அத்தியாயம்: 1, பாடம்: 76, ஹதீஸ் எண்: 255

‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ الشَّيْبَانِيِّ ‏ ‏سَمِعَ ‏ ‏زِرَّ بْنَ حُبَيْشٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏

‏قَالَ ‏‏لَقَدْ رَأَى مِنْ آيَاتِ رَبِّهِ الْكُبْرَى ‏

– ‏قَالَ ‏ ‏رَأَى ‏ ‏جِبْرِيلَ ‏ ‏فِي صُورَتِهِ لَهُ سِتُّ مِائَةِ جَنَاحٍ

“உறுதியாக அவர் தம் இறைவனின் சான்றுகளில் மிகப் பெரிய சான்றைக் கண்டார்” எனும் (53:18 ஆவது) வசனத்திற்கு, “அறுநூறு இறக்கைகளைக் கொண்டவராக ஜிப்ரீல் (அலை) அவர்களை, (அவரது நிஜத் தோற்றத்தில்) நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள்” என்பது பொருளாகும்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறியதாக ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்).

அத்தியாயம்: 1, பாடம்: 76, ஹதீஸ் எண்: 254

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصُ بْنُ غِيَاثٍ ‏ ‏عَنْ ‏ ‏الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏زِرٍّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏

‏قَالَ ‏‏مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَى ‏

– ‏قَالَ ‏ ‏رَأَى ‏ ‏جِبْرِيلَ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏لَهُ سِتُّ مِائَةِ جَنَاحٍ

“(தாம்) கண்டதைப் பற்றி (நபியுடைய) உள்ளம் பொய்யுரைக்கவில்லை” எனும் (53:11 ஆவது) வசனத்திற்கு, “அறுநூறு இறக்கைகளைக் கொண்டவராக ஜிப்ரீல் (அலை) அவர்களை, (அவரது நிஜத் தோற்றத்தில்) நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள்” என்பது பொருளாகும்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறியதாக ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்).

அத்தியாயம்: 1, பாடம்: 76, ஹதீஸ் எண்: 253

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبَّادٌ وَهُوَ ابْنُ الْعَوَّامِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الشَّيْبَانِيُّ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏زِرَّ بْنَ حُبَيْشٍ ‏ ‏عَنْ قَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ ‏

‏فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى ‏ – ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏ابْنُ مَسْعُودٍ ‏ ‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَأَى ‏ ‏جِبْرِيلَ ‏ ‏لَهُ سِتُّ مِائَةِ جَنَاحٍ

“(வளைந்த) வில்லின் இரு முனைகளுக்கிடையிலான அல்லது அதைவிடக் குறைந்த (இடைவெளியில் அவரது) நெருக்கம் இருந்தது” எனும் (53:9 ஆவது) வசனத்திற்கு, “அறுநூறு இறக்கைகளைக் கொண்டவராக ஜிப்ரீல் (அலை) அவர்களை, (அவரது நிஜத் தோற்றத்தில்) நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள் என்பதே கருத்தாகும்”

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி).

குறிப்பு:

சுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) 53:9 ஆவது வசனத்திற்கு, ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்களிடம் விளக்கம் கோரியபோது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களது மேற்காணும் விளக்கத்தைத் தெரிவித்தார்.

அத்தியாயம்: 1, பாடம்: 76, ஹதீஸ் எண்: 252

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَالِكُ بْنُ مِغْوَلٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏وَأَلْفَاظُهُمْ مُتَقَارِبَةٌ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَالِكُ بْنُ مِغْوَلٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏طَلْحَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏

‏لَمَّا أُسْرِيَ بِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏انْتُهِيَ بِهِ إِلَى سِدْرَةِ الْمُنْتَهَى وَهِيَ فِي السَّمَاءِ السَّادِسَةِ إِلَيْهَا يَنْتَهِي مَا ‏ ‏يُعْرَجُ ‏ ‏بِهِ مِنْ الْأَرْضِ فَيُقْبَضُ مِنْهَا وَإِلَيْهَا يَنْتَهِي مَا يُهْبَطُ بِهِ مِنْ فَوْقِهَا فَيُقْبَضُ مِنْهَا قَالَ ‏ ‏إِذْ ‏ ‏يَغْشَى السِّدْرَةَ مَا ‏ ‏يَغْشَى ‏

‏قَالَ فَرَاشٌ مِنْ ذَهَبٍ قَالَ فَأُعْطِيَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثَلَاثًا أُعْطِيَ الصَّلَوَاتِ الْخَمْسَ وَأُعْطِيَ خَوَاتِيمَ سُورَةِ ‏ ‏الْبَقَرَةِ ‏ ‏وَغُفِرَ لِمَنْ لَمْ يُشْرِكْ بِاللَّهِ مِنْ أُمَّتِهِ شَيْئًا ‏ ‏الْمُقْحِمَاتُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (விண்ணேற்றப் பயணத்திற்காக) இரவில் அழைத்துச் செல்லப்பட்டபோது (வானங்களின் உயரெல்லையில் உள்ள இலந்தை மரமான) சித்ரத்துல் முன்தஹா வரை கொண்டு செல்லப்பட்டார்கள். அதன் அடிமுனை ஆறாம் வானத்தில் அமைந்துள்ளது. பூமியிலிருந்து மேலே கொண்டு செல்லப்படும் யாவும் அங்கு வைத்து ஒப்புக் கொடுக்கப் படுகின்றன. அதன் மேலேயிருந்து கீழே கொண்டு வரப்படும் (இறைக்கட்டளைகள்) யாவும் அங்கு வைத்து (வானவர்களால்) பெற்றுக் கொள்ளப்படுகின்றன.

அப்போது அல்லாஹ்வின் தூதர்( ஸல்) அவர்களுக்கு மூன்று (அருட்கொடைகள்) வழங்கப்பட்டன:

1. ஐவேளைத் தொழுகைகள்

2. அல்பகரா அத்தியாயத்தின் இறுதி (மூன்று) வசனங்கள்

3. அவர்களுடைய சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு இணையேதும் வைக்காதவர்களுக்குப் (பிற) பெரும்பாவங்களுக்கான மன்னிப்பு.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி).

குறிப்பு:

“ஸித்ரத்துல் முன்தஹா என்னும் அம்மரத்தை சூழ்ந்து கொண்டிருந்த வேளையில் …”

எனும் (53:16 ஆவது) வசனத்தில் உள்ள ‘சூழ்ந்து கொண்டிருப்பவை’ என்பன ‘பொன் விட்டில் பூச்சிகள்’ என்று அப்துல்லாஹ் பின் மஸ் ஊத் (ரலி) விளக்கம் கூறியிருக்கிறார்கள்.