அத்தியாயம்: 11, பாடம்: 23, ஹதீஸ் எண்: 1589

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏وَقَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ‏ ‏قَالَ ‏
‏كَانَ ‏ ‏زَيْدٌ ‏ ‏يُكَبِّرُ عَلَى جَنَائِزِنَا أَرْبَعًا وَإِنَّهُ كَبَّرَ عَلَى جَنَازَةٍ خَمْسًا فَسَأَلْتُهُ فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُكَبِّرُهَا

எங்களில் இறந்தவர்களுக்கு ஸைத் பின் அர்கம் (ஜனாஸாத் தொழுகை) தொழுவிக்கும்போது, (பெரும்பாலும்) நான்கு தக்பீர்கள் கூறுவார்கள். (ஆனால்) ஒரு ஜனாஸாத் தொழுகையின் போது ஐந்து தக்பீர்கள் கூறினார்கள். இதுபற்றி நான் அவர்களிடம் கேட்டதற்கு “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (சில வேளைகளில்) ஐந்து தக்பீர்கள் கூறுபவர்களாய் இருந்தார்கள்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸைத் பின் அர்கம் (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்)

அத்தியாயம்: 11, பாடம்: 23, ஹதீஸ் எண்: 1588

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏وَأَبُو كَامِلٍ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ الْجَحْدَرِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي كَامِلٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ وَهُوَ ابْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ الْبُنَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي رَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏

‏أَنَّ ‏ ‏امْرَأَةً سَوْدَاءَ ‏ ‏كَانَتْ ‏ ‏تَقُمُّ ‏ ‏الْمَسْجِدَ ‏ ‏أَوْ شَابًّا ‏ ‏فَفَقَدَهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَأَلَ عَنْهَا ‏ ‏أَوْ عَنْهُ ‏ ‏فَقَالُوا مَاتَ قَالَ أَفَلَا كُنْتُمْ ‏ ‏آذَنْتُمُونِي ‏ ‏قَالَ فَكَأَنَّهُمْ ‏ ‏صَغَّرُوا ‏ ‏أَمْرَهَا ‏ ‏أَوْ أَمْرَهُ ‏ ‏فَقَالَ دُلُّونِي عَلَى قَبْرِهِ فَدَلُّوهُ فَصَلَّى عَلَيْهَا ثُمَّ قَالَ ‏ ‏إِنَّ هَذِهِ الْقُبُورَ مَمْلُوءَةٌ ظُلْمَةً عَلَى أَهْلِهَا وَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُنَوِّرُهَا لَهُمْ بِصَلَاتِي عَلَيْهِمْ

மஸ்ஜிதுந் நபவீயைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்த கரும் பெண் அல்லது இளைஞர் ஒருவரைக் காணாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விசாரித்தார்கள். “அவர் இறந்துவிட்டார்” என மக்கள் தெரிவித்தனர். “நீங்கள் எனக்குத் தெரிவித்திருக்கக்கூடாதா?” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள். அவர் (இறந்த) விஷயத்தை மக்கள் அற்பமாகக் கருதிவிட்டனர் போலும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவரது மண்ணறையை எனக்குக் காட்டுங்கள்” என்று கூறினார்கள். மக்கள் அதைக் காட்டியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அங்கு(ச்சென்று) அவருக்காக (ஜனாஸாத்) தொழுகை நடத்தினார்கள். பிறகு “இந்த அடக்கத்தலங்கள், அவற்றில் வசிப்போருக்கு இருள் மண்டிக் காணப்படுகின்றன. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், எனது தொழுகையின் மூலம் அவற்றில் அவர்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 23, ஹதீஸ் எண்: 1587

و حَدَّثَنِي ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عَرْعَرَةَ السَّامِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏غُنْدَرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏حَبِيبِ بْنِ الشَّهِيدِ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَّى عَلَى قَبْرٍ

நபி (ஸல்), ஒரு மண்ணறை அருகில் (அதற்கான ஜனாஸாத் தொழுகை) தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 11, பாடம்: 23, ஹதீஸ் எண்: 1586

حَدَّثَنَا ‏ ‏حَسَنُ بْنُ الرَّبِيعِ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ ‏ ‏عَنْ ‏ ‏الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَّى عَلَى قَبْرٍ بَعْدَ مَا دُفِنَ فَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا ‏

‏قَالَ ‏ ‏الشَّيْبَانِيُّ ‏ ‏فَقُلْتُ ‏ ‏لِلشَّعْبِيِّ ‏ ‏مَنْ حَدَّثَكَ بِهَذَا ‏ ‏قَالَ الثِّقَةُ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ ‏ ‏هَذَا لَفْظُ حَدِيثِ ‏ ‏حَسَنٍ ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏ابْنِ نُمَيْرٍ ‏ ‏قَالَ انْتَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى قَبْرٍ رَطْبٍ فَصَلَّى عَلَيْهِ وَصَفُّوا خَلْفَهُ وَكَبَّرَ أَرْبَعًا قُلْتُ ‏ ‏لِعَامِرٍ ‏ ‏مَنْ حَدَّثَكَ قَالَ الثِّقَةُ مَنْ شَهِدَهُ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏حَسَنُ بْنُ الرَّبِيعِ ‏ ‏وَأَبُو كَامِلٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏كُلُّ هَؤُلَاءِ ‏ ‏عَنْ ‏ ‏الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ وَلَيْسَ فِي حَدِيثِ أَحَدٍ مِنْهُمْ أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏وَهْبِ بْنِ جَرِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ أَبِي خَالِدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو غَسَّانَ مُحَمَّدُ بْنُ عَمْرٍو الرَّازِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ الضُّرَيْسِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَصِينٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي صَلَاتِهِ عَلَى الْقَبْرِ نَحْوَ حَدِيثِ ‏ ‏الشَّيْبَانِيِّ ‏ ‏لَيْسَ فِي حَدِيثِهِمْ وَكَبَّرَ أَرْبَعًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு பிரேதம் அடக்கம் செய்யப்பட்ட பின் அதன் மண்ணறை அருகில் நின்று நான்கு தக்பீர்’கள் கூறி(ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள் என (ஆமிர் பின் ஷராஹீல்) அஷ்ஷஅபீ (ரஹ்) கூறினார்.

நான் “இதை உங்களுக்கு அறிவித்தவர் யார்?” என அஷ்ஷஅபீ அவர்களிடம் கேட்டேன். அதற்கு “நம்பத் தகுந்த வலுவான அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அஷ்ஷஅபி (ரஹ்) வழியாக அஷ்ஷைபானீ (ரஹ்)

குறிப்புகள் :

மேற்காணும் சொற்கள், ஹஸன் பின் அர்ரபீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இடம்பெற்றவையாகும்.

முஹம்மத் பின் அப்தில்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஈரம் உலர்ந்திராத (புதியதொரு) மண்ணறையை நோக்கிச் சென்று, நான்கு தக்பீர்’கள் கூறி தொழுவித்தார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதனர்” என இடம்பெற்றுள்ளது.

ஷைபானீ (ரஹ்) கூறுகின்றார்: நான் ஆமிர் பின் ஷராஹீல் (அஷ்ஷஅபி) அவர்களிடம் “(இதை) உங்களுக்கு அறிவித்தவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு, “நம்பத் தகுந்தவரும் (நிகழ்ச்சியில்) கலந்துகொண்டவருமான இப்னு அப்பாஸ் அவர்கள்தாம்” என்றார்கள்.

மேற்காணும் ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து மேலும் பல அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் எதிலும் நபி (ஸல்) அத்தொழுகையில், “நான்கு தக்பீர்கள் கூறினார்கள்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.