அத்தியாயம்: 1, பாடம்: 67, ஹதீஸ் எண்: 213

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي كُرَيْبٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏شَقِيقٍ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏ ‏قَالَ ‏
‏كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏أَحْصُوا ‏ ‏لِي كَمْ يَلْفِظُ الْإِسْلَامَ قَالَ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ أَتَخَافُ عَلَيْنَا وَنَحْنُ مَا بَيْنَ السِّتِّ مِائَةٍ إِلَى السَّبْعِ مِائَةٍ قَالَ إِنَّكُمْ لَا تَدْرُونَ لَعَلَّكُمْ أَنْ ‏ ‏تُبْتَلَوْا ‏
‏قَالَ ‏ ‏فَابْتُلِيَنَا ‏ ‏حَتَّى جَعَلَ الرَّجُلُ مِنَّا لَا ‏ ‏يُصَلِّي إِلَّا سِرًّا ‏

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்த (ஆரம்ப கட்டத்தின்) ஒருவேளை, ” (இப்போதுவரை) எத்தனை பேர் இஸ்லாத்தை ஏற்றுள்ளார்கள்? என்பதை எனக்குக் கணக்கிட்டுச் சொல்லுங்கள்” என்று எங்களை நபி (ஸல்) கேட்டார்கள். நாங்கள், “அறுநூறு முதல் எழுநூறு பேர்வரை இருக்க, எங்களைப் பற்றி அஞ்சுகிறீர்களா? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டோம். “உங்களுக்குத் தெரியாது. நீங்கள் (எதிரிகளால்) சோதிக்கப்படலாம்!” என்று அவர்கள் கூறினார்கள். (அவர்கள் கூறியவாறே பிற்பாடு) எங்களில் சிலர் இரகசியமாகவேயன்றித் தொழ முடியாத நிலைவரைக்கும் சோதிக்கப்பட்டோம்.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா (ரலி).