அத்தியாயம்: 1, பாடம்: 77, ஹதீஸ் எண்: 259

‏حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏دَاوُدَ ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏قَالَ ‏

‏كُنْتُ مُتَّكِئًا عِنْدَ ‏ ‏عَائِشَةَ ‏ ‏فَقَالَتْ يَا ‏ ‏أَبَا عَائِشَةَ ‏ ‏ثَلَاثٌ مَنْ تَكَلَّمَ بِوَاحِدَةٍ مِنْهُنَّ فَقَدْ أَعْظَمَ عَلَى اللَّهِ ‏ ‏الْفِرْيَةَ ‏ ‏قُلْتُ مَا هُنَّ قَالَتْ مَنْ زَعَمَ أَنَّ ‏ ‏مُحَمَّدًا ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَأَى رَبَّهُ فَقَدْ أَعْظَمَ عَلَى اللَّهِ ‏ ‏الْفِرْيَةَ ‏ ‏قَالَ وَكُنْتُ مُتَّكِئًا فَجَلَسْتُ فَقُلْتُ يَا أُمَّ الْمُؤْمِنِينَ ‏ ‏أَنْظِرِينِي ‏ ‏وَلَا تَعْجَلِينِي أَلَمْ يَقُلْ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏: ‏وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ ‏

– ‏وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى ‏
‏فَقَالَتْ أَنَا أَوَّلُ هَذِهِ الْأُمَّةِ سَأَلَ عَنْ ذَلِكَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏إِنَّمَا هُوَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏لَمْ أَرَهُ عَلَى صُورَتِهِ الَّتِي خُلِقَ عَلَيْهَا غَيْرَ هَاتَيْنِ الْمَرَّتَيْنِ رَأَيْتُهُ مُنْهَبِطًا مِنْ السَّمَاءِ سَادًّا عِظَمُ خَلْقِهِ مَا بَيْنَ السَّمَاءِ إِلَى الْأَرْضِ فَقَالَتْ ‏ ‏أَوَ لَمْ تَسْمَعْ أَنَّ اللَّهَ يَقُولُ ‏: ‏لَا تُدْرِكُهُ الْأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْأَبْصَارَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ ‏

‏أَوَ لَمْ تَسْمَعْ أَنَّ اللَّهَ يَقُولُ ‏: ‏وَمَا كَانَ لِبَشَرٍ أَنْ يُكَلِّمَهُ اللَّهُ إِلَّا وَحْيًا أَوْ مِنْ وَرَاءِ حِجَابٍ أَوْ يُرْسِلَ رَسُولًا فَيُوحِيَ بِإِذْنِهِ مَا يَشَاءُ إِنَّهُ عَلِيٌّ حَكِيمٌ ‏

‏قَالَتْ وَمَنْ زَعَمَ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَتَمَ شَيْئًا مِنْ كِتَابِ اللَّهِ فَقَدْ أَعْظَمَ عَلَى اللَّهِ ‏ ‏الْفِرْيَةَ ‏ ‏وَاللَّهُ يَقُولُ ‏: ‏يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ وَإِنْ لَمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ ‏

‏قَالَتْ وَمَنْ زَعَمَ أَنَّهُ يُخْبِرُ بِمَا يَكُونُ فِي غَدٍ فَقَدْ أَعْظَمَ عَلَى اللَّهِ ‏ ‏الْفِرْيَةَ ‏ ‏وَاللَّهُ يَقُولُ ‏: ‏قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ ‏

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏دَاوُدُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏ابْنِ عُلَيَّةَ ‏ ‏وَزَادَ قَالَتْ وَلَوْ كَانَ ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَاتِمًا شَيْئًا مِمَّا أُنْزِلَ عَلَيْهِ لَكَتَمَ هَذِهِ الْآيَةَ ‏

‏وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ ‏ ‏وَتَخْشَى النَّاسَ وَاللَّهُ أَحَقُّ أَنْ تَخْشَاهُ ‏
‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏عَائِشَةَ ‏ ‏هَلْ رَأَى ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَبَّهُ فَقَالَتْ سُبْحَانَ اللَّهِ لَقَدْ قَفَّ شَعَرِي لِمَا قُلْتَ وَسَاقَ الْحَدِيثَ بِقِصَّتِهِ وَحَدِيثُ ‏ ‏دَاوُدَ ‏ ‏أَتَمُّ وَأَطْوَلُ

நான் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களது இல்லத்தில் சாய்ந்தவனாக அமர்ந்திருந்த ஒருபோது, அவர்கள் (என்னை), “அபூஆயிஷா!” (என்று எனது குன்யத் பெயரால் விளித்து,) “மூன்று (மிகக் கொடிய) விஷயங்கள் உள்ளன. யாராவது அவற்றில் ஒன்றைக் கூறினாலும் அவர் அல்லாஹ்வின்மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக் கட்டியவர் ஆவார்” என்று கூறினார்கள். நான், “அவை எவை?” என்று கேட்டேன். அதற்கு, “யார் முஹம்மத் (ஸல்) தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக் கட்டி விட்டார்” என்று சொன்னார்கள். சாய்ந்து அமர்ந்திருந்த நான் நிமிர்ந்து விட்டேன். “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! நிதானித்துக் கூறுங்கள்! அவசரப்படாதீர்கள். ‘திண்ணமாக அவனைத் தெளிவான அடிவானத்தில் கண்டார்’ (81:23) என்றும் ‘நிச்சயமாக மற்றொரு முறையும் அவனைக் கண்டார்’ (53:13) என்றும் வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் கூறவில்லையா?” என்று கேட்டேன்.

அதற்கு ஆயிஷா(ரலி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்.

இந்தச் சமுதாயத்தாரில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அது, (வானவர்) ஜிப்ரீலை(நான் பார்த்ததை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை, அவரது இயற்கையான தோற்றத்தில் அந்த இரு தடவைகள் தவிர வேறெப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்திருக்கிறேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக் கொண்டிருந்தது” என்று கூறினார்கள்.

மேலும், ஆயிஷா (ரலி)

“எவருடைய பார்வையும் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத்தையும் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன் (6:103) என்று அல்லாஹ் கூறுவதை நீங்கள் கேட்டதில்லையா?

அல்லது,

மனிதர்களுள் எவரிடமும் வஹீயின் மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பி வைத்து, தான் நாடுகின்றவற்றை (வேதமாக) தன் அனுமதியின் பேரில் அறிவிக்கச் செய்தோ அல்லாமல் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. அவன் மிக்குயர்ந்தவன்; ஞானமிக்கவன் (42:51) என்று அல்லாஹ் கூறுவதை நீங்கள் கேட்டதில்லையா?” என்று என்னை வினவி(மூன்றில் முதலாவதை நிறுவி)னார்கள்.

(தொடர்ந்து) ஆயிஷா (ரலி) கூறினார்கள்:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறைவேதத்திலிருந்து எதையும் மறைத்து விட்டார்கள் என்று யாரேனும் கூறினால், அவரும் அல்லாஹ்வின்மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக் கட்டிவிட்டார். ‘தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப் பட்ட(வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள்! (அவ்வாறு) நீங்கள் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீங்கள் நிறைவேற்றியவராக மாட்டீர்கள் …’ (5:67) என்று அல்லாஹ் கூறுகின்றான்” என்று விளக்கி(இரண்டாவதை நிறுவி)னார்கள்.

அதையடுத்து,

“நபி (ஸல்) அவர்கள் நாளை நடக்கவிருப்பதைத் தெரிவிப்பார்கள் என்று யாரேனும் கூறினால் அவரும் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யைப் புனைந்து விட்டார். ஏனெனில், ‘(நபியே) கூறுவீராக! அல்லாஹ்வைத்தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ள எவரும் மறைவானவற்றை அறியமாட்டார் …’ (27:65) என்று அல்லாஹ் கூறுகிறான்” என்று எடுத்துரைத்(து மூன்றாவதையும் நிறுவி முடித்)தார்கள்.

அறிவிப்பாளர்: (அன்னை) ஆயிஷா (ரலி) கூறியதாக மஸ்ரூக் (ரஹ்).

குறிப்பு:

இதே ஹதீஸ், தாவூத் (ரஹ்) வழி அறிவிப்பில், “முஹம்மத் (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பட்ட(வேதத்)திலிருந்து எதையாவது மறைப்பவராக இருந்தால், கீழ்க்காணும்

‘(நபியே!) அல்லாஹ்வும் அருள்புரிந்து நீங்களும் அருள்புரிந்தவர் (ஆன ஜைது) இடம் நீங்கள், அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் துணைவியை (மணவிலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும் என்று சொன்னபோது, அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை மனிதர்களுக்குப் பயந்து நீங்கள் உங்களது மனதில் மறைத்து வைத்தீர்கள்; அல்லாஹ்வே நீங்கள் அஞ்சுவதற்கு மிகவும் தகுதியுடையோன்’ (33:37)

என்ற வசனத்தை மறைத்திருப்பார்கள் (ஆனால், அல்லாஹ்வின் வேதத்திலிருந்து அவர்கள் எதையும் மறைத்துவிடவில்லை)” என்று அன்னை ஆயிஷா (ரலி) கூடுதலாகக் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

இபுனு நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பில், மஸ்ரூக் (ரஹ்) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மிஃராஜின்போது) தம் இறைவனைப் பார்த்தார்களா?” என்று கேட்டபோது, “ஸுப்ஹானல்லாஹ்! நீர் கூறியதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்து விட்டது” என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறி விளக்கம் சொல்லத் தொடங்கியதாகக் குறிப்பிடப் படுகிறது.

அல்-குர்ஆனின் 53:13 மற்றும் 81:23 வசனங்களுக்கு, இபுனு மஸ்ஊத் (ரலி), இபுனு அப்பாஸ் (ரலி) போன்றோரின் விளக்கங்கள் அவர்களது சொந்தக் கூற்றுகளாகும். ஆனால், அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் எடுத்துக் கூறியவை அல்லாஹ்வின் வசனச் சான்றுகளாகும்.

Share this Hadith:

Leave a Comment