அத்தியாயம்: 1, பாடம்: 61, ஹதீஸ் எண்: 197

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏
‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ حَلَفَ عَلَى يَمِينِ ‏ ‏صَبْرٍ ‏ ‏يَقْتَطِعُ ‏ ‏بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ هُوَ فِيهَا فَاجِرٌ لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ ‏
‏قَالَ فَدَخَلَ ‏ ‏الْأَشْعَثُ بْنُ قَيْسٍ ‏ ‏فَقَالَ مَا يُحَدِّثُكُمْ ‏ ‏أَبُو عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏قَالُوا كَذَا وَكَذَا قَالَ صَدَقَ ‏ ‏أَبُو عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏فِيَّ نَزَلَتْ كَانَ بَيْنِي وَبَيْنَ ‏ ‏رَجُلٍ ‏ ‏أَرْضٌ ‏ ‏بِالْيَمَنِ ‏ ‏فَخَاصَمْتُهُ إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏هَلْ لَكَ بَيِّنَةٌ فَقُلْتُ لَا قَالَ فَيَمِينُهُ قُلْتُ إِذَنْ يَحْلِفُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عِنْدَ ذَلِكَ مَنْ حَلَفَ عَلَى يَمِينِ ‏ ‏صَبْرٍ ‏ ‏يَقْتَطِعُ ‏ ‏بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ هُوَ فِيهَا فَاجِرٌ لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ فَنَزَلَتْ ‏
‏إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا ‏

‏إِلَى آخِرِ الْآيَةِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ يَسْتَحِقُّ بِهَا مَالًا هُوَ فِيهَا فَاجِرٌ لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ ثُمَّ ذَكَرَ نَحْوَ حَدِيثِ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ كَانَتْ بَيْنِي وَبَيْنَ ‏ ‏رَجُلٍ ‏ ‏خُصُومَةٌ فِي بِئْرٍ ‏ ‏فَاخْتَصَمْنَا ‏ ‏إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ شَاهِدَاكَ أَوْ يَمِينُهُ

“ஒரு முஸ்லிமுடைய சொத்தைப் பறித்துக் கொள்வதற்காகத் தன்னிலை நிரூபணத்தில் பொய்ச் சத்தியம் செய்பவர், அல்லாஹ்வை (மறுமையில்) அவர்மீது கோபம் கொண்ட நிலையில்தான் சந்திப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி) (மக்களிடம்) கூறியிருந்தார். அவ்வேளை, அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அங்கு வந்து, “உங்களிடம் அபூஅப்திர் ரஹ்மான் (இபுனு மஸ்ஊது) கூறியதென்ன?” என்று மக்களிடம் கேட்டார். “அவர் இன்னின்னவாறு கூறினார்” என்று மக்கள் பதிலுரைத்தனர். “அபூஅப்திர் ரஹ்மான் (இபுனு மஸ்ஊது) உண்மையுரைத்தார். யமனில் உள்ள ஒரு நிலத்துண்டு (தொடர்பாக) எனக்கும் இன்னொருவருக்கும் (சச்சரவு) இருந்தது. அந்த வழக்கை நான் அல்லாஹ்வின் தூதரிடம் முறையிட்டேன். “உம்மிடம் நிரூபணச் சான்றேதுமுண்டா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம் கேட்க, நான் “இல்லை” என்றேன். “எனில், (பிரதிவாதியான) அவர் சத்தியம் செய்ய வேண்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். “அவர் (பொய்ச்) சத்தியம் செய்து விடுவார்” என்றேன். அதற்கு, “ஒரு முஸ்லிமுடைய சொத்தைப் பறித்துக் கொள்வதற்காகத் தன்னிலை நிரூபணத்தில் பொய்ச்சத்தியம் செய்பவர், அல்லாஹ்வை (மறுமையில்) அவர்மீது கோபம் கொண்ட நிலையில்தான் சந்திப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அப்போதுதான், “யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும் தம் சத்தியப்பிரமாணங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகிறார்களோ …” என்ற (3:77ஆவது) வசனம் அருளப் பட்டது என்று விவரித்தார்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி).

குறிப்பு:

இதே ஹதீஸ், அபூவாஇல் (ரஹ்) வழி அறிவிப்பு, “(பிறர்) பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொய்ச் சத்தியம் செய்பவர், அல்லாஹ்வை (மறுமையில்) அவர்மீது கோபம் கொண்ட நிலையில்தான் சந்திப்பார்” என்று தொடங்குகிறது. அதில், “எனக்கும் இன்னொருவருக்கும் ஒரு கிணற்றுத் தகராறு இருந்தது. ஆகவே, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு சென்றோம். அவர்கள் என்னிடம், (தீர்ப்புக்குத் தேவை) உம்முடைய இரு சாட்சிகள், அல்லது அவரது சத்தியம் என்று கூறினார்கள்” என இடம் பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment