அத்தியாயம்: 1, பாடம்: 68, ஹதீஸ் எண்: 215

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمِّهِ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عَامِرُ بْنُ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏سَعْدٍ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَعْطَى ‏ ‏رَهْطًا ‏ ‏وَسَعْدٌ ‏ ‏جَالِسٌ فِيهِمْ قَالَ ‏ ‏سَعْدٌ ‏ ‏فَتَرَكَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْهُمْ مَنْ لَمْ يُعْطِهِ وَهُوَ أَعْجَبُهُمْ إِلَيَّ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا لَكَ عَنْ فُلَانٍ فَوَاللَّهِ إِنِّي لَأَرَاهُ مُؤْمِنًا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَوْ مُسْلِمًا قَالَ فَسَكَتُّ قَلِيلًا ثُمَّ غَلَبَنِي مَا أَعْلَمُ مِنْهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا لَكَ عَنْ فُلَانٍ فَوَاللَّهِ إِنِّي لَأَرَاهُ مُؤْمِنًا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَوْ مُسْلِمًا قَالَ فَسَكَتُّ قَلِيلًا ثُمَّ غَلَبَنِي مَا عَلِمْتُ مِنْهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا لَكَ عَنْ فُلَانٍ فَوَاللَّهِ إِنِّي لَأَرَاهُ مُؤْمِنًا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَوْ مُسْلِمًا ‏ ‏إِنِّي لَأُعْطِي الرَّجُلَ وَغَيْرُهُ أَحَبُّ إِلَيَّ مِنْهُ خَشْيَةَ أَنْ ‏ ‏يُكَبَّ ‏ ‏فِي النَّارِ عَلَى وَجْهِهِ ‏
‏حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ وَهُوَ ابْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عَامِرُ بْنُ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏سَعْدٍ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏أَعْطَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَهْطًا ‏ ‏وَأَنَا جَالِسٌ فِيهِمْ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏ابْنِ أَخِي ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ عَمِّهِ وَزَادَ فَقُمْتُ إِلَى رَسُولِ اللَّهِ فَسَارَرْتُهُ فَقُلْتُ مَا لَكَ عَنْ فُلَانٍ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ الْحُلْوَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ مُحَمَّدٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُحَمَّدَ بْنَ سَعْدٍ ‏ ‏يُحَدِّثُ هَذَا ‏ ‏فَقَالَ فِي حَدِيثِهِ فَضَرَبَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِيَدِهِ بَيْنَ عُنُقِي وَكَتِفِي ثُمَّ قَالَ أَقِتَالًا أَيْ ‏ ‏سَعْدُ ‏ ‏إِنِّي لَأُعْطِي الرَّجُل

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு குழுவினருக்கு (தர்மப் பொருட்களை) வழங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடையே நானும் அமர்ந்திருந்தேன். அப்போது, அக்குழுவினரில் நான் பேரன்பு வைத்திருந்த ஒருவருக்கு ஏதும் கொடுக்காமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விட்டுவிட்டார்கள். ஆகவே நான், “அல்லாஹ்வின் தூதரே! அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)?. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஒரு முஃமின் என நான் கருதுகிறேன்” என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவரை முஸ்லிம் என்று சொல்லுங்கள்!” என்றார்கள். சற்று அமைதி காத்தேன். அவரைப் பற்றி நான் அறிந்திருந்தவை என்னைச் சற்று நேரத்திற்குமேல் சும்மா இருக்க விடவில்லை. எனவே, “அல்லாஹ்வின் தூதரே! அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)?. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஒரு முஃமின் என நான் கருதுகிறேன்” என்று (மீண்டும்) கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மறுபடியும்), “அவரை முஸ்லிம் என்று சொல்லுங்கள்!” என்றார்கள். சற்றே அமைதி காத்தேன். அவரைப் பற்றி நான் அறிந்திருந்தவை என்னைச் சற்று நேரத்திற்குமேல் சும்மா இருக்க விடவில்லையாதலால் (மீண்டும்), “அல்லாஹ்வின் தூதரே! அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)?. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஒரு முஃமின் என நான் கருதுகிறேன்” என்றேன். “அவரை முஸ்லிம் என்று சொல்லுங்கள்! நான் அதிகம் விரும்புகின்ற ஒருவரை விடுத்து வேறொருவருக்குக் (காரணத்தோடுதான்) கொடுக்கிறேன். ஏனெனில், (வறுமையினால் குற்றமிழைத்து) அவர் நரகத்தில் முகம் குப்புற வீழ்த்தப்படுவாரோ எனும் அச்சத்தினால்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி).

குறிப்பு:

இதே ஹதீஸ், இபுனு ஷிஹாப் (ரஹ்) வழி அறிவிப்பில், “அந்தப் பங்கீட்டின்போது அக்குழுவினரோடு நானும் அமர்ந்திருந்தேன். ஒருவருக்கு எதுவும் வழங்காததால் நான் எழுந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அருகில் சென்று, அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி) என்று இரகசியமாகக் கேட்டேன்” என்று ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) கூறிய கூடுதல் செய்தியுடன் பதிவாகியுள்ளது.

இஸ்மாயீல் பின் முஹம்மது (ரஹ்) வழி அறிவிப்பில், மும்முறை சலிக்காமல் சமாதானம் கூறிய பிறகும் ஸஅத் (ரலி) தன் கருத்தை மீண்டும் வலியுறுத்தியபோது நபி (ஸல்) ஸஅத் (ரலி) அவர்களது அடிப்பிடரியில் ஒரு தட்டு தட்டி, “சண்டைக்கு வருகிறீர்களா ஸஅதே! நான் அதிகம் விரும்புகின்ற ஒருவரை விடுத்து வேறொருவருக்குக் கொடுக்கிறேனென்றால் …” என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 68, ஹதீஸ் எண்: 214

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பங்கிட்டுக் கொண்டிருந்த ஒரு பங்கீட்டின்போது, “அல்லாஹ்வின் தூதரே! அவருக்குக் கொடுங்கள். அவர் ஒரு முஃமின்” என்று (ஒருவரைச் சுட்டிச்) சொன்னேன். “அவரை முஸ்லிம் என்று சொல்லுங்கள்” என்று நபி (ஸல்) (திருத்தம்) கூறினார்கள். நான் கூறியதையே மும்முறை கூறினேன். நபி (ஸல்) அவர்களும் திருத்தியதைப் போன்றே மும்முறை திருத்தினார்கள். பின்னர், “நான் அதிகம் விரும்புகின்ற ஒருவரை விடுத்து வேறொருவருக்குக் (காரணத்தோடுதான்) கொடுக்கிறேன். ஏனெனில், (வறுமையினால் குற்றமிழைத்து, அதனால்) அவரை அல்லாஹ் நரகத்தில் குப்புறத் தள்ளி விடுவானோ எனும் அச்சத்தினால்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி).