அத்தியாயம்: 1, பாடம்: 81, ஹதீஸ் எண்: 269

و حَدَّثَنِي ‏ ‏سُوَيْدُ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏حَفْصُ بْنُ مَيْسَرَةَ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏
‏أَنَّ نَاسًا فِي زَمَنِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالُوا يَا رَسُولَ اللَّهِ هَلْ نَرَى رَبَّنَا يَوْمَ الْقِيَامَةِ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَعَمْ قَالَ ‏ ‏هَلْ ‏ ‏تُضَارُّونَ ‏ ‏فِي رُؤْيَةِ الشَّمْسِ بِالظَّهِيرَةِ صَحْوًا لَيْسَ مَعَهَا سَحَابٌ وَهَلْ ‏ ‏تُضَارُّونَ ‏ ‏فِي رُؤْيَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ صَحْوًا لَيْسَ فِيهَا سَحَابٌ قَالُوا لَا يَا رَسُولَ اللَّهِ قَالَ مَا ‏ ‏تُضَارُّونَ ‏ ‏فِي رُؤْيَةِ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى يَوْمَ الْقِيَامَةِ إِلَّا كَمَا ‏ ‏تُضَارُّونَ ‏ ‏فِي رُؤْيَةِ أَحَدِهِمَا إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ أَذَّنَ مُؤَذِّنٌ لِيَتَّبِعْ كُلُّ أُمَّةٍ مَا كَانَتْ تَعْبُدُ فَلَا يَبْقَى أَحَدٌ كَانَ يَعْبُدُ غَيْرَ اللَّهِ سُبْحَانَهُ مِنْ الْأَصْنَامِ وَالْأَنْصَابِ إِلَّا يَتَسَاقَطُونَ فِي النَّارِ حَتَّى إِذَا لَمْ يَبْقَ إِلَّا مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ مِنْ بَرٍّ وَفَاجِرٍ وَغُبَّرِ ‏ ‏أَهْلِ الْكِتَابِ ‏ ‏فَيُدْعَى ‏ ‏الْيَهُودُ ‏ ‏فَيُقَالُ لَهُمْ مَا كُنْتُمْ تَعْبُدُونَ قَالُوا كُنَّا نَعْبُدُ ‏ ‏عُزَيْرَ ‏ ‏ابْنَ اللَّهِ فَيُقَالُ كَذَبْتُمْ مَا اتَّخَذَ اللَّهُ مِنْ صَاحِبَةٍ وَلَا وَلَدٍ فَمَاذَا ‏ ‏تَبْغُونَ ‏ ‏قَالُوا عَطِشْنَا يَا رَبَّنَا فَاسْقِنَا فَيُشَارُ إِلَيْهِمْ أَلَا تَرِدُونَ فَيُحْشَرُونَ إِلَى النَّارِ كَأَنَّهَا سَرَابٌ ‏ ‏يَحْطِمُ ‏ ‏بَعْضُهَا بَعْضًا فَيَتَسَاقَطُونَ فِي النَّارِ ثُمَّ يُدْعَى ‏ ‏النَّصَارَى ‏ ‏فَيُقَالُ لَهُمْ مَا كُنْتُمْ تَعْبُدُونَ قَالُوا كُنَّا نَعْبُدُ ‏ ‏الْمَسِيحَ ‏ ‏ابْنَ اللَّهِ فَيُقَالُ لَهُمْ كَذَبْتُمْ مَا اتَّخَذَ اللَّهُ مِنْ صَاحِبَةٍ وَلَا وَلَدٍ فَيُقَالُ لَهُمْ مَاذَا تَبْغُونَ فَيَقُولُونَ عَطِشْنَا يَا رَبَّنَا فَاسْقِنَا قَالَ فَيُشَارُ إِلَيْهِمْ أَلَا تَرِدُونَ فَيُحْشَرُونَ إِلَى جَهَنَّمَ كَأَنَّهَا سَرَابٌ يَحْطِمُ بَعْضُهَا بَعْضًا فَيَتَسَاقَطُونَ فِي النَّارِ حَتَّى إِذَا لَمْ يَبْقَ إِلَّا مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ تَعَالَى مِنْ ‏ ‏بَرٍّ ‏ ‏وَفَاجِرٍ أَتَاهُمْ رَبُّ الْعَالَمِينَ سُبْحَانَهُ وَتَعَالَى فِي أَدْنَى صُورَةٍ مِنْ الَّتِي رَأَوْهُ فِيهَا قَالَ فَمَا تَنْتَظِرُونَ تَتْبَعُ كُلُّ أُمَّةٍ مَا كَانَتْ تَعْبُدُ قَالُوا يَا رَبَّنَا فَارَقْنَا النَّاسَ فِي الدُّنْيَا أَفْقَرَ مَا كُنَّا إِلَيْهِمْ وَلَمْ نُصَاحِبْهُمْ فَيَقُولُ أَنَا رَبُّكُمْ فَيَقُولُونَ نَعُوذُ بِاللَّهِ مِنْكَ لَا نُشْرِكُ بِاللَّهِ شَيْئًا مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا حَتَّى إِنَّ بَعْضَهُمْ لَيَكَادُ أَنْ ‏ ‏يَنْقَلِبَ ‏ ‏فَيَقُولُ هَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُ ‏ ‏آيَةٌ ‏ ‏فَتَعْرِفُونَهُ بِهَا فَيَقُولُونَ نَعَمْ فَيُكْشَفُ عَنْ سَاقٍ فَلَا يَبْقَى مَنْ كَانَ يَسْجُدُ لِلَّهِ مِنْ تِلْقَاءِ نَفْسِهِ إِلَّا أَذِنَ اللَّهُ لَهُ بِالسُّجُودِ وَلَا يَبْقَى مَنْ كَانَ يَسْجُدُ اتِّقَاءً وَرِيَاءً إِلَّا جَعَلَ اللَّهُ ظَهْرَهُ ‏ ‏طَبَقَةً ‏ ‏وَاحِدَةً كُلَّمَا أَرَادَ أَنْ يَسْجُدَ ‏ ‏خَرَّ ‏ ‏عَلَى ‏ ‏قَفَاهُ ‏ ‏ثُمَّ يَرْفَعُونَ رُءُوسَهُمْ وَقَدْ تَحَوَّلَ فِي صُورَتِهِ الَّتِي رَأَوْهُ فِيهَا أَوَّلَ مَرَّةٍ فَقَالَ أَنَا رَبُّكُمْ فَيَقُولُونَ أَنْتَ رَبُّنَا ثُمَّ ‏ ‏يُضْرَبُ ‏ ‏الْجِسْرُ عَلَى جَهَنَّمَ ‏ ‏وَتَحِلُّ ‏ ‏الشَّفَاعَةُ وَيَقُولُونَ اللَّهُمَّ سَلِّمْ سَلِّمْ قِيلَ يَا رَسُولَ اللَّهِ وَمَا الْجِسْرُ قَالَ ‏ ‏دَحْضٌ ‏ ‏مَزِلَّةٌ فِيهِ ‏ ‏خَطَاطِيفُ ‏ ‏وَكَلَالِيبُ ‏ ‏وَحَسَكٌ ‏ ‏تَكُونُ ‏ ‏بِنَجْدٍ ‏ ‏فِيهَا ‏ ‏شُوَيْكَةٌ يُقَالُ لَهَا ‏ ‏السَّعْدَانُ ‏ ‏فَيَمُرُّ الْمُؤْمِنُونَ كَطَرْفِ الْعَيْنِ وَكَالْبَرْقِ وَكَالرِّيحِ وَكَالطَّيْرِ ‏ ‏وَكَأَجَاوِيدِ ‏ ‏الْخَيْلِ ‏ ‏وَالرِّكَابِ ‏ ‏فَنَاجٍ مُسَلَّمٌ وَمَخْدُوشٌ مُرْسَلٌ ‏ ‏وَمَكْدُوسٌ ‏ ‏فِي نَارِ جَهَنَّمَ حَتَّى إِذَا خَلَصَ الْمُؤْمِنُونَ مِنْ النَّارِ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ بِأَشَدَّ مُنَاشَدَةً لِلَّهِ فِي ‏ ‏اسْتِقْصَاءِ ‏ ‏الْحَقِّ مِنْ الْمُؤْمِنِينَ لِلَّهِ يَوْمَ الْقِيَامَةِ لِإِخْوَانِهِمْ الَّذِينَ فِي النَّارِ يَقُولُونَ رَبَّنَا كَانُوا يَصُومُونَ مَعَنَا وَيُصَلُّونَ وَيَحُجُّونَ فَيُقَالُ لَهُمْ أَخْرِجُوا مَنْ عَرَفْتُمْ فَتُحَرَّمُ صُوَرُهُمْ عَلَى النَّارِ فَيُخْرِجُونَ خَلْقًا كَثِيرًا قَدْ أَخَذَتْ النَّارُ إِلَى نِصْفِ سَاقَيْهِ وَإِلَى رُكْبَتَيْهِ ثُمَّ يَقُولُونَ رَبَّنَا مَا بَقِيَ فِيهَا أَحَدٌ مِمَّنْ أَمَرْتَنَا بِهِ فَيَقُولُ ارْجِعُوا فَمَنْ وَجَدْتُمْ فِي قَلْبِهِ مِثْقَالَ دِينَارٍ مِنْ خَيْرٍ فَأَخْرِجُوهُ فَيُخْرِجُونَ خَلْقًا كَثِيرًا ثُمَّ يَقُولُونَ رَبَّنَا لَمْ ‏ ‏نَذَرْ ‏ ‏فِيهَا أَحَدًا مِمَّنْ أَمَرْتَنَا ثُمَّ يَقُولُ ارْجِعُوا فَمَنْ وَجَدْتُمْ فِي قَلْبِهِ مِثْقَالَ نِصْفِ دِينَارٍ مِنْ خَيْرٍ فَأَخْرِجُوهُ فَيُخْرِجُونَ خَلْقًا كَثِيرًا ثُمَّ يَقُولُونَ رَبَّنَا لَمْ ‏ ‏نَذَرْ ‏ ‏فِيهَا مِمَّنْ أَمَرْتَنَا أَحَدًا ثُمَّ يَقُولُ ارْجِعُوا فَمَنْ وَجَدْتُمْ فِي قَلْبِهِ مِثْقَالَ ذَرَّةٍ مِنْ خَيْرٍ فَأَخْرِجُوهُ فَيُخْرِجُونَ خَلْقًا كَثِيرًا ثُمَّ يَقُولُونَ رَبَّنَا لَمْ ‏ ‏نَذَرْ ‏ ‏فِيهَا خَيْرًا وَكَانَ ‏ ‏أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ ‏ ‏يَقُولُ إِنْ لَمْ تُصَدِّقُونِي بِهَذَا الْحَدِيثِ فَاقْرَءُوا إِنْ شِئْتُمْ ‏
‏إِنَّ اللَّهَ لَا يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ وَإِنْ تَكُ حَسَنَةً يُضَاعِفْهَا وَيُؤْتِ مِنْ لَدُنْهُ أَجْرًا عَظِيمًا ‏

‏فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ شَفَعَتْ الْمَلَائِكَةُ وَشَفَعَ النَّبِيُّونَ وَشَفَعَ الْمُؤْمِنُونَ وَلَمْ يَبْقَ إِلَّا أَرْحَمُ الرَّاحِمِينَ فَيَقْبِضُ قَبْضَةً مِنْ النَّارِ فَيُخْرِجُ مِنْهَا قَوْمًا لَمْ يَعْمَلُوا خَيْرًا قَطُّ قَدْ ‏ ‏عَادُوا ‏ ‏حُمَمًا ‏ ‏فَيُلْقِيهِمْ فِي نَهَرٍ فِي أَفْوَاهِ الْجَنَّةِ يُقَالُ لَهُ نَهَرُ الْحَيَاةِ فَيَخْرُجُونَ كَمَا تَخْرُجُ الْحِبَّةُ فِي ‏ ‏حَمِيلِ ‏ ‏السَّيْلِ أَلَا تَرَوْنَهَا تَكُونُ إِلَى الْحَجَرِ أَوْ إِلَى الشَّجَرِ مَا يَكُونُ إِلَى الشَّمْسِ ‏ ‏أُصَيْفِرُ وَأُخَيْضِرُ وَمَا يَكُونُ مِنْهَا إِلَى الظِّلِّ يَكُونُ أَبْيَضَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ كَأَنَّكَ كُنْتَ ‏ ‏تَرْعَى بِالْبَادِيَةِ قَالَ فَيَخْرُجُونَ كَاللُّؤْلُؤِ فِي رِقَابِهِمْ الْخَوَاتِمُ يَعْرِفُهُمْ أَهْلُ الْجَنَّةِ هَؤُلَاءِ عُتَقَاءُ اللَّهِ الَّذِينَ أَدْخَلَهُمْ اللَّهُ الْجَنَّةَ بِغَيْرِ عَمَلٍ عَمِلُوهُ وَلَا خَيْرٍ قَدَّمُوهُ ثُمَّ يَقُولُ ادْخُلُوا الْجَنَّةَ فَمَا رَأَيْتُمُوهُ فَهُوَ لَكُمْ فَيَقُولُونَ رَبَّنَا أَعْطَيْتَنَا مَا لَمْ تُعْطِ أَحَدًا مِنْ الْعَالَمِينَ فَيَقُولُ لَكُمْ عِنْدِي أَفْضَلُ مِنْ هَذَا فَيَقُولُونَ يَا رَبَّنَا أَيُّ شَيْءٍ أَفْضَلُ مِنْ هَذَا فَيَقُولُ رِضَايَ فَلَا أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا ‏
‏قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏قَرَأْتُ عَلَى ‏ ‏عِيسَى بْنِ حَمَّادٍ زُغْبَةَ الْمِصْرِيِّ ‏ ‏هَذَا الْحَدِيثَ فِي الشَّفَاعَةِ وَقُلْتُ لَهُ أُحَدِّثُ بِهَذَا الْحَدِيثِ عَنْكَ أَنَّكَ ‏ ‏سَمِعْتَ مِنَ ‏ ‏اللَّيْثِ بْنِ سَعْدٍ ‏ ‏فَقَالَ نَعَمْ قُلْتُ ‏ ‏لِعِيسَى بْنِ حَمَّادٍ ‏ ‏أَخْبَرَكُمُ ‏ ‏اللَّيْثُ بْنُ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدِ بْنِ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏أَنَّهُ قَالَ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ ‏ ‏أَنَرَى رَبَّنَا قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هَلْ ‏ ‏تُضَارُّونَ ‏ ‏فِي رُؤْيَةِ الشَّمْسِ إِذَا كَانَ يَوْمٌ صَحْوٌ قُلْنَا لَا وَسُقْتُ الْحَدِيثَ حَتَّى انْقَضَى آخِرُهُ وَهُوَ نَحْوُ حَدِيثِ ‏ ‏حَفْصِ بْنِ مَيْسَرَةَ ‏ ‏وَزَادَ بَعْدَ قَوْلِهِ بِغَيْرِ عَمَلٍ عَمِلُوهُ وَلَا قَدَمٍ قَدَّمُوهُ فَيُقَالُ لَهُمْ لَكُمْ مَا رَأَيْتُمْ وَمِثْلُهُ مَعَهُ قَالَ ‏ ‏أَبُو سَعِيدٍ ‏ ‏بَلَغَنِي أَنَّ الْجِسْرَ أَدَقُّ مِنْ الشَّعْرَةِ وَأَحَدُّ مِنْ السَّيْفِ وَلَيْسَ فِي حَدِيثِ ‏ ‏اللَّيْثِ ‏ ‏فَيَقُولُونَ رَبَّنَا أَعْطَيْتَنَا مَا لَمْ تُعْطِ أَحَدًا مِنْ الْعَالَمِينَ وَمَا بَعْدَهُ فَأَقَرَّ بِهِ ‏ ‏عِيسَى بْنُ حَمَّادٍ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَعْفَرُ بْنُ عَوْنٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ سَعْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَيْدُ بْنُ أَسْلَمَ ‏ ‏بِإِسْنَادِهِمَا ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏حَفْصِ بْنِ مَيْسَرَةَ ‏ ‏إِلَى آخِرِهِ وَقَدْ زَادَ وَنَقَصَ شَيْئًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் மக்கள் சிலர், “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம் (காண்பீர்கள்); மேகமே இல்லாத தெளிவான நண்பகல் நேரத்தில் சூரியனைப் பார்ப்பதில் நீங்கள் சிரமப்படுவீர்களா? மேகமே இல்லாத தெளிவான பௌர்ணமி இரவில் முழுநிலவைப் பார்ப்பதில் நீங்கள் சிரமப்படுவீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “(சிரமப்பட) மாட்டோம், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர்.

“இவ்விரண்டில் ஒன்றைப் பார்க்க நீங்கள் சிரமப்படாததைப் போன்றே மறுமை நாளில், நற்பேறுகளுக்கு உரியவனும் மிக்குயந்தோனுமாகிய அல்லாஹ்வைக் காண நீங்கள் சிரமப்படமாட்டீர்கள். மறுமை நாள் ஏற்படும்போது, (அல்லாஹ்வின் அறிவிப்பை) அறிவிப்பவர், ‘ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலகத்தில்) தாம் வணங்கியவற்றைப் பின்தொடர்ந்து செல்லட்டும்’ என்று அறிவிப்பார். அப்போது, அல்லாஹ்வை விடுத்து கற்பனை தெய்வங்களையும் கற்சிலைகளையும் வணங்கிக் கொண்டிருந்தவர்களுள் ஒருவர்கூட மிச்சமின்றி அனைவரும் நரக நெருப்பில் விழுவர். முடிவில் அல்லாஹ்வை மட்டும் வழிபட்டு (நன்மைகளும் புரிந்து) கொண்டிருந்த நல்லவர்களும் (அல்லாஹ்வை வழிபட்டுப் பாவங்களும் புரிந்து வந்த) பாவிகளும் வேதக்காரர்களில் கொஞ்சம் பேருமே எஞ்சியிருப்பர்.

அப்போது (வேதக்காரர்களான) யூதர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்களிடம், ‘நீங்கள் வழிபட்டது எது?’ என்று கேட்கப்படும். அவர்கள், ‘அல்லாஹ்வின் மகன் உஸைரை வழிபட்டுக் கொண்டிருந்தோம்’ என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், ‘பொய் சொல்கிறீர்கள். தனக்கு எவரையும் துணைவியாகவோ மகனாகவோ அல்லாஹ் எடுத்துக் கொள்ளவில்லை’ என்று கூறப்படும். அதற்கு அவர்கள், ‘எங்கள் இறைவா! எங்களுக்குத் தாகமாக இருக்கிறது, (தண்ணீர்) புகட்டுவாயாக!’ எனக் கேட்பார்கள். உடனே, ‘நீங்கள் தண்ணீர் உள்ள (அந்த) இடத்திற்குச் சென்றாலென்ன?’ என (ஒரு திசை) சுட்டிக் காட்டப்பட்டு, (அத்திசையிலுள்ள) நரகத்தின் பக்கம் அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். அது கானல் நீர் போன்று காணப்படும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சிதைத்துக் கொண்டிருக்கும். அப்படியே அவர்கள் அந்த நரக நெருப்பில் விழுவார்கள்.

பிறகு, கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டு, ‘நீங்கள் வழிபட்டது எது?’ என்று அவர்களிடம் கேட்கப்படும். அவர்கள், ‘நாங்கள் அல்லாஹ்வின் மகன் மஸீஹை (ஈசாவை) வழிபட்டுக் கொண்டிருந்தோம்’ என்று கூறுவர். அப்போது அவர்களிடம், ‘பொய் சொல்கிறீர்கள். தனக்கு எவரையும் துணைவியாகவோ மகனாகவோ அல்லாஹ் எடுத்துக் கொள்ளவில்லை’ என்று கூறப்படும். அதற்கு அவர்கள், ‘எங்கள் இறைவா! எங்களுக்குத் தாகமாக இருக்கிறது, (தண்ணீர்) புகட்டுவாயாக!’ எனக் கேட்பார்கள். உடனே, ‘நீங்கள் தண்ணீர் உள்ள (அந்த) இடத்திற்குச் சென்றாலென்ன?’ என (ஒரு திசை) சுட்டிக் காட்டப்பட்டு, (அத்திசையிலுள்ள) நரகத்தின் பக்கம் அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். அது கானல் நீர் போன்று காணப்படும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சிதைத்துக் கொண்டிருக்கும். அப்படியே அவர்கள் அந்த நரக நெருப்பில் விழுவார்கள்.

இறுதியில் அல்லாஹ்வை வழிபட்டு(க்கொண்டு நன்மைகளும் புரிந்து)வந்த நல்லோரும் (அல்லாஹ்வை வழிபட்டுக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) தீயோரும் எஞ்சியிருப்பர். அல்லாஹ்வைப் பற்றி அவர்கள் (தம் உள்ளத்தில்) எண்ணி வைத்திருந்த தோற்றங்களில் (இல்லாமல்) மிக ஒத்தவொரு தோற்றத்தில் அனைத்துலகின் இறைவன் அவர்களிடம் வருவான். அப்போது ‘நீங்கள் எதை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றீர்கள்? ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலகில்) தாம் வழிபட்டுக் கொண்டிருந்தவற்றைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றார்களே!’ என்று அவன் கேட்பான். அவர்கள், ‘உலக வாழ்வில் நாங்கள் அந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுடையவர்களாக இருந்தும் அவர்களுடன் தோழமை கொள்ளாமல் பிரிந்திருந்தோம் (அவர்களுக்காக நாங்கள் காத்திருக்கவில்லை; எங்கள் இறைவனுக்காகக் காத்திருக்கிறோம்)’ என்று பதிலளிப்பார்கள்.

அப்போது இறைவன், ‘நான்தான் உங்கள் இறைவன்’ என்று கூறுவான். அதற்கு, ‘(இல்லை!) உன்னை விட்டும் அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக் கோருகிறோம்; நாங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டோம்’ என்று இரண்டு அல்லது மூன்று தடவைகள் கூறுவார்கள். (அந்தச் சோதனையில்) அவர்களில் சிலர் (சத்தியத்திலிருந்து) பிறழ்ந்து விடும் அளவுக்குப் போய் விடுவார்கள். அப்போது, ‘அவனை இனங்கண்டு கொள்ள உங்களுக்கும் அவனுக்குமிடையே ஏதேனும் அடையாளம் உண்டா?’ என்று இறைவன் கேட்பான். அவர்கள், ‘உண்டு’ என்று கூறுவார்கள். உடனே, (திரையுடனிருக்கும் இறைவனின்) கணுக்கால் திறந்து காட்டப் படும். அப்போது (உலகத்தில்) மனப்பூர்வமாக அல்லாஹ்வுக்குச் சிரம் பணிந்துக் கொண்டிருந்தவர் (அங்கும்) சிரம் பணிய இறைவன் அனுமதிப்பான். தற்காப்புக்காகவோ பாராட்டுக்காகவோ சிரம்பணிந்து வாழ்ந்து கொண்டிருந்தவருடைய முதுகை (நெடும் பலகையைப் போன்று) ஒரே நீட்டெலும்பாக அல்லாஹ் ஆக்கி விடுவான். அவர் சிரம் பணிய முற்படும்போதெல்லாம் மல்லாந்து விழுந்து விடுவார் (அவரால் சிரம் பணிய முடியாது).

பின்னர் அனைவரும் தலையை உயர்த்துவார்கள். அப்போது அவர்கள் பார்த்த முதல் தோற்றத்தில் இறைவன் காட்சியளித்து, ‘நான்தான் உங்கள் இறைவன்’ என்று கூறுவான். அதற்கு அவர்கள், ‘நீயே எங்கள் இறைவன்’ என்று கூறுவார்கள். (பாவம் புரிந்த இறை நம்பிக்கையாளர்களுக்காகப்) பரிந்துரை செய்ய அனுமதி கிடைக்கும்; நரகத்தின் மீது பாலம் அமைக்கப்படும். அப்போது மக்கள், ‘அல்லாஹ்வே! காப்பாற்று!; காப்பாற்று!’ என்று பிரார்த்திப்பார்கள்”

என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிக் கொண்டு வந்தபோது, “அல்லாஹ்வின் தூதரே! பாலம் என்றால் என்ன?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “(கால்கள்) வழுக்கி விடக் கூடிய ஓர் இடமாகும். அ(ந்தப் பாலத்)தில் நஜ்துப் பகுதியில் முளைக்கும் ‘சஅதான்’ எனப்படும் (முட்)செடியின் முற்களைப் போன்ற கொக்கிகள் இருக்கும்” என்று பதிலளித்தார்கள். தொடர்ந்து,

“இறைநம்பிக்கையாளர்கள் கண் சிமிட்டும் நேரத்தில் மின்னலைப் போன்று, காற்றைப் போன்று, பறவையைப் போன்று, ஜாதிக் குதிரைகளைப் போன்று, ஒட்டகங்களைப் போன்று (விரைந்து அந்தப் பாலத்தைக்) கடந்து விடுவார்கள். (அதைக் கடப்பவர்களுள் கொக்கிப் பிடியின்) காயங்களின்றித் தப்பித்துக் கொள்வோரும் காயங்களுடன் தப்புவோரும் உண்டு. பின்புறத்திலிருந்து தள்ளப்பட்டு நரக நெருப்பில் விழுவோரும் உண்டு. இறுதியில் இறைநம்பிக்கையாளர்கள் (அந்தப் பாலத்தைக் கடந்து) நரக நெருப்பிலிருந்து தப்பி விடுவார்கள்.

என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! மறுமை நாளில் நரகத்தில் கிடக்கும் தம் சகோதரர்களின் நன்மையை வலியுறுத்தி இறைவனிடம் மிகவும் மன்றாடி வேண்டுபவர்கள் இறைநம்பிக்கையாளர்களைவிட வேறெவருமில்லை. அவர்கள் கூறுவார்கள்: ‘எங்கள் இறைவா! இவர்கள் எங்களுடன் நோன்பு நோற்றார்கள்; தொழுதார்கள்; ஹஜ் செய்தார்கள் (எனவே இவர்களை நீ நரகத்திலிருந்து விடுதலை செய்வாயாக!)’. அப்போது அவர்களிடம், ‘நீங்கள் (சென்று) உங்களுக்குத் தெரிந்தவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்’ என்று கூறப்படும். மேலும், (அடையாளம் காண்பதற்கு வசதியாக) அவர்களது உடலைத் தீண்டக்கூடாதென நரகத்திற்குத் தடை விதிக்கப்படும். இவர்கள் (நரகத்திற்குச் சென்று) ஏராளமான மக்களை வெளியே கொண்டு வருவார்கள். அப்போது (நரகத்தில் இருந்த) அவர்களில் சிலருடைய கணுக்கால்களில் பாதிவரையும் (இன்னும் சிலருடைய) முழங்கால்கள் வரையும் நரக நெருப்புத் தீண்டியிருக்கும். பிறகு, ‘எங்கள் இறைவா! நீ வெளியேற்றுமாறு கட்டளையிட்டவர்களுள் ஒருவர்கூட நரகத்தில் எஞ்சவில்லை (நாங்கள் வெளியேற்றிவிட்டோம்)’ என்று கூறுவார்கள்.

அப்போது இறைவன், ‘நீங்கள் திரும்பிச் சென்று, உள்ளத்தில் ஒரு தீனார் நிறைக்கு அளவு நன்மையைக் உடையவரையும் (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்’ என்று கூறுவான். அவ்வாறே அவர்களும் (இன்னும்) ஏராளமான மக்களை வெளியேற்றிவிட்டு, ‘எங்கள் இறைவா! நீ உத்தரவிட்ட யாரையும் அதில் நாங்கள் விட்டு வைக்கவில்லை (வெளியேற்றி விட்டோம்)’ என்று கூறுவார்கள்.

‘நீங்கள் திரும்பிச் சென்று, உள்ளத்தில் அரை தீனார் நிறைக்கு அளவு நன்மையை உடையவரையும் (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்’ என்று மீண்டும் இறைவன் கூறுவான். அவ்வாறே அவர்களும் (இன்னும்) ஏராளமான மக்களை வெளியேற்றிவிட்டு, ‘எங்கள் இறைவா! நீ உத்தரவிட்ட யாரையும் அதில் நாங்கள் விட்டு வைக்கவில்லை (வெளியேற்றி விட்டோம்)’ என்று கூறுவார்கள்.

‘நீங்கள் திரும்பிச் சென்று, உள்ளத்தில் அணுவளவு நன்மையை உடையவரையும் (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்’ என்று பின்னரும் கூறுவான். அவ்வாறே அவர்களும் (இன்னும்) ஏராளமான மக்களை வெளியேற்றிவிட்டு, ‘எங்கள் இறைவா! நீ உத்தரவிட்ட யாரையும் அதில் நாங்கள் விட்டு வைக்கவில்லை (வெளியேற்றி விட்டோம்)’ என்று கூறுவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

இவ்விடத்தில், “நான் கூறும் இந்த ஹதீஸை நீங்கள் நம்பாவிடின், விரும்பினால் ‘திண்ணமாக அல்லாஹ் (எவருக்கும்) அணுவளவும் அநீதி இழைக்கமாட்டான். (எவரும்) அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதை அவன் பன்மடங்காக்கி, அதற்கு மகத்தான சன்மானத்தைத் தன்னிடமிருந்து வழங்குவான்’ எனும் (4:40ஆவது) இறைவசனத்தை நீங்கள் ஓதி(அதன் மூலம் விளக்கம் பெற்று)க் கொள்ளலாம்” என்று அறிவிப்பாளர் அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி) கூறிய பின்னர் ஹதீஸ் தொடர்கிறது:

“வானவர்களும் நபிமார்களும் இறை நம்பிக்கையாளர்களும் பரிந்துரைத்து விட்டார்கள். இப்போது கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன் மட்டுமே எஞ்சியிருக்கிறான்” என்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறிவிட்டு, அறவே எந்த நன்மையும் செய்திராத ஒரு கூட்டத்தை, நரகத்திலிருந்து ஒரு கைப்பிடி அளவில் அள்ளியெடுத்து வெளியேற்றுவான். அவர்கள் கரிக்கட்டை போன்று மாறியிருப்பார்கள். எனவே, அவர்களைச் சொர்க்கத்தில் நுழைவாயில்களில் உள்ள ‘ஜீவநதி’ என்ற பெயருள்ள ஒரு நதியில் போடுவான். உழுநிலத்தில் விதைப்பயிர் முளைத்தெழுவதைப்போல் (பசுமையாக) வெளியேறுவார்கள். நீங்கள் பாறையோரங்களில் அல்லது மரங்களுக்கு அருகில் வளரும் விதைப்பயிரைப் பார்த்திருக்கின்றீர்கள் அல்லவா? அவற்றில் வெயில் படுமிடத்தில் வளர்பவை மஞ்சளாகவும் பச்சையாகவும் இருக்கும். நிழலில் வளர்பவை (வெளிறிப்போய்) வெள்ளை நிறத்தில் இருக்கும் அல்லவா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் கிராமப் புறங்களில் (கால்நடைகளை) மேய்த்துக் கொண்டிருந்தீர்கள் போலும்” என்றார்கள்.

(தொடர்ந்து) “அவர்கள் (ஜீவநதியிலிருந்து) முத்துகளைப் போன்று (ஒளிர்ந்தவர்களாக) வெளியேறுவார்கள். அவர்களது கழுத்தில் (‘நரக விடுதலை பெற்றோர்’ எனும்) முத்திரை இருக்கும். (அதை வைத்து) அவர்களைச் சொர்க்கவாசிகள் அடையாளம் கண்டுகொள்வார்கள். ‘இவர்கள் அல்லாஹ்வால் (நரகத்திலிருந்து) விடுதலை செய்யப்பட்டவர்கள்; (உலகில்) எந்த நற்செயலும் செய்யாமல், எந்த நன்மையும் செய்து சேர்த்துக் கொள்ளாமல் இருந்த இவர்களை அல்லாஹ்வே (தனது தனிப்பெரும் கருணையால்) சொர்க்கத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறான்’ என்று பேசிக் கொள்வார்கள்.

பிறகு (அவர்களிடம்) இறைவன், ‘சொர்க்கத்திற்குள் செல்லுங்கள்; அங்கு நீங்கள் காண்பதெல்லாம் உங்களுக்கே உரியன’ என்று கூறுவான். அதற்கு அவர்கள், ‘எங்கள் இறைவா! அகிலத்தாரில் யாருக்கும் வழங்காத(பாக்கியத்)தை எங்களுக்கு வழங்கி விட்டாய்’ என்று (நன்றியுடன்) கூறுவார்கள். அதற்கு இறைவன், ‘உங்களுக்கு இதையும்விடச் சிறந்த வேறொன்று இருக்கிறது” என்று கூறுவான். அதற்கு அவர்கள், ‘எங்கள் இறைவா! இதைவிடச் சிறந்த அந்த ஒன்று எது?’ என்று கேட்பார்கள். அதற்கு, ‘எனது திருப்தி!; இனி ஒருபோதும் உங்கள் மீது நான் கோபம் கொள்ள மாட்டேன்’ என்பான் இறைவன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி).

நூலாசிரியர் (முஸ்லிம்-ரஹ்) அவர்களது குறிப்பு:

ஷஃபா அத் எனும் பரிந்துரை தொடர்பான இந்த ஹதீஸை ஈஸா பின் ஹம்மாத் (ரஹ்) அவர்களிடம் வாசித்துக் காட்டி, “இந்த ஹதீஸை லைஸ் பின் ஸஅத் (ரஹ்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்று, எனக்குச் சொன்னதாக நான் அறிவிக்கலாமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம்(அறிவியுங்கள்)” என்றார்கள்.

நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே!, நாங்கள் (மறுமையில்) எங்கள் இறைவனைக் காண்போமா?’ என்று கேட்டபோது, “(மேகமூட்டமில்லாத) தெளிவான நண்பகல் நேரத்தில் சூரியனைப் பார்க்க நீங்கள் சிரமப்படுவீர்களா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள் என்று தொடங்கும் அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி) அவர்களது ஹதீஸ், லைஸ் பின் ஸஅத் (ரஹ்) வழி அறிவிப்பில் “(உலகில்) எந்த நற்செயலும் செய்யாமல், எந்த நன்மையும் செய்து சேர்த்துக் கொள்ளாமல் இருந்த இவர்களை அல்லாஹ்வே (தனது தனிப்பெரும் கருணையால்) சொர்க்கத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறான்’ என்பதை அடுத்து, “நீங்கள் காணக்கூடிய இதுவும் இதைப் போன்று இன்னொரு மடங்கும் உங்களுக்கே உரியது என அவர்களிடம் கூறப்படும்” எனும் வாசகத்தை அதிகப்படியாக அறிவித்துள்ளார்கள். மேலும், “அந்தப் பாலம் முடியை விட மெலிதானது; வாளைவிடக் கூர்மையானது எனும் செய்தி எனக்கு எட்டியது” என்று அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி) அவர்கள் கூறுவதாக அதில் இடம்பெற்றுள்ளது.

“(நரகத்திலிருந்து விடுதலை பெற்று சொர்க்கம் சென்ற) மக்கள், ‘எங்கள் இறைவா! அகிலத்தாரில் யாருக்கும் வழங்காத (பாக்கியத்)தை எங்களுக்கு நீ வழங்கி விட்டாய்’ என்று கூறுவார்கள் எனும் வாசகமும் அதற்குப் பிறகு வருபவையும் லைஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இடம்பெறவில்லை.

மேலும், “இந்த ஹதீஸைத் தங்களுக்கு லைஸ் பின் ஸஅத் (ரஹ்), காலித் பின் யஸீத் (ரஹ்) அவர்களிடமிருந்தும் காலித் (ரஹ்), ஸயீத் பின் அபீஹிலால் (ரஹ்) அவர்களிடமிருந்தும் ஸயீத் (ரஹ்), ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) அவர்களிடமிருந்தும் ஸைத் (ரஹ்), அதாஉ பின் யஸார்(ரஹ்) அவர்களிடமிருந்தும் அதாஉ (ரஹ்), அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தும் அபூஸயீத் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்தும் அறிவித்தார்கள். சரிதானா?” என்று நான் ஈஸா பின் ஹம்மாத் அவர்களிடம் கேட்டேன். நான் கூறியதை ஈஸா பின் ஹம்மாத் அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.

மேற்கண்ட ஹதீஸ், அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழியாக அறிவிக்கப் படும்போது, சற்றே கூடுதல்-குறைவோடு காணப்படுகிறது.

அத்தியாயம்: 1, பாடம்: 81, ஹதீஸ் எண்: 268

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏قَالَ هَذَا مَا حَدَّثَنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا ‏
‏وَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ أَدْنَى مَقْعَدِ أَحَدِكُمْ مِنْ الْجَنَّةِ أَنْ يَقُولَ لَهُ تَمَنَّ فَيَتَمَنَّى ‏ ‏وَيَتَمَنَّى فَيَقُولُ لَهُ هَلْ تَمَنَّيْتَ فَيَقُولُ نَعَمْ فَيَقُولُ لَهُ فَإِنَّ لَكَ مَا تَمَنَّيْتَ وَمِثْلَهُ مَعَهُ

“ஒருவரிடம், ‘நீ (வேண்டியவரையில்) ஆசைப்படு’ என்று (இறைவன்) சொல்வான். அப்போது அவர் ஒவ்வொன்றாக ஆசைப்படுவார். (இறுதியில்) அவரிடம், ‘ஆசைப்பட்டு (முடித்து) விட்டாயா?’ என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், ‘ஆம்’ என்று பதிலளிப்பார். அப்போது, ‘நீ ஆசைப்பட்டதும் அத்துடன் அதைப் போன்றதும் உனக்குக் கிடைக்கும்’ என்று அவரிடம் இறைவன் கூறுவான். இது, சொர்க்கத்தில் உங்களுள் ஒருவரது மிகக் குறைந்த பதவி(க்குரிய பரிசாகும்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 81, ஹதீஸ் எண்: 267

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏أَخْبَرَهُ ‏
‏أَنَّ نَاسًا قَالُوا لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ هَلْ نَرَى رَبَّنَا يَوْمَ الْقِيَامَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هَلْ تُضَارُّونَ فِي رُؤْيَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ قَالُوا لَا يَا رَسُولَ اللَّهِ قَالَ هَلْ تُضَارُّونَ فِي الشَّمْسِ لَيْسَ دُونَهَا سَحَابٌ قَالُوا لَا يَا رَسُولَ اللَّهِ قَالَ فَإِنَّكُمْ تَرَوْنَهُ كَذَلِكَ يَجْمَعُ اللَّهُ النَّاسَ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُ مَنْ كَانَ يَعْبُدُ شَيْئًا فَلْيَتَّبِعْهُ فَيَتَّبِعُ مَنْ كَانَ يَعْبُدُ الشَّمْسَ الشَّمْسَ وَيَتَّبِعُ مَنْ كَانَ يَعْبُدُ الْقَمَرَ الْقَمَرَ وَيَتَّبِعُ مَنْ كَانَ يَعْبُدُ الطَّوَاغِيتَ الطَّوَاغِيتَ وَتَبْقَى هَذِهِ الْأُمَّةُ فِيهَا مُنَافِقُوهَا ‏ ‏فَيَأْتِيهِمْ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى فِي صُورَةٍ غَيْرِ صُورَتِهِ الَّتِي يَعْرِفُونَ فَيَقُولُ أَنَا رَبُّكُمْ فَيَقُولُونَ نَعُوذُ بِاللَّهِ مِنْكَ هَذَا مَكَانُنَا حَتَّى يَأْتِيَنَا رَبُّنَا فَإِذَا جَاءَ رَبُّنَا عَرَفْنَاهُ ‏ ‏فَيَأْتِيهِمْ اللَّهُ تَعَالَى فِي صُورَتِهِ الَّتِي يَعْرِفُونَ فَيَقُولُ أَنَا رَبُّكُمْ فَيَقُولُونَ أَنْتَ رَبُّنَا فَيَتَّبِعُونَهُ ‏ ‏وَيُضْرَبُ ‏ ‏الصِّرَاطُ بَيْنَ ظَهْرَيْ جَهَنَّمَ فَأَكُونُ أَنَا وَأُمَّتِي أَوَّلَ مَنْ يُجِيزُ وَلَا يَتَكَلَّمُ يَوْمَئِذٍ إِلَّا الرُّسُلُ وَدَعْوَى الرُّسُلِ يَوْمَئِذٍ اللَّهُمَّ سَلِّمْ سَلِّمْ وَفِي جَهَنَّمَ كَلَالِيبُ مِثْلُ شَوْكِ السَّعْدَانِ هَلْ رَأَيْتُمْ السَّعْدَانَ قَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ فَإِنَّهَا مِثْلُ شَوْكِ السَّعْدَانِ غَيْرَ أَنَّهُ لَا يَعْلَمُ مَا قَدْرُ عِظَمِهَا إِلَّا اللَّهُ تَخْطَفُ النَّاسَ بِأَعْمَالِهِمْ فَمِنْهُمْ الْمُؤْمِنُ بَقِيَ بِعَمَلِهِ وَمِنْهُمْ الْمُجَازَى حَتَّى ‏ ‏يُنَجَّى حَتَّى إِذَا فَرَغَ اللَّهُ مِنْ الْقَضَاءِ بَيْنَ الْعِبَادِ وَأَرَادَ أَنْ يُخْرِجَ بِرَحْمَتِهِ مَنْ أَرَادَ مِنْ أَهْلِ النَّارِ أَمَرَ الْمَلَائِكَةَ أَنْ يُخْرِجُوا مِنْ النَّارِ مَنْ كَانَ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا مِمَّنْ أَرَادَ اللَّهُ تَعَالَى أَنْ يَرْحَمَهُ مِمَّنْ يَقُولُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَيَعْرِفُونَهُمْ فِي النَّارِ يَعْرِفُونَهُمْ بِأَثَرِ السُّجُودِ تَأْكُلُ النَّارُ مِنْ ابْنِ ‏ ‏آدَمَ ‏ ‏إِلَّا أَثَرَ السُّجُودِ حَرَّمَ اللَّهُ عَلَى النَّارِ أَنْ تَأْكُلَ أَثَرَ السُّجُودِ فَيُخْرَجُونَ مِنْ النَّارِ وَقَدْ امْتَحَشُوا فَيُصَبُّ عَلَيْهِمْ مَاءُ الْحَيَاةِ فَيَنْبُتُونَ مِنْهُ كَمَا تَنْبُتُ الْحِبَّةُ فِي حَمِيلِ السَّيْلِ ثُمَّ يَفْرُغُ اللَّهُ تَعَالَى مِنْ الْقَضَاءِ بَيْنَ الْعِبَادِ وَيَبْقَى رَجُلٌ مُقْبِلٌ بِوَجْهِهِ عَلَى النَّارِ وَهُوَ آخِرُ أَهْلِ الْجَنَّةِ دُخُولًا الْجَنَّةَ فَيَقُولُ أَيْ رَبِّ اصْرِفْ وَجْهِي عَنْ النَّارِ فَإِنَّهُ قَدْ قَشَبَنِي رِيحُهَا وَأَحْرَقَنِي ذَكَاؤُهَا فَيَدْعُو اللَّهَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَدْعُوَهُ ثُمَّ يَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى هَلْ عَسَيْتَ إِنْ فَعَلْتُ ذَلِكَ بِكَ أَنْ تَسْأَلَ غَيْرَهُ فَيَقُولُ لَا أَسْأَلُكَ غَيْرَهُ وَيُعْطِي رَبَّهُ مِنْ عُهُودٍ وَمَوَاثِيقَ مَا شَاءَ اللَّهُ فَيَصْرِفُ اللَّهُ وَجْهَهُ عَنْ النَّارِ فَإِذَا أَقْبَلَ عَلَى الْجَنَّةِ وَرَآهَا سَكَتَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَسْكُتَ ثُمَّ يَقُولُ أَيْ رَبِّ قَدِّمْنِي إِلَى بَابِ الْجَنَّةِ فَيَقُولُ اللَّهُ لَهُ أَلَيْسَ قَدْ أَعْطَيْتَ عُهُودَكَ وَمَوَاثِيقَكَ لَا تَسْأَلُنِي غَيْرَ الَّذِي أَعْطَيْتُكَ وَيْلَكَ يَا ابْنَ ‏ ‏آدَمَ ‏ ‏مَا أَغْدَرَكَ فَيَقُولُ أَيْ رَبِّ وَيَدْعُو اللَّهَ حَتَّى يَقُولَ لَهُ فَهَلْ عَسَيْتَ إِنْ أَعْطَيْتُكَ ذَلِكَ أَنْ تَسْأَلَ غَيْرَهُ فَيَقُولُ لَا وَعِزَّتِكَ فَيُعْطِي رَبَّهُ مَا شَاءَ اللَّهُ مِنْ عُهُودٍ وَمَوَاثِيقَ فَيُقَدِّمُهُ إِلَى بَابِ الْجَنَّةِ فَإِذَا قَامَ عَلَى بَابِ الْجَنَّةِ ‏ ‏انْفَهَقَتْ ‏ ‏لَهُ الْجَنَّةُ فَرَأَى مَا فِيهَا مِنْ الْخَيْرِ وَالسُّرُورِ فَيَسْكُتُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَسْكُتَ ثُمَّ يَقُولُ أَيْ رَبِّ أَدْخِلْنِي الْجَنَّةَ فَيَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى لَهُ أَلَيْسَ قَدْ أَعْطَيْتَ عُهُودَكَ وَمَوَاثِيقَكَ أَنْ لَا تَسْأَلَ غَيْرَ مَا أُعْطِيتَ وَيْلَكَ يَا ابْنَ ‏ ‏آدَمَ ‏ ‏مَا أَغْدَرَكَ فَيَقُولُ أَيْ رَبِّ لَا أَكُونُ أَشْقَى خَلْقِكَ فَلَا يَزَالُ يَدْعُو اللَّهَ حَتَّى يَضْحَكَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى مِنْهُ فَإِذَا ضَحِكَ اللَّهُ مِنْهُ قَالَ ادْخُلْ الْجَنَّةَ فَإِذَا دَخَلَهَا قَالَ اللَّهُ لَهُ ‏ ‏تَمَنَّهْ فَيَسْأَلُ رَبَّهُ ‏ ‏وَيَتَمَنَّى حَتَّى إِنَّ اللَّهَ لَيُذَكِّرُهُ مِنْ كَذَا وَكَذَا حَتَّى إِذَا انْقَطَعَتْ بِهِ الْأَمَانِيُّ قَالَ اللَّهُ تَعَالَى ذَلِكَ لَكَ وَمِثْلُهُ مَعَهُ ‏
‏قَالَ ‏ ‏عَطَاءُ بْنُ يَزِيدَ ‏ ‏وَأَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ ‏ ‏مَعَ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏لَا يَرُدُّ عَلَيْهِ مِنْ حَدِيثِهِ شَيْئًا حَتَّى إِذَا حَدَّثَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏أَنَّ اللَّهَ قَالَ لِذَلِكَ الرَّجُلِ وَمِثْلُهُ مَعَهُ قَالَ ‏ ‏أَبُو سَعِيدٍ ‏ ‏وَعَشَرَةُ أَمْثَالِهِ مَعَهُ يَا ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏مَا حَفِظْتُ إِلَّا قَوْلَهُ ذَلِكَ لَكَ وَمِثْلُهُ مَعَهُ قَالَ ‏ ‏أَبُو سَعِيدٍ ‏ ‏أَشْهَدُ أَنِّي حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَوْلَهُ ذَلِكَ لَكَ وَعَشَرَةُ أَمْثَالِهِ قَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏وَذَلِكَ الرَّجُلُ آخِرُ أَهْلِ الْجَنَّةِ دُخُولًا الْجَنَّةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو الْيَمَانِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعَيْبٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ ‏ ‏وَعَطَاءُ بْنُ يَزِيدَ اللَّيْثِيُّ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏أَخْبَرَهُمَا ‏ ‏أَنَّ النَّاسَ قَالُوا لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ هَلْ نَرَى رَبَّنَا يَوْمَ الْقِيَامَةِ وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِ مَعْنَى حَدِيثِ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ

மக்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! மறுமையில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பௌர்ணமி இரவில் முழு நிலவைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?” என்று கேட்டார்கள். மக்கள், “இல்லை அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?” என்று கேட்டார்கள். மக்கள், “இல்லை அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“அவ்வாறே (மறுமையில் தெளிவாக) இறைவனை நீங்கள் காண்பீர்கள். அல்லாஹ் மறுமை நாளில் மனிதர்களை ஒன்று கூட்டி, “(உலகத்தில்) யார் எதை வழிபட்டுக் கொண்டிருந்தாரோ அவர் அதைப் பின்தொடர்ந்து செல்லட்டும்” என்று கூறுவான். ஆகவே, சூரியனை வழிபட்டுக் கொண்டிருந்தவர்கள் சூரியனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். சந்திரனை வழிபட்டுக் கொண்டிருந்தவர்கள் சந்திரனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். ஷைத்தான்(களான தீய சக்தி)களை வழிபட்டுக் கொண்டிருந்தவர்கள் அவற்றைப் பின் தொடர்ந்து செல்வார்கள். இறுதியில் இந்தச் சமுதாயத்தார் மட்டும் எஞ்சியிருப்பார்கள். அவர்களிடையே நயவஞ்சகர்களும் இருப்பார்கள்.

அப்போது இறைவன் அவர்களிடம், அவர்கள் அறிந்திராத ஒரு தோற்றத்தில் வந்து, “நான் உங்கள் இறைவன்” என்பான். உடனே அவர்கள், “உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக் கோருகிறோம். எங்கள் இறைவன் எங்களிடம் வரும்வரை நாங்கள் இங்கேயே இருப்போம். எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்து கொள்வோம்” என்பர். அப்போது நற்பேறுகளுக்கு உரியவனும் மிக்குயர்ந்தோனுமாகிய அல்லாஹ், அவர்கள் அறிந்து கொள்ளும் தோற்றத்தில் அவர்களிடம், “நான் உங்கள் இறைவன்” என்பான். அதற்கு அவர்கள், “நீயே எங்கள் இறைவன்” என்று கூறியவாறு அவனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அங்கு நரகத்திற்கு மேலே பாலம் அமைக்கப்படும். நானும் என் சமுதாயத்தாருமே (அந்தப் பாலத்தைக்) கடப்பவர்களில் முதலாமவர்களாக இருப்போம். அன்று இறைத்தூதர்களைத் தவிர வேறெவரும் பேசமாட்டார்கள். அந்தச் சூழ்நிலையில் இறைத் தூதர்கள் அனைவரின் பிரார்த்தனையும், “அல்லாஹ்வே! காப்பாற்று; காப்பாற்று” என்பதாகவே இருக்கும். நரகத்(தின் மேலே உள்ள அப்பாலத்)தில் கொக்கிகள் மாட்டப்பட்டிருக்கும். அவை கருவேல மரத்தின் (சஅதான்) முற்களைப் போன்றிருக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வர்ணித்து விட்டு, “கருவேலமரத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” என்று மக்களிடம் கேட்டார்கள். மக்கள், “ஆம் (பார்த்திருக்கிறோம்), அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள்.

(தொடர்ந்து),

“அந்தக் கொக்கிகள் கருவேல மரத்தின் முள்ளைப் போன்றுதான் இருக்கும். ஆயினும், அதன் பருமன் என்னவென்று அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அந்தக் கொக்கிகள் மக்களை அவர்களின் செயல்களின் தன்மைக்கேற்ப கவ்விப் பிடிக்கும். அவர்களில் தமது (பாவச்) செயல்களால் (அங்கேயே) எஞ்சிவிடும் இறைநம்பிக்கையாளரும் இருப்பார். இன்னும் தண்டனை அளிக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டவரும் இருப்பார். இறுதியாக இறைவன், அடியார்களிடையே தீர்ப்பு வழங்கி முடித்தபின், நரகவாசிகளில் தான் நாடிய சிலரைத் தனது கருணையினால் (நரகத்திலிருந்து) வெளியேற்ற விரும்புவான். அதன்படி அல்லாஹ்விற்கு எதையும் இணைகற்பிக்காமல் இருந்து, “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை” என்று உறுதி கூறியவர்களில், தான் கருணை காட்ட நாடிய சிலரை நரகத்திலிருந்து வெளியேற்றுமாறு வானவர்களுக்கு இறைவன் ஆணையிடுவான். நரகத்திலிருக்கும் அவர்களை அவர்களது ஸஜ்தாவின் அடையாளங்களை வைத்து வானவர்கள் இனம் கண்டு கொள்வார்கள். மனிதனி(ன் நெற்றியி)ல் உள்ள ஸஜ்தாவின் அடையாளத்தைத் தவிர மற்றப்பகுதிகளை நரகம் தீண்டுகிறது. ஸஜ்தா அடையாளத்தைத் தீண்டக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துள்ளான். ஆவே, அவர்கள் அங்கமெல்லாம் கருத்து விட்ட நிலையில் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். அப்போது அவர்கள் மீது உயிர்நீர் ஊற்றப்படும். உடனே அவர்கள் உழுநிலத்தில் விதைப்பயிர் முளைத்தெழுவதைப்போல் (புதுப்பொலிவுடன்) நிறம் மாறி விடுவார்கள்.

பிறகு இறைவன் (தன் எல்லா) அடியார்களிடையேயும் தீர்ப்பு வழங்கி முடிப்பான். அப்போது சொர்க்கத்துக்கு உரிய இறுதியான ஒருவர் நரக வாயிலின் எதிரில் எஞ்சியிருப்பார். அவர், “என் இறைவா! நரகத்தின் (வெப்பக்) காற்றால் எனக்கு மூச்சடைக்கிறது. அதன் ஜுவாலை என்னைக் கரித்தெடுக்கிறது. ஆகவே, என் முகத்தை நரகத்தை விட்டு (வேறு பக்கம்) திருப்பிடுவாயாக!” என்று வேண்டி, அல்லாஹ் நாடிய சில பிரார்த்தனைச் சொற்கள் மூலம் அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார். பிறகு அல்லாஹ், “நீ கேட்டதை நான் கொடுத்தால் வேறெதையும் கேட்க மாட்டாயே?” என்று கேட்பான். அதற்கவர், “(இல்லை;) வேறெதையும் உன்னிடம் நான் கேட்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு, அல்லாஹ் நாடிய வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் அவர் தம் இறைவனிடம் வழங்குவார். ஆகவே, இறைவன் அவரது முகத்தை நரகத்தை விட்டு (வேறு பக்கம்) திருப்பி விடுவான். இதையடுத்து அவர் (தூரமாக இருக்கும்) சொர்க்கத்தை முன்னோக்கி, அதைப் பார்த்துக் கொண்டு, அல்லாஹ் நாடிய நேரம்வரை அமைதியாக இருப்பார்.

பிறகு, “என் இறைவா! சொர்க்கத்தின் வாசல்வரை என்னைக் கொண்டு செல்வாயாக!” என்பார். அதற்கு இறைவன் அவரிடம், “இப்போது உனக்கு நான் வழங்கியதைத் தவிர வேறெதையும் என்னிடம் கேட்கமாட்டேன் என நீ வாக்குறுதியும் உறுதிமொழியும் வழங்கவில்லையா? ஆதமின் மகனே! உனக்குக் கேடுதான். என்னே உன்னுடைய வாக்குமாற்றம்!” என்பான். ஆனால், அவர் தொடர்ந்து, “என் இறைவா … ” என்று தொடங்கி அல்லாஹ்வைப் பிரார்த்தித்துக் கொண்டே இருப்பார். அவரிடம் இறைவன், “இதை(யும்) நான் உனக்கு வழங்கி விட்டால் வேறொரு கோரிக்கையையும் நீ முன்வைப்பாயோ?” என்று கேட்பான்.

அதற்கு அவர், “இல்லை; உன் கண்ணியத்தின் மீதாணை! (வேறெதையும் உன்னிடம் நான் கேட்க மாட்டேன்)” என்று சொல்லி விட்டு, அல்லாஹ் நாடிய வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் தம் இறைவனிடம் வழங்குவார். ஆகவே, அல்லாஹ் அவரைச் சொர்க்கத்தின் வாசல்வரை அனுமதிப்பான். அவர் சொர்க்கத்தின் வாசலில் நிற்கும் போது அவருக்காகச் சொர்க்கம் திறந்து கொள்ளும். உடனே அவர் அதிலுள்ள உல்லாசமான சுகங்களைக் காணும்போது அல்லாஹ் நாடிய நேரம்வரைதான் அமைதியாக இருப்பார். பிறகு, “என் இறைவா! என்னைச் சொர்க்கத்திற்குள் அனுப்புவாயாக!” என்று கேட்பார். அப்போது அவரிடம் இறைவன், “இப்போது உனக்கு வழங்கப்பட்டதைத் தவிர வேறெதையும் என்னிடம் கேட்பதில்லை என்று கூறி என்னிடம் வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் நீ வழங்கினாயே! ஆதமின் மகனே! உனக்குக் கேடுதான். என்னே உன்னுடைய வாக்குமாற்றம்!” என்பான். அதற்கு அவர், “என் இறைவா! நான் உன் படைப்புகளிலேயே நற்கதியற்றவனாக ஆகி விடக்கூடாது” என்று கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டே இருப்பார். இறுதியில் அவரைக் கண்டு இறைவன் சிரித்து விட்டு, “சொர்க்கத்திற்குள் நுழைந்துகொள்” என்று கூறி விடுவான். சொர்க்கத்திற்குள் அவர் நுழைந்த பின், “நீ (விரும்பிய) இன்னதை ஆசைப்படலாம்” என்று அவரிடம் இறைவன் கூறுவான். அவ்வாறே அவர் ஆசைப்பட்டுத் தம் இறைவனிடம் கோருவார். அப்போது இறைவன், “இன்னின்னதை நீ ஆசைப்படு” என்று அவருக்கு நினைவுபடுத்துவான். இறுதியில் அவருடைய ஆசைகள் அனைத்தும் அடங்கி விடும்போது, “இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்” என்று மிக்குயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

குறிப்பு:

இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும்போது அவர்களுடனிருந்த அபூசயீத் அல்குத்ரீ (ரலி) மறுப்பேதும் தெரிவிக்கவில்லை. ஆனால், “இதுவும் உனக்குக் கிடைக்கும்; இன்னொரு மடங்கும் கிடைக்கும் என்று இறைவன் கூறுவான்” என்று அபூஹுரைரா (ரலி) சொல்லிவந்தபோது அபூசயீத் (ரலி) (குறுக்கிட்டு) “இதுவும் இதைப் போன்று பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் கூறுவான் என்றல்லவா ஹதீஸ் இருக்கிறது அபூஹுரைரா!” என்றார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள், “‘இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் கிடைக்கும் என்றே நான் மனனமிட்டிருந்தேன்” என்று கூறினார்கள். அதற்கு அபூசயீத் (ரலி), “இதுவும் இதைப் போன்று பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும் என்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் மனனமிட்டுள்ளேன் என்று அறுதியிட்டுக் கூறுகிறேன்” என்றார்கள் என்று அறிவிப்பாளர் அதாஉ பின் யஸீத் (ரஹ்) கூறுகிறார்.

அதாஉ பின் யஸீத் (ரஹ்) மற்றும் ஸயீதிப்னுல் முஸய்யிப் (ரஹ்) ஆகிய இருவர் வழி அறிவிப்பில், நபி (ஸல்) அவர்களிடம் மக்கள், “அல்லாஹ்வின் தூதரே, மறுமை நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண்போமா?” என்று கேட்டார்கள் என்ற குறிப்போடு மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம் பெற்றுள்ளன.