அத்தியாயம்: 12, பாடம்: 04, ஹதீஸ் எண்: 1644

و حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَاتِمُ بْنُ إِسْمَعِيلَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَجْلَانَ ‏ ‏عَنْ ‏ ‏عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَرْحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏

‏أَنَّ ‏ ‏مُعَاوِيَةَ ‏ ‏لَمَّا جَعَلَ نِصْفَ ‏ ‏الصَّاعِ ‏ ‏مِنْ ‏ ‏الْحِنْطَةِ ‏ ‏عَدْلَ ‏ ‏صَاعٍ مِنْ تَمْرٍ ‏ ‏أَنْكَرَ ذَلِكَ ‏ ‏أَبُو سَعِيدٍ ‏ ‏وَقَالَ لَا أُخْرِجُ فِيهَا إِلَّا الَّذِي كُنْتُ أُخْرِجُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَاعًا مِنْ تَمْرٍ أَوْ صَاعًا مِنْ زَبِيبٍ أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ أَوْ صَاعًا مِنْ ‏ ‏أَقِطٍ

முஆவியா (ரலி), அரை ‘ஸாஉ’ கோதுமையை ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம்பழத்திற்கு ஈடாக்கியபோது அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அதை ஆட்சேபித்தார்கள். “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் வழங்கி வந்ததைப் போன்று பேரீச்சம்பழத்தில் ஒரு ‘ஸாஉ’, அல்லது உலர்ந்த திராட்சையில் ஒரு ‘ஸாஉ’, அல்லது பார்லியில் ஒரு ‘ஸாஉ’, அல்லது பாலாடைக்கட்டியில் ஒரு ‘ஸாஉ’வைத் தவிர வேறெதையும் நோன்புப் பெருநாள் தர்மமாக வழங்கமாட்டேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) வழியாக இயாள் பின் அப்தில்லாஹ் (ரஹ்))

அத்தியாயம்: 12, பாடம்: 04, ஹதீஸ் எண்: 1643

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏عَنْ ‏ ‏الْحَارِثِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي ذُبَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَرْحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ ‏

‏كُنَّا ‏ ‏نُخْرِجُ زَكَاةَ الْفِطْرِ مِنْ ثَلَاثَةِ أَصْنَافٍ ‏ ‏الْأَقِطِ ‏ ‏وَالتَّمْرِ وَالشَّعِيرِ

நாங்கள் பாலாடைக்கட்டி, பேரீச்சம் பழம், பார்லி ஆகிய மூன்று இனங்களிலிருந்தே நோன்புப் பெருநாள் தர்மத்தை வழங்கிவந்தோம்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 04, ஹதீஸ் எண்: 1642

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏عَنْ ‏ ‏مَعْمَرٍ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ أُمَيَّةَ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عِيَاضُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدِ بْنِ أَبِي سَرْحٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏يَقُولُا ‏

‏كُنَّا ‏ ‏نُخْرِجُ زَكَاةَ الْفِطْرِ وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِينَا عَنْ كُلِّ صَغِيرٍ وَكَبِيرٍ حُرٍّ وَمَمْلُوكٍ مِنْ ثَلَاثَةِ أَصْنَافٍ ‏ ‏صَاعًا ‏ ‏مِنْ تَمْرٍ صَاعًا مِنْ ‏ ‏أَقِطٍ ‏ ‏صَاعًا مِنْ شَعِيرٍ ‏

‏فَلَمْ نَزَلْ نُخْرِجُهُ كَذَلِكَ حَتَّى كَانَ ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏فَرَأَى أَنَّ ‏ ‏مُدَّيْنِ ‏ ‏مِنْ ‏ ‏بُرٍّ ‏ ‏تَعْدِلُ صَاعًا مِنْ تَمْرٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو سَعِيدٍ ‏ ‏فَأَمَّا أَنَا فَلَا أَزَالُ أُخْرِجُهُ كَذَلِكَ

எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வாழ்ந்த காலத்தில் சிறியவர், பெரியவர், சுதந்திரமானவர், அடிமை என அனைவருக்காகவும் பேரீச்சம் பழத்திலிருந்து ஒரு ‘ஸாஉ’, பாலாடைக் கட்டியிலிருந்து ஒரு ‘ஸாஉ’, பார்லியிலிருந்து ஒரு ‘ஸாஉ’ ஆகிய மூன்று இனங்களிலிருந்து நோன்புப் பெருநாள் தர்மம் வழங்கிவந்தோம். முஆவியா (ரலி) (எங்களிடம்) வரும்வரையில் இவ்வாறே வழங்கிவந்தோம். பிறகு முஆவியா (ரலி) கோதுமையிலிருந்து இரு ‘முத்’, ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம் பழத்திற்கு ஈடானதாகும் என்று கருதி(எங்களிடம் கூறி)னார்கள்.

நானோ (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில்) வழங்கியதைப் போன்றே வழங்கிக் கொண்டிருப்பேன்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 04, ஹதீஸ் எண்: 1641

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏دَاوُدُ يَعْنِي ابْنَ قَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ ‏
‏كُنَّا ‏ ‏نُخْرِجُ إِذْ كَانَ فِينَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏زَكَاةَ الْفِطْرِ عَنْ كُلِّ صَغِيرٍ وَكَبِيرٍ حُرٍّ أَوْ مَمْلُوكٍ ‏ ‏صَاعًا ‏ ‏مِنْ طَعَامٍ أَوْ صَاعًا مِنْ ‏ ‏أَقِطٍ ‏ ‏أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ أَوْ صَاعًا مِنْ تَمْرٍ أَوْ صَاعًا مِنْ زَبِيبٍ ‏

‏فَلَمْ نَزَلْ نُخْرِجُهُ حَتَّى قَدِمَ عَلَيْنَا ‏ ‏مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ ‏ ‏حَاجًّا ‏ ‏أَوْ مُعْتَمِرًا ‏ ‏فَكَلَّمَ النَّاسَ عَلَى الْمِنْبَرِ فَكَانَ فِيمَا كَلَّمَ بِهِ النَّاسَ أَنْ قَالَ إِنِّي أَرَى أَنَّ ‏ ‏مُدَّيْنِ ‏ ‏مِنْ ‏ ‏سَمْرَاءِ ‏ ‏الشَّامِ ‏ ‏تَعْدِلُ صَاعًا مِنْ تَمْرٍ فَأَخَذَ النَّاسُ بِذَلِكَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو سَعِيدٍ ‏ ‏فَأَمَّا أَنَا فَلَا أَزَالُ أُخْرِجُهُ كَمَا كُنْتُ أُخْرِجُهُ أَبَدًا مَا عِشْتُ

எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வாழ்ந்த காலத்தில் சிறியவர், பெரியவர், சுதந்திரமானவர், அடிமை என அனைவருக்காகவும் நாங்கள் உணவி(ன் தானியத்தி)லிருந்து ஒரு ‘ஸாஉ’, அல்லது பாலாடைக் கட்டியிலிருந்து ஒரு ‘ஸாஉ’, பார்லியிலிருந்து ஒரு ‘ஸாஉ’, அல்லது பேரீச்சம் பழத்திலிருந்து ஒரு ‘ஸாஉ’, அல்லது உலர்ந்த திராட்சையிலிருந்து ஒரு ‘ஸாஉ’ நோன்புப் பெருநாள் தர்மமாக வழங்கிவந்தோம். முஆவியா பின் அபீஸுஃப்யான் (ரலி) ஹஜ் அல்லது உம்ராவிற்காக எங்களிடம் வந்தவரைக்கும் இவ்வாறே நாங்கள் வழங்கிவந்தோம். முஆவியா (ரலி) (எங்களிடம் வந்து) மிம்பர் மீது நின்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அவர்கள் மக்களுக்கு ஆற்றிய உரையில் “ஷாம் (சிரியா) பகுதியின் கோதுமையில் இரு ‘முத்’கள், பேரீச்சம் பழத்தின் ஒரு ‘ஸாஉ’க்கு நிகரானதாகும் என நான் கருதுகிறேன்” என்று குறிப்பிட்டார்கள். மக்கள் அதைப் பிடித்துக்கொண்டனர்.
நானோ (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில்) வழங்கியதைப் போன்றே உயிர் வாழும்வரை வழங்கிக்கொண்டிருப்பேன்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 04, ஹதீஸ் எண்: 1640

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏عَنْ ‏ ‏عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدِ بْنِ أَبِي سَرْحٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏يَقُولُا ‏

‏كُنَّا ‏ ‏نُخْرِجُ زَكَاةَ الْفِطْرِ ‏ ‏صَاعًا ‏ ‏مِنْ طَعَامٍ أَوْ ‏ ‏صَاعًا ‏ ‏مِنْ شَعِيرٍ أَوْ ‏ ‏صَاعًا ‏ ‏مِنْ تَمْرٍ أَوْ ‏ ‏صَاعًا ‏ ‏مِنْ ‏ ‏أَقِطٍ ‏ ‏أَوْ ‏ ‏صَاعًا ‏ ‏مِنْ زَبِيبٍ

நாங்கள் நோன்புப் பெருநாள் தர்மமாக உணவி(ன் தானியத்தி)லிருந்து ஒரு ‘ஸாஉ’, அல்லது பார்லியிலிருந்து ஒரு ‘ஸாஉ’, அல்லது பாலாடைக் கட்டியிலிருந்து ஒரு ‘ஸாஉ’, அல்லது உலர்ந்த திராட்சையிலிருந்து ஒரு ‘ஸாஉ’ வழங்கிவந்தோம்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 04, ஹதீஸ் எண்: 1639

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي فُدَيْكٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الضَّحَّاكُ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَرَضَ زَكَاةَ الْفِطْرِ مِنْ رَمَضَانَ عَلَى كُلِّ نَفْسٍ مِنْ الْمُسْلِمِينَ حُرٍّ أَوْ عَبْدٍ أَوْ رَجُلٍ أَوْ امْرَأَةٍ صَغِيرٍ أَوْ كَبِيرٍ ‏ ‏صَاعًا ‏ ‏مِنْ تَمْرٍ أَوْ ‏ ‏صَاعًا ‏ ‏مِنْ شَعِيرٍ

முஸ்லிம்களில் சுதந்திரமானவர்கள், அடிமைகள், ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் ஆகிய அனைவர் மீதும் பேரீச்சம் பழத்தில் ஒரு ‘ஸாஉ’ அல்லது பார்லியில் ஒரு ‘ஸாஉ’ (ஏழைகளுக்கு வழங்குவது) கடமையாகும் என ரமளான் தர்மத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நிர்ணயித்தார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 04, ஹதீஸ் எண்: 1638

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏قَالَ ‏
‏إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَرَ بِزَكَاةِ الْفِطْرِ ‏ ‏صَاعٍ ‏ ‏مِنْ تَمْرٍ أَوْ ‏ ‏صَاعٍ ‏ ‏مِنْ شَعِيرٍ ‏

‏قَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏فَجَعَلَ النَّاسُ ‏ ‏عَدْلَهُ ‏ ‏مُدَّيْنِ ‏ ‏مِنْ ‏ ‏حِنْطَةٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம்பழத்தையோ ஒரு ‘ஸாஉ’ பார்லியையோ நோன்புப் பெருநாள் தர்மமாக வழங்கும்படி கட்டளையிட்டார்கள்.
மக்கள் ஒரு ‘ஸாஉ’ பார்லிக்குச் சமமாக இரண்டு ‘முத்’ (அரை ‘ஸாஉ’) கோதுமையை ஆக்கிக்கொண்டார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 04, ஹதீஸ் எண்: 1637

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ ‏

‏فَرَضَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَدَقَةَ رَمَضَانَ عَلَى الْحُرِّ وَالْعَبْدِ وَالذَّكَرِ وَالْأُنْثَى ‏ ‏صَاعًا ‏ ‏مِنْ تَمْرٍ أَوْ ‏ ‏صَاعًا ‏ ‏مِنْ شَعِيرٍ قَالَ ‏ ‏فَعَدَلَ ‏ ‏النَّاسُ بِهِ نِصْفَ ‏ ‏صَاعٍ ‏ ‏مِنْ ‏ ‏بُرٍّ

சுதந்திரமானவர்கள், அடிமைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவர்மீதும் பேரீச்சம் பழத்தில் ஒரு ‘ஸாஉ’ அல்லது பார்லியில் ஒரு ‘ஸாஉ’ (ஏழைகளுக்கு வழங்குவது) கடமையாகும் என ரமளான் தர்மத்தை நபி (ஸல்) நிர்ணயித்தார்கள். பிறகு மக்கள் கோதுமையில் அரை ‘ஸாஉ’வை அதற்குச் சமமாக ஆக்கினர்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 04, ஹதீஸ் எண்: 1636

حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏وَأَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ ‏

‏فَرَضَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏زَكَاةَ الْفِطْرِ ‏ ‏صَاعًا ‏ ‏مِنْ تَمْرٍ أَوْ ‏ ‏صَاعًا ‏ ‏مِنْ شَعِيرٍ عَلَى كُلِّ عَبْدٍ أَوْ حُرٍّ صَغِيرٍ أَوْ كَبِيرٍ

அடிமைகள், சுதந்திரமானவர்கள் ஆகியோரில் சிறியவர், பெரியவர் அனைவர்மீதும் பேரீச்சம் பழத்தில் ஒரு ‘ஸாஉ’ அல்லது பார்லியில் ஒரு ‘ஸாஉ’ (ஏழைகளுக்கு வழங்குவது) கடமையாகும் என நோன்புப் பெருநாள் தர்மத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நிர்ணயித்தார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 04, ஹதீஸ் எண்: 1635

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مَالِكٌ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَرَضَ زَكَاةَ الْفِطْرِ مِنْ رَمَضَانَ عَلَى النَّاسِ ‏ ‏صَاعًا ‏ ‏مِنْ تَمْرٍ أَوْ ‏ ‏صَاعًا ‏ ‏مِنْ شَعِيرٍ عَلَى كُلِّ حُرٍّ أَوْ عَبْدٍ ذَكَرٍ أَوْ أُنْثَى مِنْ الْمُسْلِمِينَ

முஸ்லிம்களில் சுதந்திரமானவர்கள், அடிமைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய அனைவர்மீதும் பேரீச்சம் பழத்தில் ஒரு ‘ஸாஉ’ அல்லது பார்லியில் ஒரு ‘ஸாஉ’ (ஏழைகளுக்கு வழங்குவது) கடமையாகும் என ரமளான் நோன்புப் பெருநாள் தர்மத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களுக்கு நிர்ணயித்தார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி)

குறிப்பு: ஒரு ஸாஉ = 2 கிலோ 176 கிராம்