அத்தியாயம்: 1, பாடம்: 95, ஹதீஸ் எண்: 325

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ الْمُثَنَّى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مَيْمُونٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏

‏كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي قُبَّةٍ نَحْوًا مِنْ أَرْبَعِينَ رَجُلًا فَقَالَ ‏ ‏أَتَرْضَوْنَ أَنْ تَكُونُوا رُبُعَ أَهْلِ الْجَنَّةِ قَالَ قُلْنَا نَعَمْ فَقَالَ أَتَرْضَوْنَ أَنْ تَكُونُوا ثُلُثَ أَهْلِ الْجَنَّةِ فَقُلْنَا نَعَمْ فَقَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَرْجُو أَنْ تَكُونُوا نِصْفَ أَهْلِ الْجَنَّةِ وَذَاكَ أَنَّ الْجَنَّةَ لَا يَدْخُلُهَا إِلَّا نَفْسٌ مُسْلِمَةٌ وَمَا أَنْتُمْ فِي أَهْلِ الشِّرْكِ إِلَّا كَالشَّعْرَةِ الْبَيْضَاءِ فِي جِلْدِ الثَّوْرِ الْأَسْوَدِ أَوْ كَالشَّعْرَةِ السَّوْدَاءِ فِي جِلْدِ الثَّوْرِ الْأَحْمَرِ ‏

நாங்கள் சுமார் நாற்பது பேர் ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு (தோல்) கூடாரத்தில் இருந்தோம். அப்போது அவர்கள், “சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு மனநிறைவா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம்” என்று சொன்னோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு மனநிறைவா?” என்று கேட்டார்கள். அதற்கும் நாங்கள் “ஆம்” என்றோம். “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் பாதிப் பேராக (என் சமுதாயத்தாரான) நீங்கள் இருக்க வேண்டுமென்றே நான் எதிர்பார்க்கிறேன். அதற்குக் காரணம், சொர்க்கத்தில் முஸ்லிம் ஆன்மாவைத் தவிர வேறெவரும் நுழையமுடியாது. இணைவைப்பாளர்களுடன் ஒப்பிடும் போது நீங்கள் கறுப்புக்காளை மாட்டின் தோலிலுள்ள வெள்ளை முடியைப் போன்று – அல்லது – சிவப்புக்காளை மாட்டின் தோலிலுள்ள கறுப்பு முடியைப் போன்று (தனித்துவமாய் காணப்படுவீர்கள்)” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி).

Share this Hadith:

Leave a Comment