அத்தியாயம்: 11, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1541

و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعَيْبُ بْنُ صَفْوَانَ أَبُو يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏ ‏قَالَ ‏ ‏لَمَّا أُصِيبَ ‏ ‏عُمَرُ ‏ ‏أَقْبَلَ ‏ ‏صُهَيْبٌ ‏ ‏مِنْ مَنْزِلِهِ حَتَّى دَخَلَ عَلَى ‏ ‏عُمَرَ ‏ ‏فَقَامَ بِحِيَالِهِ يَبْكِي فَقَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏عَلَامَ تَبْكِي أَعَلَيَّ تَبْكِي قَالَ إِي وَاللَّهِ لَعَلَيْكَ أَبْكِي يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ قَالَ وَاللَّهِ لَقَدْ عَلِمْتَ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ ‏ ‏يُبْكَى عَلَيْهِ يُعَذَّبُ ‏
‏قَالَ فَذَكَرْتُ ذَلِكَ ‏ ‏لِمُوسَى بْنِ طَلْحَةَ ‏ ‏فَقَالَ كَانَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏تَقُولُ ‏ ‏إِنَّمَا كَانَ أُولَئِكَ ‏ ‏الْيَهُودَ

உமர் (ரலி) (கத்தியால் குத்தப்பட்டு) காயமுற்றிருந்தபோது, ஸுஹைப் (ரலி) அவர்கள் தமது இல்லத்திலிருந்து உமர் (ரலி) அவர்களை நோக்கி வந்து, அவர்களுக்கு எதிரில் நின்று அழுதுகொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி), “ஏன் அழுகின்றீர்? எனக்காகவா அழுகின்றீர்?” என்று கேட்டார்கள். “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களுக்காகவே அழுகிறேன், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே!” என்று ஸுஹைப் (ரலி), கூறினார்கள். உமர் (ரலி), “அல்லாஹ்வின் மீதாணை! “எவருக்காக அழப்படுகின்றதோ அவர் வேதனை செய்யப்படுவார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நீர் அறிந்திருக்கின்றீரே” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

குறிப்பு :

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அப்துல் மலிக் பின் உமைர் பின் சுவைத் (ரஹ்) கூறுகின்றார்:

“இந்த ஹதீஸை நான் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், “இதுவெல்லாம் அந்த யூதர்களுக்காகத்தான் என ஆயிஷா (ரலி) கூறிக்கொண்டிருந்தார்கள்” என்றார்.

Share this Hadith:

Leave a Comment