அத்தியாயம்: 1, பாடம்: 75, ஹதீஸ் எண்: 247

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ إِسْحَقَ الْمُسَيَّبِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَنَسٌ يَعْنِي ابْنَ عِيَاضٍ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى وَهُوَ ابْنُ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏
‏ذَكَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمًا بَيْنَ ظَهْرَانَيْ النَّاسِ ‏ ‏الْمَسِيحَ الدَّجَّالَ ‏ ‏فَقَالَ ‏ ‏إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى لَيْسَ بِأَعْوَرَ أَلَا إِنَّ ‏ ‏الْمَسِيحَ الدَّجَّالَ ‏ ‏أَعْوَرُ عَيْنِ الْيُمْنَى كَأَنَّ عَيْنَهُ عِنَبَةٌ ‏ ‏طَافِيَةٌ ‏ ‏قَالَ وَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَرَانِي اللَّيْلَةَ فِي الْمَنَامِ عِنْدَ ‏ ‏الْكَعْبَةِ ‏ ‏فَإِذَا رَجُلٌ آدَمُ كَأَحْسَنِ مَا ‏ ‏تَرَى مِنْ أُدْمِ الرِّجَالِ تَضْرِبُ لِمَّتُهُ بَيْنَ مَنْكِبَيْهِ رَجِلُ الشَّعْرِ يَقْطُرُ رَأْسُهُ مَاءً وَاضِعًا يَدَيْهِ عَلَى مَنْكِبَيْ رَجُلَيْنِ وَهُوَ بَيْنَهُمَا يَطُوفُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏فَقُلْتُ مَنْ هَذَا فَقَالُوا ‏ ‏الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ ‏ ‏وَرَأَيْتُ وَرَاءَهُ رَجُلًا جَعْدًا قَطَطًا أَعْوَرَ عَيْنِ الْيُمْنَى كَأَشْبَهِ مَنْ رَأَيْتُ مِنْ النَّاسِ ‏ ‏بِابْنِ قَطَنٍ ‏ ‏وَاضِعًا يَدَيْهِ عَلَى مَنْكِبَيْ رَجُلَيْنِ يَطُوفُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏فَقُلْتُ مَنْ هَذَا قَالُوا هَذَا ‏ ‏الْمَسِيحُ الدَّجَّالُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருநாள் மக்களிடையே தஜ்ஜால் மஸீஹை நினனவுகூர்ந்தபோது, “அல்லாஹ், ஒற்றைக் கண்ணன் அல்லன். ஆனால், தஜ்ஜால் மஸீஹ் வலக்கண் குருடன். அவனுடைய கண், (குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருக்கும்” என்று கூறினார்கள்.

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

“இரவின் கனவில் கஅபாவின் அருகே என்னை நான் கண்டேன். நீ கண்ட மனிதர்களின் மாநிலறத்திலேயே மிக அழகான மாநிறம் கொண்ட ஒருவர் அங்கிருந்தார். அவரது தலைமுடி அவருடைய தோள்களுக்கிடையே தொங்கிக் கொண்டிருந்தது. இருவரது தோள்கள் மீது அவர் தம் இரு கைகளையும் வைத்துக் கொண்டு கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து கொண்டிருந்தார். இவர் யார்? என்று நான் கேட்டேன். மர்யமின் மைந்தர் மஸீஹ் (ஈஸா) என்று பதிலளித்தார்கள். அவருக்குப் பின்னால் பரட்டை முடியுடன், வலக்கண் குருடான ஒருவனைக் கண்டேன். நான் பார்த்த மனிதர்களிலேயே இப்னு கத்தனின் சாயலை அவன் ஒத்திருந்தான். அவனும் இருவரது தோள்கள் மீது தன் கரங்களை வைத்துக் கொண்டு இறையில்லம் கஅபாவைச் சுற்றிக் கொண்டிருந்தான். இவன் யார்? என்று நான் கேட்டேன். இவன் தஜ்ஜால் மஸீஹ் என்று பதிலளித்தார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

Share this Hadith:

Leave a Comment