அத்தியாயம்: 12, பாடம்: 49, ஹதீஸ் எண்: 1776

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏يُسَيْرِ بْنِ عَمْرٍو ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏سَهْلَ بْنَ حُنَيْفٍ ‏
‏هَلْ سَمِعْتَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَذْكُرُ ‏ ‏الْخَوَارِجَ ‏ ‏فَقَالَ سَمِعْتُهُ وَأَشَارَ بِيَدِهِ نَحْوَ الْمَشْرِقِ ‏ ‏قَوْمٌ يَقْرَءُونَ الْقُرْآنَ بِأَلْسِنَتِهِمْ لَا يَعْدُو ‏ ‏تَرَاقِيَهُمْ ‏ ‏يَمْرُقُونَ ‏ ‏مِنْ الدِّينِ كَمَا ‏ ‏يَمْرُقُ ‏ ‏السَّهْمُ مِنْ ‏ ‏الرَّمِيَّةِ ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو كَامِلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ الشَّيْبَانِيُّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏يَخْرُجُ مِنْهُ أَقْوَامٌ

நான் ஸஹ்லு பின் ஹுனைஃப் (ரலி) அவர்களிடம், “காரிஜிய்யாக்கள் குறித்து நபி (ஸல்) ஏதேனும் கூறக் கேட்டுள்ளீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) கிழக்கு (இராக்) திசையில் தமது கையால் சைகை செய்தவாறு (அங்கிருந்து) ஒரு கூட்டத்தார் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆன் ஓதுவார்கள். ஆனால், அது அவர்களது தொண்டைக் குழியைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியை(த் துளைத்து)விட்டு அம்பு வெளியேறிச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் சென்றுவிடுவார்கள் என்று கூறினார்கள்” என்று பதிலளித்தார்.

அறிவிப்பாளர் : யுஸைர் பின் அம்ரு (ரலி)

குறிப்பு : அபூகாமில் (ரஹ்) வழி அறிவிப்பில், “அங்கிருந்து சில கூட்டத்தார் கிளம்புவார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment