அத்தியாயம்: 11, பாடம்: 22, ஹதீஸ் எண்: 1585

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَعَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْمُهَلَّبِ ‏ ‏عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏إِنَّ أَخًا لَكُمْ قَدْ مَاتَ فَقُومُوا فَصَلُّوا عَلَيْهِ ‏ ‏يَعْنِي ‏ ‏النَّجَاشِيَ ‏

‏وَفِي رِوَايَةِ ‏ ‏زُهَيْرٍ ‏ ‏إِنَّ أَخَاكُمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (நஜாஷீ மன்னர் இறந்த அன்று) “உங்கள் சகோதரர் ஒருவர் -அதாவது நஜாஷீ- இறந்துவிட்டார். எனவே, அவருக்காக எழுந்து தொழுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 22, ஹதீஸ் எண்: 1584

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْغُبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُلَيَّةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ أَخًا لَكُمْ قَدْ مَاتَ فَقُومُوا فَصَلُّوا عَلَيْهِ قَالَ فَقُمْنَا فَصَفَّنَا صَفَّيْنِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (நஜாஷீ மன்னர் இறந்த அன்று) “உங்கள் சகோதரர் ஒருவர் இறந்துவிட்டார். எனவே, அவருக்காக எழுந்து தொழுது கொள்ளுங்கள்!” என்று கூறினார்கள். நாங்கள் எழுந்து இரு வரிசையாக அணி வகுத்தோம்.

அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 22, ஹதீஸ் எண்: 1583

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَاتَ الْيَوْمَ عَبْدٌ لِلَّهِ صَالِحٌ ‏ ‏أَصْحَمَةُ ‏ ‏فَقَامَ فَأَمَّنَا وَصَلَّى عَلَيْهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு நாள்), “இன்று அல்லாஹ்வின் நல்லடியார் (நஜாஷீ மன்னர்) அஸ்ஹமா இறந்து விட்டார்” என்று கூறினார்கள். பின்னர் எழுந்து எங்களுக்கு முன்னால் நின்று அவருக்காக (இறுதித் தொழுகை) தொழுதார்கள்.

அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 22, ஹதீஸ் எண்: 1582

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏عَنْ ‏ ‏سَلِيمِ بْنِ حَيَّانَ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مِينَاءَ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَّى عَلَى ‏ ‏أَصْحَمَةَ النَّجَاشِيِّ ‏ ‏فَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘அஸ்ஹமா’ எனும் நஜாஷீ(மன்னரு)க்கு நான்கு தக்பீர் கூறி(ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.

அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி).

அத்தியாயம்: 11, பாடம்: 22, ஹதீஸ் எண்: 1581

و حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عُقَيْلُ بْنُ خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏وَأَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّهُمَا حَدَّثَاهُ عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏

‏نَعَى ‏ ‏لَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏النَّجَاشِيَ ‏ ‏صَاحِبَ ‏ ‏الْحَبَشَةِ ‏ ‏فِي الْيَوْمِ الَّذِي مَاتَ فِيهِ فَقَالَ ‏ ‏اسْتَغْفِرُوا لِأَخِيكُمْ ‏
‏قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏وَحَدَّثَنِي ‏ ‏سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏حَدَّثَهُ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَفَّ بِهِمْ بِالْمُصَلَّى فَصَلَّى فَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعَ تَكْبِيرَاتٍ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَحَسَنٌ الْحُلْوَانِيُّ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ وَهُوَ ابْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏كَرِوَايَةِ ‏ ‏عُقَيْلٍ ‏ ‏بِالْإِسْنَادَيْنِ جَمِيعًا

அபிசீனிய மன்னர் நஜாஷீ இறந்த அன்றே அவரது மரணச் செய்தியை எங்களிடம் அறிவித்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு : ஸயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களிடமிருந்து இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அறிவிக்கும் அறிவிப்பில், “பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களை தொழுகைத் திடலில் அணிவகுக்கச் செய்து நான்கு தக்பீர்கள் கூறி ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்” என அபூஹுரைரா (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 11, பாடம்: 22, ஹதீஸ் எண்: 1580

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَعَى ‏ ‏لِلنَّاسِ ‏ ‏النَّجَاشِيَ ‏ ‏فِي الْيَوْمِ الَّذِي مَاتَ فِيهِ فَخَرَجَ بِهِمْ إِلَى الْمُصَلَّى وَكَبَّرَ أَرْبَعَ تَكْبِيرَاتٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (அபிசீனிய மன்னர்) நஜாஷீ இறந்த அன்றே அவரது மரணச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு மக்களுடன் ‘முஸல்லா’ எனும் தொழும் திடலுக்குப் புறப்பட்டுச் சென்று (‘அல்லாஹு அக்பர்’ என்று) நான்கு தக்பீர்’கள் கூறி(ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)