و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ وَحَمَّادُ بْنُ زَيْدٍ ح و حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ ح و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ وَاللَّفْظُ لَهُمَا قَالَا حَدَّثَنَا إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ عَنْ أَيُّوبَ عَنْ مُحَمَّدٍ عَنْ عَبِيدَةَ عَنْ عَلِيٍّ قَالَ
ذَكَرَ الْخَوَارِجَ فَقَالَ فِيهِمْ رَجُلٌ مُخْدَجُ الْيَدِ أَوْ مُودَنُ الْيَدِ أَوْ مَثْدُونُ الْيَدِ لَوْلَا أَنْ تَبْطَرُوا لَحَدَّثْتُكُمْ بِمَا وَعَدَ اللَّهُ الَّذِينَ يَقْتُلُونَهُمْ عَلَى لِسَانِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قُلْتُ آنْتَ سَمِعْتَهُ مِنْ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِي وَرَبِّ الْكَعْبَةِ إِي وَرَبِّ الْكَعْبَةِ إِي وَرَبِّ الْكَعْبَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ عَنْ ابْنِ عَوْنٍ عَنْ مُحَمَّدٍ عَنْ عَبِيدَةَ قَالَ لَا أُحَدِّثُكُمْ إِلَّا مَا سَمِعْتُ مِنْهُ فَذَكَرَ عَنْ عَلِيٍّ نَحْوَ حَدِيثِ أَيُّوبَ مَرْفُوعًا
அலீ (ரலி) (ஒரு முறை) காரிஜிய்யாக்களைப் பற்றிய குறிப்பைக் கூறுகையில், “அவர்களிடையே ஊனமான கையுடைய ஒருவர் இருப்பார். நீங்கள் வரம்பு மீறிவிடுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லையாயின், காரிஜியாக்களைக் கொல்பவர்களுக்கு அல்லாஹ் தன் தூதரின் நாவினால் வாக்களித்துள்ள நற்பலனை உங்களுக்கு நான் அறிவித்துவிடுவேன்” என்று கூறினார்கள். நான், “இதைத் தாங்கள் முஹம்மது (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அலீ (ரலி), “ஆம்; கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக! கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக! கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக!” என்று (மூன்று முறை) சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அலீ (ரலி) வழியாக அபீதா பின் அம்ரு (ரஹ்)
குறிப்பு : இபுனு அபீ அதீ (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் செவியுற்ற செய்தியைத்தான் உங்களுக்கு அறிவிக்கின்றேன்” என்று அறிவிப்பாளர் அபீதா (ரஹ்) கூறிவிட்டு, அலீ (ரலி) தொடர்பான மேற்கண்ட ஹதீஸை அறிவித்தார்கள் என்று இடம்பெற்றுள்ளது.