அத்தியாயம்: 1, பாடம்: 70, ஹதீஸ் எண்: 219

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏صَالِحِ بْنِ صَالِحٍ الْهَمْدَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏قَالَ ‏ ‏رَأَيْتُ رَجُلًا مِنْ أَهْلِ ‏ ‏خُرَاسَانَ ‏ ‏سَأَلَ ‏ ‏الشَّعْبِيَّ ‏ ‏فَقَالَ يَا ‏ ‏أَبَا عَمْرٍو ‏ ‏إِنَّ مَنْ قِبَلَنَا مِنْ أَهْلِ ‏ ‏خُرَاسَانَ ‏ ‏يَقُولُونَ فِي الرَّجُلِ إِذَا أَعْتَقَ أَمَتَهُ ثُمَّ تَزَوَّجَهَا فَهُوَ كَالرَّاكِبِ ‏ ‏بَدَنَتَهُ ‏ ‏فَقَالَ ‏ ‏الشَّعْبِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو بُرْدَةَ بْنُ أَبِي مُوسَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏ثَلَاثَةٌ يُؤْتَوْنَ أَجْرَهُمْ مَرَّتَيْنِ رَجُلٌ مِنْ ‏ ‏أَهْلِ الْكِتَابِ ‏ ‏آمَنَ بِنَبِيِّهِ وَأَدْرَكَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَآمَنَ بِهِ وَاتَّبَعَهُ وَصَدَّقَهُ فَلَهُ أَجْرَانِ وَعَبْدٌ مَمْلُوكٌ أَدَّى حَقَّ اللَّهِ تَعَالَى وَحَقَّ سَيِّدِهِ فَلَهُ أَجْرَانِ وَرَجُلٌ كَانَتْ لَهُ أَمَةٌ فَغَذَّاهَا فَأَحْسَنَ غِذَاءَهَا ثُمَّ أَدَّبَهَا فَأَحْسَنَ أَدَبَهَا ثُمَّ أَعْتَقَهَا وَتَزَوَّجَهَا فَلَهُ أَجْرَانِ ‏
‏ثُمَّ ‏ ‏قَالَ ‏ ‏الشَّعْبِيُّ ‏ ‏لِلْخُرَاسَانِيِّ ‏ ‏خُذْ هَذَا الْحَدِيثَ بِغَيْرِ شَيْءٍ فَقَدْ كَانَ الرَّجُلُ يَرْحَلُ فِيمَا دُونَ هَذَا إِلَى ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏صَالِحِ بْنِ صَالِحٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ ‏

“மூன்று வகையினர் (அல்லாஹ்விடமிருந்து) இரட்டிப்பு நன்மைகள் வழங்கப் படுவார்கள்:

வேதக்கார(யூத, கிருஸ்துவ)ர்களில் ஒருவராக இருந்து கொண்டு, தம்முடைய இறைத்தூதரையும் நம்பி, எனது காலத்தை அடைந்தபோது என்னையும் நம்பி, பின்பற்றி, மெய்ப்படுத்தியவருக்கு இரட்டிப்பு நன்மைகள் உள்ளன.

ஒரு தலைவருக்கு அடிமையாக இருந்து கொண்டு, அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் தன் தலைவருக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றியவருக்கும் இரட்டிப்பு நன்மைகள் உள்ளன.

தம் அதிகாரத்தில் இருந்த அடிமைப் பெண்ணுக்கு நிறைவாக உணவளித்து, அவளுக்கு நற்குணங்களைச் சிறப்பாகக் கற்றுக் கொடுத்து, பிறகு அவளை அடிமைத் தளையிலிருந்து விடுதலை செய்து தாமே மணந்தும் கொண்டாரெனில் அவருக்கும் இரட்டிப்பு நன்மைகள் உள்ளன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா (ரலி).

குறிப்பு:

குராசான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்களிடம், “அபூஅம்ரே! ‘தம்முடைய அடிமைப் பெண்ணை விடுதலை செய்து அவளைத் தாமே மணந்து கொள்ளும் ஒருவர் தமது சொந்த ஒட்டகத்திலேயே பயணிக்கும் ஒரு (சாதாரணப்) பயணியைப் போன்றவர். (அவருக்கு அதற்காகத் தனியான நன்மை ஏதுமில்லை)’ என எங்கள் குராசான் பகுதியைச் சேர்ந்த சிலர் கூறுகின்றனரே?” என்று கேட்டார். அதற்கு பதிலளிக்கும் முகமாக ஷஅபீ (ரஹ்) அவர்கள், “அபூபுர்தா பின் அபீமூசா (ரஹ்) அவர்கள் தம் தந்தை அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாக எனக்கு அறிவித்தார்கள் …” எனத் தொடங்கி மேற்காணும் ஹதீஸை அறிவித்து விட்டு, “(செலவு) ஏதுமின்றி (உங்களுக்கு நான் அறிவித்த) இந்த ஹதீஸைப் பெற்று(ப் பாதுகாத்து)க் கொள்ளுங்கள். ஏனெனில், இதைவிடச் சிறிய விஷயங்களை அறிந்து கொள்வதற்காகச் சிலர் (வெகுதொலைவிலிருந்து நிறையச் செலவழித்துக் கொண்டு) மதீனாவரை பயணம் செய்ததுண்டு” என்றார்கள்.

அத்தியாயம்: 1, பாடம்: 70, ஹதீஸ் எண்: 218

حَدَّثَنِي ‏ ‏يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ وَأَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا يُونُسَ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏
‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ وَالَّذِي نَفْسُ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏بِيَدِهِ ‏ ‏لَا يَسْمَعُ بِي أَحَدٌ مِنْ هَذِهِ الْأُمَّةِ يَهُودِيٌّ وَلَا نَصْرَانِيٌّ ثُمَّ يَمُوتُ وَلَمْ يُؤْمِنْ بِالَّذِي أُرْسِلْتُ بِهِ إِلَّا كَانَ مِنْ أَصْحَابِ النَّار

“முஹம்மதின் உயிரைக் கைவசம் வைத்திருப்பவன் மீதாணை! இந்த (இறுதி)ச் சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்துவரோ யாரேனும் ஒருவர் என்(மார்க்கத்தி)னைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும், நான் கொண்டு வந்த(மார்க்கத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இறந்து விட்டால், அவர் நரகவாசிகளில் ஒருவராகவே இருப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 70, ஹதீஸ் எண்: 217

َدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَا مِنْ الْأَنْبِيَاءِ مِنْ نَبِيٍّ إِلَّا قَدْ أُعْطِيَ مِنْ الْآيَاتِ مَا مِثْلُهُ آمَنَ عَلَيْهِ الْبَشَرُ وَإِنَّمَا كَانَ الَّذِي أُوتِيتُ وَحْيًا أَوْحَى اللَّهُ إِلَيَّ فَأَرْجُو أَنْ أَكُونَ أَكْثَرَهُمْ تَابِعًا يَوْمَ الْقِيَامَة

“அற்புதங்கள் வழங்கப் படாத நபிமார்கள் இல்லை. அவ்வற்புதங்களைக் கண்ணுற்ற மனிதர்கள் (நபிமார்கள் கூறியவற்றை) நம்பினர். அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பான வஹீயைத்தான் எனக்கான அற்புதமாக வழங்கப் பட்டிருக்கிறேன். ஆகவே, இறைத்தூதர்களுள் அதிகமானவர்களால் பின்பற்றப்பட்டவனாக மறுமை நாளில் நான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)