلَى ‏ ‏خَالِدٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏سَعِيدَ بْنَ جُبَيْرٍ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏
‏لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ ‏
‏وَإِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُمْ بِهِ اللَّهُ ‏

‏قَالَ دَخَلَ قُلُوبَهُمْ مِنْهَا شَيْءٌ لَمْ يَدْخُلْ قُلُوبَهُمْ مِنْ شَيْءٍ فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا وَسَلَّمْنَا قَالَ فَأَلْقَى اللَّهُ الْإِيمَانَ فِي قُلُوبِهِمْ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى ‏
‏لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا ‏ ‏وُسْعَهَا ‏ ‏لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا ‏

‏قَالَ قَدْ فَعَلْتُ ‏
‏رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا ‏ ‏إِصْرًا ‏ ‏كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا ‏

‏قَالَ قَدْ فَعَلْتُ ‏
‏وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا ‏

‏قَالَ قَدْ فَعَلْتُ ‏

“… உங்கள் உள்ளத்துள் உள்ளதை நீங்கள் வெளிப்படுத்தினாலும் மறைத்தாலும் அல்லாஹ் அதைக் கணக்கெடுத்து விடுவான் …” எனும் (2:284) வசனம் அருளப் பட்டபோது (மக்களது) மனங்களில் அதுவரை குடிபுகாத (சஞ்சலம்) ஒன்று குடிபுகுந்தது. அப்போது, “சொல்லுங்கள்: செவிசாய்த்தோம்; வழிப்பட்டோம்; கட்டுப் படுகிறோம் என்று” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களுக்குக் கூறினார்கள். (அவ்வாறே மக்கள் கூறவே) அல்லாஹ் அவர்களது உள்ளங்களில் நம்பிக்கையை ஊட்டி(வலுப் படுத்தி)னான். கூடவே,

“தாங்கிக் கொள்ளவே இயலாத அளவுக்கு யாருக்கும் அல்லாஹ் துன்பத்தை அளிப்பதில்லை. அவரவர் தேடிக்கொண்ட நன்மையும் தீமையும் அவரவர்க்கே!(ஓரிறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் இறைஞ்சுங்கள்:) “எங்கள் இறைவா! (உன் கட்டளைகளை நிறைவேற்றுவதில்) நாங்கள் (எதையும்) மறந்துவிட்டிருந்தாலோ (அதில்) பிழை செய்திருந்தாலோ எங்களைக் குற்றம் பிடித்து விடாதே!” (2:286) என்ற (கற்பிக்கும்) வசனத்தை அருளினான்.

(மக்கள் அதை மீட்டிக் கோரியபோது,)

“ஏற்றுக் கொண்டேன்” என்றான் அல்லாஹ்.

தொடர்ந்து, “எங்கள் இறைவா! எங்களுக்கு முன்வாழ்ந்த(சமுதாயத்த)வர் மீது சுமத்திய (பெருஞ்)சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்தி விடாதே!” (என்ற வசனத்தை மக்கள் மீட்டியபோது,)

“ஏற்றுக் கொண்டேன்” என்றான் அல்லாஹ்.

அதைத் தொடர்ந்து, “எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்து விடுவாயாக! எங்கள் மீது பேரருள் புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்” (என்று மக்கள் வேண்டியபோது,)

“ஏற்றுக் கொண்டேன்” என்றான் அல்லாஹ்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 57, ஹதீஸ் எண்: 179

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ الضَّرِيرُ ‏ ‏وَأُمَيَّةُ بْنُ بِسْطَامَ الْعَيْشِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأُمَيَّةَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحٌ وَهُوَ ابْنُ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏الْعَلَاءِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏
‏لَمَّا نَزَلَتْ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏
‏لِلَّهِ مَا فِي السَّمَوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَإِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُمْ بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَنْ يَشَاءُ وَيُعَذِّبُ مَنْ يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ‏

‏قَالَ فَاشْتَدَّ ذَلِكَ عَلَى ‏ ‏أَصْحَابِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَتَوْا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ بَرَكُوا عَلَى الرُّكَبِ فَقَالُوا أَيْ رَسُولَ اللَّهِ كُلِّفْنَا مِنْ الْأَعْمَالِ مَا نُطِيقُ الصَّلَاةَ وَالصِّيَامَ وَالْجِهَادَ وَالصَّدَقَةَ وَقَدْ أُنْزِلَتْ عَلَيْكَ هَذِهِ الْآيَةُ وَلَا نُطِيقُهَا قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَتُرِيدُونَ أَنْ تَقُولُوا كَمَا قَالَ أَهْلُ الْكِتَابَيْنِ مِنْ قَبْلِكُمْ سَمِعْنَا وَعَصَيْنَا بَلْ قُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ قَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ فَلَمَّا اقْتَرَأَهَا الْقَوْمُ ذَلَّتْ بِهَا أَلْسِنَتُهُمْ فَأَنْزَلَ اللَّهُ فِي ‏ ‏إِثْرِهَا ‏
‏آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ ‏

‏فَلَمَّا فَعَلُوا ذَلِكَ نَسَخَهَا اللَّهُ تَعَالَى فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏
‏لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا ‏ ‏وُسْعَهَا ‏ ‏لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا ‏

‏قَالَ نَعَمْ ‏
‏رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا ‏ ‏إِصْرًا ‏ ‏كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا ‏

‏قَالَ نَعَمْ ‏
‏رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ‏

‏قَالَ نَعَمْ ‏
‏وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ ‏

‏قَالَ نَعَمْ ‏

“வானங்களிலும் பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன. இன்னும் உங்கள் உள்ளத்துள் உள்ளதை நீங்கள் வெளிப்படுத்தினாலும் மறைத்தாலும் அல்லாஹ் அதைக் கணக்கெடுத்து விடுவான். அவன், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை தண்டிப்பான். அனைத்தின் மீதும் அல்லாஹ் ஆதிக்கப் பேராற்றல் உடையவன்” எனும் (2:284) வசனம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளப் பட்டபோது, அவர்களின் தோழர்களுக்கு அது கடின தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, மண்டியிட்டு அமர்ந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் சக்திக்கு மீறிய(தாக நாங்கள் நினைத்த) தொழுகை, நோன்பு, அறப்போர், தர்மம்(ஸகாத்) ஆகியவற்றைச் செய்யுமாறு நாங்கள் உத்தரவிடப்பட்டோம். ஆனால், (இப்போது) தங்களுக்கு இந்த வசனம் அருளப் பட்டுள்ளது. இது எங்கள் சக்திக்கு மீறியதாயிற்றே?” என்று கேட்டார்கள். அதற்கு, “உங்களுக்கு முன் வேதம் வழங்கப் பட்ட இரு வேதக்காரர்(களான யூதர்களும் கிறிஸ்தவர்)களும் கூறியதைப் போன்று, செவியுற்றோம்; மாறு செய்தோம் என்று நீங்களும் கூற விரும்புகின்றீர்களா? வேண்டாம். (மாறாக,) எங்கள் இறைவா! நாங்கள் (உன் கட்டளைகளுக்குச்) செவிசாய்த்தோம்; வழிப்பட்டோம்; உன்னிடமே மன்னிப்பை வேண்டி நிற்கிறோம்; உன்னிடமே மீண்டு வருவோம் என்று கூறுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அவ்வாறே, “எங்கள் இறைவா! நாங்கள் (உன் கட்டளைகளுக்குச்) செவிசாய்த்தோம்; வழிப்பட்டோம்; உன்னிடமே மன்னிப்பை வேண்டி நிற்கிறோம்; உன்னிடமே மீண்டு வருவோம்” என்று மக்கள் கூறத் தொடங்கினர். அவர்கள் சொல்லச் சொல்ல, (மனமொன்றி) அவர்களது நாவுகள் (இறைவனுக்குப்) பணிந்தன.

அதைத் தொடர்ந்து,

“தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை இறைத்தூதரும் ஓரிறை நம்பிக்கையாளர்களும் (உறுதியாக) நம்புகின்றனர். (மட்டுமின்றி,) அவர்கள் அனைவரும் அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய அனைத்து மறைகளையும் தூதர்களையும் நம்புகின்றனர். இறைத்தூதர்களுக்கிடையில் (அவர்களை நம்புவதில்) நாம் வேற்றுமை பாராட்ட மாட்டோம். எங்கள் இறைவா! நாங்கள் (உன் கட்டளைகளுக்குச்) செவிசாய்த்தோம்; வழிப்பட்டோம்; உன்னிடமே மன்னிப்பை வேண்டி நிற்கிறோம்; உன்னிடமே மீண்டு வருவோம் (என்ற நம்பிக்கையில் வாழ்கிறோம்) என்று அவர்கள் வேண்டுகின்றனர்” என்ற (2:285) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

மக்கள் (தன் கட்டளைகளை ஏற்றுச்) செயல்பட்டதைத் தொடர்ந்து, முந்தைய கடுமைக்கு மாற்றாக,

“தாங்கிக் கொள்ளவே இயலாத அளவுக்கு யாருக்கும் அல்லாஹ் துன்பத்தை அளிப்பதில்லை. அவரவர் தேடிக்கொண்ட நன்மையும் தீமையும் அவரவர்க்கே!(ஓரிறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் இறைஞ்சுங்கள்:) “எங்கள் இறைவா! (உன் கட்டளைகளை நிறைவேற்றுவதில்) நாங்கள் (எதையும்) மறந்துவிட்டிருந்தாலோ (அதில்) பிழை செய்திருந்தாலோ எங்களைக் குற்றம் பிடித்து விடாதே!” (2:286) என்ற (ஆறுதலான, கற்பிக்கும்) வசனங்களை அருளினான். (மக்கள் அவ்வாறே அவனிடம் வேண்டவே,)

“ஆகட்டும்” என்றான் அல்லாஹ்.

தொடர்ந்து, “எங்கள் இறைவா! எங்களுக்கு முன்வாழ்ந்த(சமுதாயத்த)வர் மீது சுமத்திய (பெருஞ்)சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்தி விடாதே!” (என்ற வசனத்தை மக்கள் மீட்டியபோது),

“ஆகட்டும்” என்றான் அல்லாஹ்.

அதைத் தொடர்ந்து, “எங்கள் இறைவா! எங்களால் சுமக்க இயலாத எதையும் எங்கள் மீது சுமத்தி விடாதே!” (என்ற வசனத்தால் மக்கள் வேண்டியபோது,)

“ஆகட்டும்” என்றான் அல்லாஹ்.

இறுதியாக, “எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்து விடுவாயாக! எங்கள் மீது பேரருள் புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன். இறைமறுப்பாளக் கூட்டத்தாரை நாங்கள் வென்றெடுக்க எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” (என்று மக்கள் வேண்டினர்.)

“ஆகட்டும்” என்றான் அல்லாஹ்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).