அத்தியாயம்: 12, பாடம்: 39, ஹதீஸ் எண்: 1740

حَدَّثَنِي ‏ ‏سُوَيْدُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏دَاوُدَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَرْبِ بْنِ أَبِي الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏ ‏بَعَثَ ‏ ‏أَبُو مُوسَى الْأَشْعَرِيُّ ‏ ‏إِلَى قُرَّاءِ أَهْلِ ‏ ‏الْبَصْرَةِ ‏ ‏فَدَخَلَ عَلَيْهِ ‏ ‏ثَلَاثُ مِائَةِ رَجُلٍ قَدْ قَرَءُوا الْقُرْآنَ فَقَالَ أَنْتُمْ خِيَارُ أَهْلِ ‏ ‏الْبَصْرَةِ ‏ ‏وَقُرَّاؤُهُمْ فَاتْلُوهُ وَلَا يَطُولَنَّ عَلَيْكُمْ الْأَمَدُ فَتَقْسُوَ قُلُوبُكُمْ كَمَا قَسَتْ قُلُوبُ مَنْ كَانَ قَبْلَكُمْ ‏

‏وَإِنَّا كُنَّا نَقْرَأُ سُورَةً كُنَّا نُشَبِّهُهَا فِي الطُّولِ وَالشِّدَّةِ ‏ ‏بِبَرَاءَةَ ‏ ‏فَأُنْسِيتُهَا غَيْرَ أَنِّي قَدْ حَفِظْتُ مِنْهَا ‏ ‏لَوْ كَانَ لِابْنِ ‏ ‏آدَمَ ‏ ‏وَادِيَانِ مِنْ مَالٍ لَابْتَغَى وَادِيًا ثَالِثًا وَلَا يَمْلَأُ جَوْفَ ابْنِ ‏ ‏آدَمَ ‏ ‏إِلَّا التُّرَابُ وَكُنَّا نَقْرَأُ سُورَةً كُنَّا نُشَبِّهُهَا بِإِحْدَى ‏ ‏الْمُسَبِّحَاتِ ‏ ‏فَأُنْسِيتُهَا غَيْرَ أَنِّي حَفِظْتُ مِنْهَا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ فَتُكْتَبُ شَهَادَةً فِي أَعْنَاقِكُمْ فَتُسْأَلُونَ عَنْهَا يَوْمَ الْقِيَامَةِ

அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) பஸ்ரா நகரத்திலுள்ள குர்ஆனைக் கற்றறிந்த அறிஞர்களிடம் (அவர்களை அழைத்து வருமாறு) ஆளனுப்பினார்கள். (அவர்களது அழைப்பை ஏற்று) குர்ஆனைக் கற்றறிந்த முன்னூறு பேர் அவர்களிடம் வந்தார்கள். அப்போது அவர்களிடம் அபூமூஸா (ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்:

பஸ்ராவாசிகளிலேயே நீங்கள்தாம் சிறந்தவர்கள் ஆவீர்கள்; அவர்களிலேயே குர்ஆனை நன்கறிந்தவர்களும் ஆவீர்கள். எனவே, (தொடர்ந்து) குர்ஆனை ஓதிவாருங்கள். காலம் நீண்டுவிட்டபோது உங்களுக்கு முன் வாழ்ந்த(வேதம் அருளப்பெற்ற சமுதாயத்த)வர்களின் உள்ளங்கள் இறுகி விட்டதைப் போன்று உங்களுடைய உள்ளங்களும் இறுகிவிட வேண்டாம். நாங்கள் (நபி (ஸல்) அவர்களது காலத்தில்) ஓர் அத்தியாயத்தை ஓதிவந்தோம்; நீளத்திலும் கடுமை(யான எச்சரிக்கை விடுக்கும் தோரணை)யிலும் ‘பராஅத்’ எனப்படும் (9ஆவது) அத்தியாயத்திற்கு நிகராக அதை நாங்கள் கருதினோம். ஆனால், அந்த அத்தியாயத்தை நான் மறக்கச் செய்யப்பட்டுவிட்டேன்.

ஆயினும், அதில் “ஆதமின் மகனுக்கு இரு ஓடைகள் (நிரம்ப) செல்வம் இருந்தாலும் மூன்றாவது ஓடையை அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை (சவக் குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது” எனும் வசனத்தை நான் நினைவில் வைத்துள்ளேன்.

மேலும், மற்றோர் அத்தியாயத்தையும் நாங்கள் ஓதிவந்தோம். அதை (ஸப்பஹ, யுஸப்பிஹு, ஸப்பிஹ் என) இறைத்துதியில் தொடங்கும் அத்தியாயங்களில் ஒன்றுக்கு நிகராகவே நாங்கள் கருதினோம். அந்த அத்தியாயத்தையும் நான் மறக்கச் செய்யப்பட்டுவிட்டேன். ஆயினும், அதில் “நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கின்றீர்கள்? (அவ்வாறு நீங்கள் செய்யாததைப் பிறருக்குச் சொல்வீர்களாயின்) அது உங்களுக்கு எதிரான சாட்சியாக உங்களுடைய கழுத்துகளின் மீது எழுதப்படும். பின்னர் மறுமை நாளில் அது குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்” எனும் வசனத்தை நான் நினைவில் வைத்துள்ளேன்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல் அஷ்அரீ (ரலி) வழியாக அபுல் அஸ்வத் (ரஹ்).

குறிப்பு : மேற்காணும் அத்தியாயங்கள் பின்னர் மாற்றப்பட்டுவிட்டன.

அத்தியாயம்: 12, பாடம்: 39, ஹதீஸ் எண்: 1739

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَطَاءً ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏يَقُولُا ‏

‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَوْ أَنَّ لِابْنِ ‏ ‏آدَمَ ‏ ‏مِلْءَ وَادٍ مَالًا لَأَحَبَّ أَنْ يَكُونَ إِلَيْهِ مِثْلُهُ وَلَا يَمْلَأُ نَفْسَ ابْنِ ‏ ‏آدَمَ ‏ ‏إِلَّا التُّرَابُ وَاللَّهُ يَتُوبُ عَلَى مَنْ تَابَ ‏
‏قَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏فَلَا أَدْرِي أَمِنْ الْقُرْآنِ هُوَ أَمْ لَا ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏زُهَيْرٍ ‏ ‏قَالَ ‏ ‏فَلَا أَدْرِي أَمِنْ الْقُرْآنِ لَمْ يَذْكُرْ ‏ ‏ابْنَ عَبَّاسٍ

“ஆதமின் மகனுக்கு ஒரு நீரோடை நிறைய செல்வம் இருந்தாலும் அதைப் போன்ற மற்றொரு நீரோடை தனக்கு இருக்க வேண்டுமென்றே விரும்புவான். மனிதனுடைய ஆத்மாவின் பேராசையை (சவக் குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோருபவருக்கு அல்லாஹ் பாவமன்னிப்பு வழங்குகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

குறிப்பு : “இந்த வாசகம் குர்ஆனில் உள்ளதா, அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியாது” என்று இதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்கள்.

ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) வழி அறிவிப்பில், ‘இந்த வாசகம் குர்ஆனில் உள்ளதா என்று எனக்குத் தெரியாது’ என்று (மட்டும்) இடம்பெற்றுள்ளது. (இவ்வாறு) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாகக் காணப்படவில்லை.

அத்தியாயம்: 12, பாடம்: 39, ஹதீஸ் எண்: 1738

و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏

‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏لَوْ كَانَ لِابْنِ ‏ ‏آدَمَ ‏ ‏وَادٍ مِنْ ذَهَبٍ أَحَبَّ أَنَّ لَهُ وَادِيًا آخَرَ وَلَنْ يَمْلَأَ فَاهُ إِلَّا التُّرَابُ وَاللَّهُ يَتُوبُ عَلَى مَنْ تَابَ

“ஆதமின் மகனுக்குத் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தாலும், இன்னொன்று வேண்டுமென்று ஆசைப்படுவான். அவனது வாயை (சவக் குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோருபவருக்கு அல்லாஹ் பாவமன்னிப்பு வழங்குகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 39, ஹதீஸ் எண்: 1737

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَسَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَوْ كَانَ لِابْنِ ‏ ‏آدَمَ ‏ ‏وَادِيَانِ مِنْ مَالٍ لَابْتَغَى وَادِيًا ثَالِثًا وَلَا يَمْلَأُ جَوْفَ ابْنِ ‏ ‏آدَمَ ‏ ‏إِلَّا التُّرَابُ وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ ‏

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏قَتَادَةَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏ ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ فَلَا أَدْرِي أَشَيْءٌ أُنْزِلَ أَمْ شَيْءٌ كَانَ يَقُولُهُ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏أَبِي عَوَانَةَ

“ஆதமின் மகனுக்கு இரு ஓடைகள் (நிரம்ப) செல்வம் இருந்தாலும் மூன்றாவது ஓடையை எதிர்பார்ப்பான். மனிதனின் வாயை (சவக் குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோருபவருக்கு அல்லாஹ் பாவமன்னிப்பு வழங்குகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

குறிப்பு : ஷுஅபா வழி அறிவிப்பில், “(மேற்கண்டவாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் கேட்டேன். (இந்த வாசகம் அல்லாஹ்விடமிருந்து) அருளப்பெற்ற இறைவசனமா, அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிவந்த கூற்றா என்று எனக்குத் தெரியாது” என்று அனஸ் (ரலி) கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.