அத்தியாயம்: 1, பாடம்: 77, ஹதீஸ் எண்: 260


و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَكَرِيَّاءُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَشْوَعَ ‏ ‏عَنْ ‏ ‏عَامِرٍ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏لِعَائِشَةَ ‏
‏فَأَيْنَ ‏ ‏قَوْله ‏ : ‏ثُمَّ دَنَا ‏ ‏فَتَدَلَّى ‏ ‏فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى ‏
‏قَالَتْ ‏ ‏إِنَّمَا ذَاكَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَأْتِيهِ فِي صُورَةِ الرِّجَالِ وَإِنَّهُ أَتَاهُ فِي هَذِهِ الْمَرَّةِ فِي صُورَتِهِ الَّتِي هِيَ صُورَتُهُ فَسَدَّ أُفُقَ السَّمَاء

“பின்னர், அவர் நெருங்கி, இன்னும் அருகே வந்தார். (வளைந்த) வில்லின் இரு முனைகளுக்கிடையிலான அல்லது அதைவிடக் குறைந்த (இடைவெளியில் அவரது) நெருக்கம் இருந்தது. பிறகு அல்லாஹ் தன் அடியாருக்கு அறிவிக்க வேண்டியவற்றை அறிவித்தான்” எனும் (53:8-11) வசனங்களின் பொருள் என்ன?” என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். “அது (வானவர்) ஜிப்ரீலை(நபியவர்கள் பார்த்ததை)யே குறிக்கிறது. நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) மனித உருவில் வருவதே வழக்கம். ஆனால், அம்முறை மட்டும் அடிவானத்தையே அடைத்தபடி (பிரமாண்டமான) தமது (உண்மையான) தோற்றத்தில் வந்தார்கள்” என்று அன்னை ஆயிஷா (ரலி) விளக்கினார்கள்.

அறிவிப்பாளர்: (அன்னை) ஆயிஷா (ரலி) கூறியதாக மஸ்ரூக் (ரஹ்).

Share this Hadith:

Leave a Comment