அத்தியாயம்: 11, பாடம்: 10, ஹதீஸ் எண்: 1554

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ خَازِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَاصِمٌ ‏ ‏عَنْ ‏ ‏حَفْصَةَ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ عَطِيَّةَ ‏ ‏قَالَتْ ‏
‏لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ ‏ ” ‏يُبَايِعْنَكَ عَلَى أَنْ لَا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا“ ‏ ” ‏وَلَا يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ ‏“

الَتْ كَانَ مِنْهُ ‏ ‏النِّيَاحَةُ ‏ ‏قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِلَّا آلَ فُلَانٍ فَإِنَّهُمْ كَانُوا ‏ ‏أَسْعَدُونِي ‏ ‏فِي الْجَاهِلِيَّةِ فَلَا بُدَّ لِي مِنْ أَنْ ‏ ‏أُسْعِدَهُمْ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَّا آلَ فُلَانٍ

“நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்தார்களாயின் …” (60:12) என்று தொடங்கும் இறைவசனம் அருளப்பெற்றபோது, ஒப்பாரி வைப்பது தொடர்பான உறுதி மொழியும் அதில் பொதிந்திருந்தது . அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே, இன்னாரின் குடும்பத்தாருக்கு நான் ஒப்பாரி வைப்பதற்கு மட்டும் எனக்கு விலக்கு அளியுங்கள். ஏனெனில், அறியாமைக் காலத்தில் அவர்கள் (என்னுடன் சேர்ந்து என் உறவினர் ஒருவருக்காக ஒப்பாரி வைத்து) எனக்கு உதவி புரிந்தனர். எனவே, (பதிலுக்கு அவர்களுடன் சேர்ந்து நான் ஒப்பாரி வைத்து) அவர்களுக்குப் பிரதியுதவி செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன்” என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இன்னாரின் குடும்பத்திற்குத் தவிர” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உம்மு அத்திய்யா (ரலி).

அத்தியாயம்: 11, பாடம்: 10, ஹதீஸ் எண்: 1553

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَسْبَاطٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏حَفْصَةَ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ عَطِيَّةَ ‏ ‏قَالَتْ ‏

‏أَخَذَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الْبَيْعَةِ أَلَّا ‏ ‏تَنُحْنَ ‏ ‏فَمَا وَفَتْ مِنَّا غَيْرُ خَمْسٍ مِنْهُنَّ ‏ ‏أُمُّ سُلَيْمٍ

“ஒப்பாரி வைக்கக் கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். எனினும், இந்த வாக்குறுதியை எங்களில் ஐந்து பெண்களைத் தவிர வேறெவரும் நிறைவேற்றவில்லை. அவர்களில் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களும் ஒருவராவார்.

அறிவிப்பாளர் : உம்மு அத்திய்யா (ரலி) வழியாக ஹஃப்ஸா பின்த் ஸீரீன் (ரஹ்).

அத்தியாயம்: 11, பாடம்: 10, ஹதீஸ் எண்: 1552

حَدَّثَنِي ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ عَطِيَّةَ ‏ ‏قَالَتْ ‏

‏أَخَذَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَعَ الْبَيْعَةِ أَلَّا ‏ ‏نَنُوحَ ‏ ‏فَمَا وَفَتْ مِنَّا امْرَأَةٌ إِلَّا خَمْسٌ ‏ ‏أُمُّ سُلَيْمٍ ‏ ‏وَأُمُّ الْعَلَاءِ ‏ ‏وَابْنَةُ أَبِي سَبْرَةَ ‏ ‏امْرَأَةُ ‏ ‏مُعَاذٍ ‏ ‏أَوْ ابْنَةُ ‏ ‏أَبِي سَبْرَةَ ‏ ‏وَامْرَأَةُ ‏ ‏مُعَاذٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடம் (இறைநம்பிக்கைக்கான) உறுதி மொழி வாங்கியபோது, ’ஒப்பாரிவைக்கக் கூடாது’ என்றும் உறுதிமொழியையும் வாங்கினார்கள். எனினும், இந்த வாக்குறுதியை எங்களில் ஐந்து பெண்களைத் தவிர வேறெவரும் நிறைவேற்றவில்லை. அப்பெண்கள்: உம்மு சுலைம் (ரலி), உம்முல் அலா (ரலி), முஆத் (ரலி) அவர்களின் துணைவியான அபூஸப்ராவின் மகள் (அல்லது அபூஸப்ராவின் மகள்) மற்றும் முஆத் (ரலி) அவர்களின் துணைவி.

அறிவிப்பாளர் : உம்மு அத்திய்யா (ரலி) வழியாக முஹம்மது பின் ஸீரீன் (ரஹ்).

அத்தியாயம்: 11, பாடம்: 10, ஹதீஸ் எண்: 1551

و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏يَحْيَى بْنَ سَعِيدٍ ‏ ‏يَقُولُ أَخْبَرَتْنِي ‏ ‏عَمْرَةُ ‏ ‏أَنَّهَا سَمِعَتْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏تَقُولُ ‏

‏لَمَّا جَاءَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَتْلُ ‏ ‏ابْنِ حَارِثَةَ ‏ ‏وَجَعْفَرِ بْنِ أَبِي طَالِبٍ ‏ ‏وَعَبْدِ اللَّهِ بْنِ رَوَاحَةَ ‏ ‏جَلَسَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُعْرَفُ فِيهِ الْحُزْنُ قَالَتْ وَأَنَا أَنْظُرُ مِنْ ‏ ‏صَائِرِ ‏ ‏الْبَابِ شَقِّ الْبَابِ فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ نِسَاءَ ‏ ‏جَعْفَرٍ ‏ ‏وَذَكَرَ بُكَاءَهُنَّ فَأَمَرَهُ أَنْ يَذْهَبَ ‏ ‏فَيَنْهَاهُنَّ فَذَهَبَ فَأَتَاهُ فَذَكَرَ أَنَّهُنَّ لَمْ يُطِعْنَهُ فَأَمَرَهُ الثَّانِيَةَ أَنْ يَذْهَبَ ‏ ‏فَيَنْهَاهُنَّ فَذَهَبَ ثُمَّ أَتَاهُ فَقَالَ وَاللَّهِ لَقَدْ ‏ ‏غَلَبْنَنَا ‏ ‏يَا رَسُولَ اللَّهِ قَالَتْ فَزَعَمَتْ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏اذْهَبْ ‏ ‏فَاحْثُ ‏ ‏فِي أَفْوَاهِهِنَّ مِنْ التُّرَابِ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَقُلْتُ ‏ ‏أَرْغَمَ اللَّهُ أَنْفَكَ ‏ ‏وَاللَّهِ مَا تَفْعَلُ مَا أَمَرَكَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَمَا تَرَكْتَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ الْعَنَاءِ ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الصَّمَدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ مُسْلِمٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ ‏ ‏وَمَا تَرَكْتَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ ‏ ‏الْعِيِّ

ஸைத் பின் ஹாரிஸா (ரலி), ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி), அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) ஆகியோர் (மூத்தாப் போரில்) கொல்லப்பட்ட செய்தி வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார்கள். நான் கதவிடுக்கில் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் வந்து “அல்லாஹ்வின் தூதரே, ஜஅஃபர் (ரலி) அவர்களின் குடும்பப் பெண்கள் (ஒப்பாரி வைத்து) அழுகின்றனர்” எனக் கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அவ்வாறு அழுவதைத்) தடுக்கும்படி கட்டளையிட்டார்கள். அவர் சென்றுவிட்டுத் திரும்பிவந்து “அவர்கள் எனது சொல்லுக்குக் கட்டுப்படவில்லை” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “நீர் சென்று அவர்களைத் தடுத்து நிறுத்துவீராக!” என இரண்டாவது முறையும் கட்டளையிட்டார்கள். அவர் சென்றுவிட்டு (மூன்றாவது முறையாக) வந்து “அல்லாஹ்வின் மீதாணையாக, எம்மை அப்பெண்கள் மிகைத்து விட்டனர் (அவர்களை எங்களால் அமைதிப்படுத்த முடிய வில்லை), அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீர் சென்று, அப்பெண்களின் வாயில் மண்ணை அள்ளிப் போடும்” எனக் (கடிந்து) கூறினார்கள் என நான் நினைக்கிறேன். நான் (அவரை நோக்கி), “அல்லாஹ் உமது மூக்கை மண்ணைக் கவ்வச் செய்வானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உமக்குக் கட்டளையிட்டதையும் உம்மால் செய்ய முடியவில்லை; இன்னும் அவர்களைத் துன்பத்துக்கு உள்ளாக்குவதையும் நீர் நிறுத்தவில்லை” என்று கூறினேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு : அப்துல் அஸீஸ் பின் முஸ்லிம் (ரஹ்) அறிவிப்பில், (துன்பத்துக்குள்ளாக்குவது என்பதைக் குறிக்க ‘அல்அநாஉ’ எனும் சொல்லுக்கு பதிலாக) ‘அல்இய்யு’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.

அத்தியாயம்: 11, பாடம்: 10, ஹதீஸ் எண்: 1550

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَفَّانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبَانُ بْنُ يَزِيدَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حَبَّانُ بْنُ هِلَالٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى ‏ ‏أَنَّ ‏ ‏زَيْدًا ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏أَبَا سَلَّامٍ ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏أَبَا مَالِكٍ الْأَشْعَرِيَّ ‏ ‏حَدَّثَهُ ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أَرْبَعٌ فِي أُمَّتِي مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ لَا يَتْرُكُونَهُنَّ الْفَخْرُ فِي الْأَحْسَابِ وَالطَّعْنُ فِي الْأَنْسَابِ وَالْاسْتِسْقَاءُ بِالنُّجُومِ ‏ ‏وَالنِّيَاحَةُ ‏ ‏وَقَالَ النَّائِحَةُ إِذَا لَمْ تَتُبْ قَبْلَ مَوْتِهَا تُقَامُ يَوْمَ الْقِيَامَةِ وَعَلَيْهَا ‏ ‏سِرْبَالٌ ‏ ‏مِنْ ‏ ‏قَطِرَانٍ ‏ ‏وَدِرْعٌ مِنْ جَرَبٍ

“என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள் அவற்றை (இலேசில்) கைவிடமாட்டார்கள். (அவை:) குலப்பெருமை பாராட்டுவது, (அடுத்தவரின்) பாரம்பரியத்தைக் குறைகூறுவது, கிரக(மாற்ற)ங்களால் மழை பொழியும் என எதிர் பார்ப்பது மற்றும் ஒப்பாரி வைத்து அழுவது.

ஒப்பாரி வைக்கும் வழக்கமுடைய பெண், தான் இறப்பதற்கு முன் பாவமன்னிப்புக் கோரி (அதிலிருந்து) மீளாவிட்டால், மறுமை நாளில் தார்-ஆல் ஆன நீளமான அங்கியும் சொறிசிரங்குச் சட்டையும் அணிந்தவளாக அவள் நிறுத்தப் படுவாள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமாலிக் கஅப் பின் ஆஸிம் அல்அஷ்அரீ (ரலி)