அத்தியாயம்: 12, பாடம்: 45, ஹதீஸ் எண்: 1752

حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ وَهُوَ ابْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَامِرُ بْنُ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏سَعْدٍ ‏

‏أَنَّهُ أَعْطَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَهْطًا ‏ ‏وَأَنَا جَالِسٌ فِيهِمْ قَالَ فَتَرَكَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْهُمْ رَجُلًا لَمْ يُعْطِهِ وَهُوَ ‏ ‏أَعْجَبُهُمْ ‏ ‏إِلَيَّ فَقُمْتُ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَارَرْتُهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا لَكَ عَنْ فُلَانٍ وَاللَّهِ إِنِّي لَأَرَاهُ مُؤْمِنًا ‏ ‏قَالَ أَوْ مُسْلِمًا ‏ ‏فَسَكَتُّ قَلِيلًا ثُمَّ غَلَبَنِي مَا أَعْلَمُ مِنْهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا لَكَ عَنْ فُلَانٍ فَوَاللَّهِ إِنِّي لَأَرَاهُ مُؤْمِنًا ‏ ‏قَالَ أَوْ مُسْلِمًا ‏ ‏فَسَكَتُّ قَلِيلًا ثُمَّ غَلَبَنِي مَا أَعْلَمُ مِنْهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا لَكَ عَنْ فُلَانٍ فَوَاللَّهِ إِنِّي لَأَرَاهُ مُؤْمِنًا ‏ ‏قَالَ أَوْ مُسْلِمًا ‏ ‏قَالَ ‏ ‏إِنِّي لَأُعْطِي الرَّجُلَ وَغَيْرُهُ أَحَبُّ إِلَيَّ مِنْهُ خَشْيَةَ أَنْ يُكَبَّ فِي النَّارِ عَلَى وَجْهِهِ ‏

‏وَفِي حَدِيثِ ‏ ‏الْحُلْوَانِيِّ ‏ ‏تَكْرِيرُ الْقَوْلِ مَرَّتَيْنِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏عَلَى مَعْنَى حَدِيثِ ‏ ‏صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ مُحَمَّدِ بْنِ سَعْدٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُحَمَّدَ بْنَ سَعْدٍ ‏ ‏يُحَدِّثُ ‏ ‏بِهَذَا الْحَدِيثِ ‏ ‏يَعْنِي حَدِيثَ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏الَّذِي ذَكَرْنَا فَقَالَ فِي حَدِيثِهِ فَضَرَبَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِيَدِهِ بَيْنَ عُنُقِي وَكَتِفِي ثُمَّ قَالَ أَقِتَالًا أَيْ ‏ ‏سَعْدُ ‏ ‏إِنِّي لَأُعْطِي الرَّجُلَ

நான் ஒரு குழுவினரிடையே அமர்ந்திருந்தபோது, அக்குழுவினருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தர்மப் பொருட்களை) வழங்கினார்கள். ஆனால், அக்குழுவினரில் எனக்குப் விருப்பமான ஒருவருக்கு ஏதும் கொடுக்காமல் விட்டு விட்டார்கள்.

ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எழுந்து சென்று, “அல்லாஹ்வின் தூதரே! (அவரை ஏன் விட்டுவிட்டீர்கள்?) அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஓர் இறைநம்பிக்கையாளர் (முஃமின்) என நான் அறிவேன்” என்று இரகசியமாகக் கூறினேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவரை முஸ்லிம் என்று சொல்” என்றார்கள். சிறிது நேரம் நான் அமைதியாக இருந்தேன். நான் அவரைப் பற்றி அறிந்திருந்த (நல்ல) விஷயங்கள் என் அமைதியைக் குலைத்தன. எனவே, “அல்லாஹ்வின் தூதரே! அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஓர் இறைநம்பிக்கையாளர் என்று நான் அறிவேன்” என்று (மீண்டும்) கூறினேன்.

அதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவரை முஸ்லிம் என்று சொல்” என்றார்கள். சிறிது நேரம் நான் அமைதியாக இருந்தேன். அவரைப் நான் பற்றி அறிந்திருந்த (நல்ல) விஷயங்கள் தொடர்ந்து என் அமைதியைக் குலைத்தன. எனவே, “அல்லாஹ்வின் தூதரே! அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஓர் இறை நம்பிக்கையாளர் என்று நான் அறிவேன்” என்றேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவரை ‘முஸ்லிம்’ என்று சொல். நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன்; ஆனால், இவரைவிட மற்றொருவர் என் அன்புக்குரியவராய் இருப்பார். (அவரை விடுத்து இவருக்கு கொடுக்கின்றேன் என்றால்) காரணம், (வறுமையால் குற்றமிழைத்து, அதனால்) இவர் நரகத்தில் முகம் குப்புற வீழ்த்தப்படுவாரோ எனும் அச்சம்தான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)


குறிப்புகள் : அவற்றில் ஹஸன் பின் அலீ அல் ஹுல்வானீ (ரஹ்) வழி அறிவிப்பில், ஸஅத் (ரலி) தம் கேள்வியை இரண்டு முறை கேட்டதாக இடம்பெற்றுள்ளது.

இஸ்மாயீல் பின் முஹம்மது (ரஹ்) வழி அறிவிப்பில், (இறுதியாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்), எனது கழுத்திற்கும் தோளிற்கும் இடையில் தம் கையால் தட்டி, “ஸஅதே! என்னோடு தர்க்கமா? நான் ஒருவருக்குக் கொடுக்கின்றேன் என்றால் …” என்று விளக்கியதாக இடம் பெற்றுள்ளது.