அத்தியாயம்: 11, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1599

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مَسْعُودَ بْنَ الْحَكَمِ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عَلِيٍّ ‏ ‏قَالَ ‏

‏رَأَيْنَا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَامَ فَقُمْنَا وَقَعَدَ فَقَعَدْنَا ‏ ‏يَعْنِي فِي الْجَنَازَةِ ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ ‏ ‏وَعُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَحْيَى وَهُوَ الْقَطَّانُ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஆரம்பக் காலத்தில்) ஜனாஸாவைக் கண்டு எழுந்து நின்றதைப் பார்த்தபோது நாங்களும் நின்றோம்; (பிற்காலத்தில்) அவர்கள் (எழாமல்) உட்கார்ந்துவிட்டபோது நாங்களும் உட்கார்ந்துவிட்டோம்” என்று அலீ (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : மஸ்ஊத் பின் அல்ஹகம் (ரலி).

அத்தியாயம்: 11, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1598

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الثَّقَفِيِّ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏يَحْيَى بْنَ سَعِيدٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏وَاقِدُ بْنُ عَمْرِو بْنِ سَعْدِ بْنِ مُعَاذٍ الْأَنْصَارِيُّ ‏ ‏أَنَّ ‏ ‏نَافِعَ بْنَ جُبَيْرٍ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏مَسْعُودَ بْنَ الْحَكَمِ الْأَنْصَارِيَّ ‏ ‏أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ ‏ ‏يَقُولُا ‏ ‏فِي شَأْنِ الْجَنَائِزِ ‏

‏إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَامَ ثُمَّ قَعَدَ وَإِنَّمَا حَدَّثَ بِذَلِكَ لِأَنَّ ‏ ‏نَافِعَ بْنَ جُبَيْرٍ ‏ ‏رَأَى ‏ ‏وَاقِدَ بْنَ عَمْرٍو ‏ ‏قَامَ حَتَّى وُضِعَتْ الْجَنَازَةُ ‏

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஆரம்பக் காலத்தில்) ஜனாஸாவுக்காக எழுந்து நின்றார்கள்; பிற்காலத்தில் உட்கார்ந்துவிட்டார்கள்” என்று ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது தொடர்பாக அலீ பின் அபீதாலிப் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : மஸ்ஊத் பின் அல்ஹகம் அல்அன்ஸாரி (ரலி).

குறிப்பு : “வாகித் பின் அம்ரு (ரஹ்) ஜனாஸா வைக்கப்படும்வரை நின்றுகொண்டிருப்பதைக் கண்டபோதுதான் நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) இந்த ஹதீஸை அறிவித்தார்” என்று அறிவிப்பாளர்களுள் ஒருவரான யஹ்யா பின சயீத் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 11, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1597

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏وَاقِدِ بْنِ عَمْرِو بْنِ سَعْدِ بْنِ مُعَاذٍ ‏ ‏أَنَّهُ قَالَ ‏

‏رَآنِي ‏ ‏نَافِعُ بْنُ جُبَيْرٍ ‏ ‏وَنَحْنُ فِي جَنَازَةٍ قَائِمًا وَقَدْ جَلَسَ يَنْتَظِرُ أَنْ ‏ ‏تُوضَعَ ‏ ‏الْجَنَازَةُ فَقَالَ لِي مَا يُقِيمُكَ فَقُلْتُ أَنْتَظِرُ أَنْ تُوضَعَ الْجَنَازَةُ لِمَا يُحَدِّثُ ‏ ‏أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ ‏ ‏فَقَالَ ‏ ‏نَافِعٌ ‏ ‏فَإِنَّ ‏ ‏مَسْعُودَ بْنَ الْحَكَمِ ‏ ‏حَدَّثَنِي عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏قَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ قَعَدَ

நாங்கள் ஒரு நல்லடக்க நிகழ்ச்சியில் இருந்தபோது நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) ஜனாஸா கீழே வைக்கப்படுவதை எதிர்பார்த்து உட்கார்ந்துகொண்டிருந்தார். நான் நின்றுகொண்டே இருந்ததைக் கண்டு, “ஏன் நிற்கின்றீர்கள்?” என்று என்னிடம் கேட்டார். நான், “ஜனாஸா வைக்கப்படுவதை எதிர்பார்த்து நின்றுகொண்டிருப்பதற்கு அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கும் ஒரு ஹதீஸே காரணம்” என்றேன்.

அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (பிரேதத்தைக் கண்டால் ஆரம்பக் காலத்தில்) எழுந்து நின்றார்கள். பிற்காலத்தில் உட்கார்ந்து விட்டார்கள்” என அலீ பின் அபீதாலிப் (ரலி) கூறியதாக மஸ்ஊத் பின் அல்ஹகம் (ரலி) தமக்கு அறிவித்ததை எடுத்துச் சொன்னார்.

அறிவிப்பாளர் : மஸ்ஊத் பின் அல்ஹகம் (ரலி) வழியாக வாகித் பின் அம்ரு பின் ஸஅத் பின் முஆத் (ரஹ்)