அத்தியாயம்: 1, பாடம்: 72, ஹதீஸ் எண்: 229

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لَأَبِي كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ التَّيْمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏قَالَ ‏
‏دَخَلْتُ الْمَسْجِدَ وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏جَالِسٌ فَلَمَّا غَابَتْ الشَّمْسُ قَالَ يَا ‏ ‏أَبَا ذَرٍّ ‏ ‏هَلْ تَدْرِي أَيْنَ تَذْهَبُ هَذِهِ قَالَ قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ ‏ ‏فَإِنَّهَا تَذْهَبُ فَتَسْتَأْذِنُ فِي السُّجُودِ فَيُؤْذَنُ لَهَا وَكَأَنَّهَا قَدْ قِيلَ لَهَا ارْجِعِي مِنْ حَيْثُ جِئْتِ فَتَطْلُعُ مِنْ مَغْرِبِهَا قَالَ ثُمَّ قَرَأَ فِي قِرَاءَةِ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏وَذَلِكَ مُسْتَقَرٌّ لَهَا

(ஒரு நாள்) நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தபோது அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். சூரியன் மறைந்த போது (என்னிடம்) அவர்கள், “இந்தச் சூரியன் எங்குச் செல்கிறது என்று உமக்குத் தெரியுமா, அபூதர்?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று கூறினேன். அப்போது அவர்கள், “அது (இறை அரியாசனத்துக்குக் கீழே) சென்று தலைவணங்குவதற்கு அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதனிடம், ‘நீ வந்த இடத்துக்குத் திரும்பிச் செல்’ என்று கூறப்பட்டுக் கொண்டிருக்கிறது. (இறுதியாக ஒரு நாள்) அது மேற்கிலிருந்து உதயமாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர் அல்-கிஃபாரீ (ரலி).

குறிப்பு:

இதை அறிவித்து விட்டு, (குர்ஆனில் ‘வஷ்ஷம்சு தஜ்ரீ லி முஸ்தகர்ரின் லஹா’ என்று இடம்பெற்றுள்ள 36:38 ஆவது வசனத்தை) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களது முறையில், ‘வ தாலிக முஸ்தகர்ருன் லஹா’ (அது நிலைகொள்ளும் இடம் அதுவே) என்று அபூதர் (ரலி) ஓதிக் காட்டினார்கள்.

Share this Hadith:

Leave a Comment