அத்தியாயம்: 1, பாடம்: 76, ஹதீஸ் எண்: 253

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبَّادٌ وَهُوَ ابْنُ الْعَوَّامِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الشَّيْبَانِيُّ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏زِرَّ بْنَ حُبَيْشٍ ‏ ‏عَنْ قَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ ‏

‏فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى ‏ – ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏ابْنُ مَسْعُودٍ ‏ ‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَأَى ‏ ‏جِبْرِيلَ ‏ ‏لَهُ سِتُّ مِائَةِ جَنَاحٍ

“(வளைந்த) வில்லின் இரு முனைகளுக்கிடையிலான அல்லது அதைவிடக் குறைந்த (இடைவெளியில் அவரது) நெருக்கம் இருந்தது” எனும் (53:9 ஆவது) வசனத்திற்கு, “அறுநூறு இறக்கைகளைக் கொண்டவராக ஜிப்ரீல் (அலை) அவர்களை, (அவரது நிஜத் தோற்றத்தில்) நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள் என்பதே கருத்தாகும்”

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி).

குறிப்பு:

சுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) 53:9 ஆவது வசனத்திற்கு, ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்களிடம் விளக்கம் கோரியபோது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களது மேற்காணும் விளக்கத்தைத் தெரிவித்தார்.

Share this Hadith:

Leave a Comment