அத்தியாயம்: 1, பாடம்: 74, ஹதீஸ் எண்: 234

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ سَلَمَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ثَابِتٌ الْبُنَانِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أُتِيتُ بِالْبُرَاقِ وَهُوَ دَابَّةٌ أَبْيَضُ طَوِيلٌ فَوْقَ الْحِمَارِ وَدُونَ الْبَغْلِ يَضَعُ حَافِرَهُ عِنْدَ مُنْتَهَى طَرْفِهِ قَالَ فَرَكِبْتُهُ حَتَّى أَتَيْتُ ‏ ‏بَيْتَ الْمَقْدِسِ ‏ ‏قَالَ فَرَبَطْتُهُ بِالْحَلْقَةِ الَّتِي يَرْبِطُ بِهِ الْأَنْبِيَاءُ قَالَ ثُمَّ دَخَلْتُ الْمَسْجِدَ فَصَلَّيْتُ فِيهِ رَكْعَتَيْنِ ثُمَّ خَرَجْتُ فَجَاءَنِي ‏ ‏جِبْرِيلُ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏بِإِنَاءٍ مِنْ خَمْرٍ وَإِنَاءٍ مِنْ لَبَنٍ فَاخْتَرْتُ اللَّبَنَ فَقَالَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اخْتَرْتَ الْفِطْرَةَ ثُمَّ ‏ ‏عَرَجَ ‏ ‏بِنَا إِلَى السَّمَاءِ فَاسْتَفْتَحَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏فَقِيلَ مَنْ أَنْتَ قَالَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ بُعِثَ إِلَيْهِ فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا ‏ ‏بِآدَمَ ‏ ‏فَرَحَّبَ بِي وَدَعَا لِي بِخَيْرٍ ثُمَّ عَرَجَ بِنَا إِلَى السَّمَاءِ الثَّانِيَةِ فَاسْتَفْتَحَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَقِيلَ مَنْ أَنْتَ قَالَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ بُعِثَ إِلَيْهِ فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا بِابْنَيْ الْخَالَةِ ‏ ‏عِيسَى ابْنِ مَرْيَمَ ‏ ‏وَيَحْيَى بْنِ زَكَرِيَّاءَ ‏ ‏صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِمَا فَرَحَّبَا وَدَعَوَا لِي بِخَيْرٍ ثُمَّ عَرَجَ بِي إِلَى السَّمَاءِ الثَّالِثَةِ فَاسْتَفْتَحَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏فَقِيلَ مَنْ أَنْتَ قَالَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ بُعِثَ إِلَيْهِ فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا ‏ ‏بِيُوسُفَ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا هُوَ قَدْ أُعْطِيَ ‏ ‏شَطْرَ ‏ ‏الْحُسْنِ فَرَحَّبَ وَدَعَا لِي بِخَيْرٍ ثُمَّ عَرَجَ بِنَا إِلَى السَّمَاءِ الرَّابِعَةِ فَاسْتَفْتَحَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏قِيلَ مَنْ هَذَا قَالَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏قَالَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ بُعِثَ إِلَيْهِ فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا ‏ ‏بِإِدْرِيسَ ‏ ‏فَرَحَّبَ وَدَعَا لِي بِخَيْرٍ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏
‏وَرَفَعْنَاهُ مَكَانًا عَلِيًّا ‏

‏ثُمَّ عَرَجَ بِنَا إِلَى السَّمَاءِ الْخَامِسَةِ فَاسْتَفْتَحَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏قِيلَ مَنْ هَذَا قَالَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ بُعِثَ إِلَيْهِ فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا ‏ ‏بِهَارُونَ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَرَحَّبَ وَدَعَا لِي بِخَيْرٍ ثُمَّ عَرَجَ بِنَا إِلَى السَّمَاءِ السَّادِسَةِ فَاسْتَفْتَحَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏قِيلَ مَنْ هَذَا قَالَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ بُعِثَ إِلَيْهِ فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا ‏ ‏بِمُوسَى ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَرَحَّبَ وَدَعَا لِي بِخَيْرٍ ثُمَّ عَرَجَ إِلَى السَّمَاءِ السَّابِعَةِ فَاسْتَفْتَحَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏فَقِيلَ مَنْ هَذَا قَالَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ بُعِثَ إِلَيْهِ فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا ‏ ‏بِإِبْرَاهِيمَ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُسْنِدًا ظَهْرَهُ إِلَى ‏ ‏الْبَيْتِ الْمَعْمُورِ ‏ ‏وَإِذَا هُوَ يَدْخُلُهُ كُلَّ يَوْمٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ لَا يَعُودُونَ إِلَيْهِ ثُمَّ ذَهَبَ بِي إِلَى السِّدْرَةِ الْمُنْتَهَى وَإِذَا وَرَقُهَا كَآذَانِ الْفِيَلَةِ وَإِذَا ثَمَرُهَا كَالْقِلَالِ قَالَ فَلَمَّا ‏ ‏غَشِيَهَا ‏ ‏مِنْ أَمْرِ اللَّهِ مَا غَشِيَ تَغَيَّرَتْ فَمَا أَحَدٌ مِنْ خَلْقِ اللَّهِ يَسْتَطِيعُ أَنْ ‏ ‏يَنْعَتَهَا ‏ ‏مِنْ حُسْنِهَا فَأَوْحَى اللَّهُ إِلَيَّ مَا أَوْحَى فَفَرَضَ عَلَيَّ خَمْسِينَ صَلَاةً فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ فَنَزَلْتُ إِلَى ‏ ‏مُوسَى ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ مَا فَرَضَ رَبُّكَ عَلَى أُمَّتِكَ قُلْتُ خَمْسِينَ صَلَاةً قَالَ ارْجِعْ إِلَى رَبِّكَ فَاسْأَلْهُ التَّخْفِيفَ فَإِنَّ أُمَّتَكَ لَا يُطِيقُونَ ذَلِكَ فَإِنِّي قَدْ ‏ ‏بَلَوْتُ ‏ ‏بَنِي إِسْرَائِيلَ ‏ ‏وَخَبَرْتُهُمْ قَالَ فَرَجَعْتُ إِلَى رَبِّي فَقُلْتُ يَا رَبِّ خَفِّفْ عَلَى أُمَّتِي فَحَطَّ عَنِّي خَمْسًا فَرَجَعْتُ إِلَى ‏ ‏مُوسَى ‏ ‏فَقُلْتُ حَطَّ عَنِّي خَمْسًا قَالَ إِنَّ أُمَّتَكَ لَا يُطِيقُونَ ذَلِكَ فَارْجِعْ إِلَى رَبِّكَ فَاسْأَلْهُ التَّخْفِيفَ قَالَ فَلَمْ أَزَلْ أَرْجِعُ بَيْنَ رَبِّي تَبَارَكَ وَتَعَالَى وَبَيْنَ ‏ ‏مُوسَى ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏حَتَّى قَالَ يَا ‏ ‏مُحَمَّدُ ‏ ‏إِنَّهُنَّ خَمْسُ صَلَوَاتٍ كُلَّ يَوْمٍ وَلَيْلَةٍ لِكُلِّ صَلَاةٍ عَشْرٌ فَذَلِكَ خَمْسُونَ صَلَاةً وَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كُتِبَتْ لَهُ حَسَنَةً فَإِنْ عَمِلَهَا كُتِبَتْ لَهُ عَشْرًا وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا لَمْ تُكْتَبْ شَيْئًا فَإِنْ عَمِلَهَا كُتِبَتْ سَيِّئَةً وَاحِدَةً قَالَ فَنَزَلْتُ حَتَّى انْتَهَيْتُ إِلَى ‏ ‏مُوسَى ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَخْبَرْتُهُ فَقَالَ ارْجِعْ إِلَى رَبِّكَ فَاسْأَلْهُ التَّخْفِيفَ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقُلْتُ قَدْ رَجَعْتُ إِلَى رَبِّي حَتَّى اسْتَحْيَيْتُ مِنْهُ

(எனது விண்ணேற்றப் பயணத்திற்காக) நாட்டுக்கழுதைக்கும் கோவேறுக்கழுதைக்கும் இடைப்பட்ட உருவத்தில், வெள்ளை நிறமுடைய, பார்வை எட்டுகிற தூரத்திற்குத் தனது காலைத் தூக்கி ஓர் எட்டு வைக்கும், ‘புராக்’ எனும் உயரமான ஒரு (மின்னல் வேக) வாகனம் அளிக்கப் பட்டேன். அதிலேறி நான் (ஜெரூசலேத்திலுள்ள இறையாலயம்) பைத்துல் மக்திஸ்வரை சென்றேன். பிறகு இறைத்தூதர்கள் தமது வாகனத்தைக் கட்டி வைக்கும் வளையத்தில் எனது வாகனத்தைக் கட்டி வைத்து விட்டு, அந்த இறையாலத்திற்குள் நுழைந்து இரண்டு ரக்அத்கள் தொழுதேன். பிறகு நான் அங்கிருந்து புறப்படும்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (என்னிடம்) ஒரு பாத்திரத்தில் மதுவும் மற்றொரு பாத்திரத்தில் பாலும் (எனக்காகக்) கொண்டு வந்தார். நான் பாலைத் தேர்ந்தெடுத்தபோது, “இயற்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்” என்று ஜிப்ரீல் கூறினார்.

பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக் கொண்டு முதல் வானத்திற்கு உயர்ந்து, அதைத் திறக்குமாறு பணித்தார். அப்போது, “நீங்கள் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மத்” என்று பதிலளித்தார். “அவர் அழைக்கப் பட்டாரா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம், அவர் அழைக்கப் பட்டார்” என்றார். எங்களுக்காக (முதல் வானம்) திறக்கப்பட்டது. நான் அங்கு (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களைக் கண்டேன். அவர்கள் என்னை வாழ்த்தி வரவேற்று, எனது நன்மைக்காகப் பிரார்த்தித்தார்கள்.

பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக் கொண்டு இரண்டாம் வானத்துக்கு உயர்ந்து, அதைத் திறக்குமாறு பணித்தார். அப்போது, “நீங்கள் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மத்” என்று பதிலளித்தார். “அவர் அழைக்கப் பட்டாரா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம், அவர் அழைக்கப் பட்டார்” என்றார். எங்களுக்காக (இரண்டாம் வானம்) திறக்கப்பட்டது. அங்கு, பெரியன்னை-சிற்றன்னையின் மகன்களான ஈஸா பின் மர்யம் (அலை), யஹ்யா பின் ஸகரிய்யா (அலை) ஆகிய இரு சகோதரர்களைக் கண்டேன். அவர்கள் இருவரும் என்னை வரவேற்று, எனது நன்மைக்காகப் பிரார்த்தித்தனர்.

பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக் கொண்டு மூன்றாம் வானத்துக்கு உயர்ந்து, அதைத் திறக்குமாறு பணித்தார். அப்போது, “நீங்கள் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மத்” என்று பதிலளித்தார். “அவர் அழைக்கப் பட்டாரா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம், அவர் அழைக்கப் பட்டார்” என்றார். எங்களுக்காக (மூன்றாம் வானம்) திறக்கப்பட்டது. அங்கு, பேரழகு வழங்கப்பட்ட யூஸுஃப் (அலை) அவர்களைக் கண்டேன். அன்னாரும் என்னை வரவேற்று, எனது நன்மைக்காகப் பிரார்த்தித்தார்கள்.

பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக் கொண்டு நான்காம் வானத்துக்கு உயர்ந்து, அதைத் திறக்குமாறு பணித்தார். அப்போது, “நீங்கள் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மத்” என்று பதிலளித்தார். “அவர் அழைக்கப் பட்டாரா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம், அவர் அழைக்கப் பட்டார்” என்றார். எங்களுக்காக (நான்காம் வானம்) திறக்கப்பட்டது. அங்கு, “மேலும், நாம் அவரை உயர்வான ஓர் இடதுக்கு உயர்த்தினோம்” (19:57) என்று அல்லாஹ் (சிறப்பித்துக்) கூறுகின்ற இத்ரீஸ் (அலை) அவர்களைக் கண்டேன். அவர்கள் (என்னை) வரவேற்று, எனது நன்மைக்காகப் பிரார்த்தித்தார்கள்.

பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக் கொண்டு ஐந்தாம் வானத்துக்கு உயர்ந்து, அதைத் திறக்குமாறு பணித்தார். அப்போது, “நீங்கள் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மத்” என்று பதிலளித்தார். “அவர் அழைக்கப் பட்டாரா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம், அவர் அழைக்கப் பட்டார்” என்றார். எங்களுக்காக (ஐந்தாம் வானம்) திறக்கப்பட்டது. அங்கு நான் ஹாரூன் (அலை) அவர்களைக் கண்டேன். அவர்கள் என்னை வரவேற்று, எனது நன்மைக்காகப் பிரார்த்தித்தார்கள்.

பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக் கொண்டு ஆறாம் வானத்துக்கு உயர்ந்து, அதைத் திறக்குமாறு பணித்தார். அப்போது, “நீங்கள் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மத்” என்று பதிலளித்தார். “அவர் அழைக்கப் பட்டாரா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம், அவர் அழைக்கப் பட்டார்” என்றார். எங்களுக்காக (ஆறாம் வானம்) திறக்கப்பட்டது. அங்கு நான் மூஸா (அலை) அவர்களைக் கண்டேன். அவர்கள் (என்னை) வரவேற்று, எனது நன்மைக்காகப் பிரார்த்தித்தார்கள்.

பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக் கொண்டு ஏழாம் வானத்துக்கு உயர்ந்து, அதைத் திறக்குமாறு பணித்தார். அப்போது, “நீங்கள் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மத்” என்று பதிலளித்தார். “அவர் அழைக்கப் பட்டாரா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம், அவர் அழைக்கப் பட்டார்” என்றார். எங்களுக்காக (ஏழாம் வானம்) திறக்கப்பட்டது. அங்கு நான் இப்ராஹீம் (அலை) அவர்களை, அல்-பைத்துல் மஅமூர் எனும் (சிறப்புமிகு) இல்லத்தில் தமது முதுகைச் சாய்த்து அமர்ந்திருக்கக் கண்டேன். (இறைவனை வணங்க) அந்த இல்லத்தினுள் ஒவ்வொரு நாளும் (வந்து) நுழையும் எழுபதாயிரம் வானவர்களுள் ஒருமுறை வருபவர் மறுமுறை வரார்.

அதன் பின்னர், (வானின் உயரெல்லையில் உள்ள) ‘சித்ரத்துல் முன்தஹா’ எனும் இடத்திற்கு என்னை ஜிப்ரீல் அழைத்துச் சென்றார். அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போன்றும் அதன் பழங்கள் கூஜாக்களைப் போன்றும் தோன்றின. அல்லாஹ்வின் கட்டளையால் விவரிக்க முடியாத வண்ணங்கள் அதைச் சூழ்ந்து கொண்டபோது அது (வினோதமாக) மாறிப் போனது. அல்லாஹ்வின் படைப்புகளில் எவராலும் அதன் அழகை விவரித்துக் கூற முடியாது. அப்போது அறிவிக்க வேண்டியவற்றை அல்லாஹ் எனக்கு அறிவித்தான். (ஒரு நாளின்) இரவிலும் பகலிலும் என்மீது ஐம்பது தொழுகைகளைக் கடமையாக்கினான்.

பிறகு நான் மூஸா(அலை) அவர்களிடம் இறங்கி வந்தேன். அப்போது அவர்கள், “உங்கள் சமுதாயத்தாருக்கு உம்முடைய இறைவன் என்ன கடமையாக்கினான்?” என்று கேட்டார்கள். “ஐம்பது (வேளைத்) தொழுகைகளை” என்று நான் பதிலளித்தேன். “உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று (எண்ணிக்கையைக் குறைத்து) இலேசாக்கும்படி வேண்டுங்கள். ஏனெனில், உங்கள் சமுதாயத்தார் இதைத் தாங்கமாட்டார்கள். நான் இஸ்ராயீல் மக்களிடம் பழகி அனுபவப்பட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள். நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்று, “என் இறைவா! என் சமுதாயத்தாருக்கு (தொழுகைகளின் எண்ணிக்கையைக் குறைத்து) இலேசாக்குவாயாக!” என்று கேட்டேன். இறைவன் (ஐம்பதிலிருந்து) ஐந்தைக் குறைத்தான். நான் மூஸா (அலை) அவர்களிடம் திரும்பி வந்து, “(ஐம்பதிலிருந்து) ஐந்தை எனக்குக் குறைத்தான்” என்று கூறினேன். அப்போது அவர்கள், “உங்கள் சமுதாயத்தார் இதையும் தாங்க மாட்டார்கள். எனவே, உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று இன்னும் (குறைத்து) இலேசாக்கும்படிக் கேளுங்கள்” என்றார்கள். அவ்வாறே நான், நற்பேறுகளுக்கு உரியவனும் மிக்குயர்ந்தோனுமாகிய என் இறைவனுக்கும் மூஸா (அலை) அவர்களுக்குமிடையே போய்-வந்து கொண்டிருந்தேன்.

இறுதியாக, “முஹம்மதே! (ஒரு நாளின்) இரவிலும் பகலிலும் ஐவேளைத் தொழுகைகள் (உம் சமுதாயத்தார் மீது கடமை) ஆகும். ஒவ்வொரு தொழுகைக்கும் பத்து (நன்மைகள்) உள்ளன. இவை ஐம்பது வேளைத் தொழுகை(களின் நன்மை)களுக்குச் சமமானவை. ஒருவர், ஒரு நன்மை செய்ய வேண்டும் என (மனதில்) எண்ணிவிட்டாலே, அதைச் செயல்படுத்தாவிட்டாலும் அவருக்காக ஒரு நன்மை பதிவு செய்யப்படும். அதை அவர் செய்து முடித்து விட்டால், அவருக்காகப் பத்து நன்மைகள் பதிவு செய்யப்படும். ஒருவர் ஒரு தீமையைச் செய்ய எண்ணி, அதைச் செய்யாமல் இருந்து விட்டால் (குற்றம்) எதுவும் பதியப்படுவதில்லை. (எண்ணியபடி) அதை அவர் செய்து முடித்து விட்டால் ஒரு குற்றமாகவே அது பதிவு செய்யப்படும்” என்று அல்லாஹ் கூறினான்.

பின்னர் நான் அங்கிருந்து மூஸா(அலை) அவர்களிடம் வந்து, நடந்ததைத் தெரிவித்தேன். அப்போது அவர்கள், “உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று இன்னும் (குறைத்து) இலேசாக்கும்படிக் கேளுங்கள்” என்று கூறினார்கள். “நான் வெட்கப்படும் அளவுக்கு என் இறைவனிடம் போய் வந்து விட்டேன் என்று மூஸா (அலை) அவர்களிடம் சொல்லி விட்டேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்.

அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரலி).

Share this Hadith:

Leave a Comment