அத்தியாயம்: 11, பாடம்: 17, ஹதீஸ் எண்: 1574

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏حَيْوَةُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو صَخْرٍ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قُسَيْطٍ ‏ ‏أَنَّهُ حَدَّثَهُ أَنَّ ‏ ‏دَاوُدَ بْنَ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏أَنَّهُ ‏

‏كَانَ قَاعِدًا عِنْدَ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏إِذْ طَلَعَ ‏ ‏خَبَّابٌ ‏ ‏صَاحِبُ الْمَقْصُورَةِ فَقَالَ يَا ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏أَلَا تَسْمَعُ مَا يَقُولُ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ خَرَجَ مَعَ جَنَازَةٍ مِنْ بَيْتِهَا وَصَلَّى عَلَيْهَا ثُمَّ تَبِعَهَا حَتَّى تُدْفَنَ كَانَ لَهُ ‏ ‏قِيرَاطَانِ ‏ ‏مِنْ أَجْرٍ كُلُّ ‏ ‏قِيرَاطٍ ‏ ‏مِثْلُ ‏ ‏أُحُدٍ ‏ ‏وَمَنْ صَلَّى عَلَيْهَا ثُمَّ رَجَعَ كَانَ لَهُ مِنْ الْأَجْرِ مِثْلُ ‏ ‏أُحُدٍ ‏

‏فَأَرْسَلَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏خَبَّابًا ‏ ‏إِلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏يَسْأَلُهَا عَنْ قَوْلِ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏ثُمَّ يَرْجِعُ إِلَيْهِ فَيُخْبِرُهُ مَا قَالَتْ وَأَخَذَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏قَبْضَةً ‏ ‏مِنْ ‏ ‏حَصْبَاءِ ‏ ‏الْمَسْجِدِ يُقَلِّبُهَا فِي يَدِهِ حَتَّى رَجَعَ إِلَيْهِ الرَّسُولُ فَقَالَ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏صَدَقَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏فَضَرَبَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏بِالْحَصَى الَّذِي كَانَ فِي يَدِهِ الْأَرْضَ ثُمَّ قَالَ ‏ ‏لَقَدْ فَرَّطْنَا فِي ‏ ‏قَرَارِيطَ ‏ ‏كَثِيرَةٍ

நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது பண்ணை வீட்டுக் கப்பாப் அல்மதனீ (ரலி) அங்கு வந்து, “அப்துல்லாஹ் பின் உமர் அவர்களே! ஒரு ஜனாஸாவின் வீட்டிலிருந்து அதனுடன் புறப்பட்டுச் சென்று, (ஜனாஸாத் தொழுகை) தொழுதுவிட்டு, அடக்கம் செய்யப்படும்வரை அதைப் பின்தொடர்கின்றவருக்கு இரண்டு ‘கீராத்’ நன்மை உண்டு; ஒவ்வொரு ‘கீராத்’தும் உஹுத் மலை அளவுடையதாகும்; (ஜனாஸாத்) தொழுது விட்டுத் திரும்பிவிடுகின்றவருக்கு உஹுத் மலையளவு (ஒரு ‘கீராத்’) நன்மை உண்டு’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னதாக அபூஹுரைரா (ரலி) கூறுகின்றாரே?” என்று கேட்டார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), கப்பாபை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அது பற்றிக் கேட்டுவிட்டு அவர்கள் அளிக்கும் பதிலைத் தம்மிடம் வந்து தெரிவிக்குமாறு அனுப்பிவைத்துவிட்டு, போனவர் திரும்பி வரும்வரை பள்ளிவாசல் தரையில் கிடந்த சிறு கற்களில் ஒரு கைப்பிடியளவு அள்ளித் தமது கையில் வைத்து கிளறிக்கொண்டிருந்தார்கள்.

(கப்பாப் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று கேட்டதற்கு) ஆயிஷா (ரலி), “அபூஹுரைரா சொன்னது உண்மையே” என்றார்கள். (இதைக் கேள்விப்பட்ட) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) தமது கையிலிருந்த சிறு கற்களை கீழே எறிந்துவிட்டு, “நாம் ஏராளமான ‘கீராத்'(நன்மை)களைத் தவற விட்டுவிட்டோம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக ஆமிர் பின் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்).