அத்தியாயம்: 13, பாடம்: 10, ஹதீஸ் எண்: 1843

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏وَعَبَّادُ بْنُ الْعَوَّامِ ‏ ‏عَنْ ‏ ‏الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي أَوْفَى ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي سَفَرٍ فَلَمَّا غَابَتْ الشَّمْسُ قَالَ ‏ ‏لِرَجُلٍ ‏ ‏انْزِلْ ‏ ‏فَاجْدَحْ ‏ ‏لَنَا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَوْ أَمْسَيْتَ قَالَ انْزِلْ ‏ ‏فَاجْدَحْ ‏ ‏لَنَا قَالَ إِنَّ عَلَيْنَا نَهَارًا فَنَزَلَ ‏ ‏فَجَدَحَ ‏ ‏لَهُ فَشَرِبَ ثُمَّ قَالَ ‏ ‏إِذَا رَأَيْتُمْ اللَّيْلَ قَدْ أَقْبَلَ مِنْ هَا هُنَا وَأَشَارَ بِيَدِهِ نَحْوَ الْمَشْرِقِ فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ ‏
‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كَامِلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ الشَّيْبَانِيُّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏يَقُولُا ‏ ‏سِرْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ صَائِمٌ فَلَمَّا غَرَبَتْ الشَّمْسُ قَالَ يَا فُلَانُ انْزِلْ ‏ ‏فَاجْدَحْ ‏ ‏لَنَا مِثْلَ حَدِيثِ ‏ ‏ابْنِ مُسْهِرٍ ‏ ‏وَعَبَّادِ بْنِ الْعَوَّامِ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي أَوْفَى ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي أَوْفَى ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏ابْنِ مُسْهِرٍ ‏ ‏وَعَبَّادٍ ‏ ‏وَعَبْدِ الْوَاحِدِ ‏ ‏وَلَيْسَ فِي حَدِيثِ أَحَدٍ مِنْهُمْ فِي شَهْرِ رَمَضَانَ وَلَا قَوْلُهُ وَجَاءَ اللَّيْلُ مِنْ هَا هُنَا إِلَّا فِي رِوَايَةِ ‏ ‏هُشَيْمٍ ‏ ‏وَحْدَهُ

நாங்கள் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். சூரியன் மறைந்ததும் ஒருவரிடம், “(வாகனத்திலிருந்து) இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக” என்று சொன்னார்கள். அவர், “அல்லாஹ்வின் தூதரே, மாலை நேரம் ஆகட்டுமே!” என்று சொன்னார். “இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக” என்று (மீண்டும்) சொன்னார்கள். அவர், “இன்னும் பகல் இருக்கிறதே!” என்று சொல்லிவிட்டு, இறங்கி நபி அவர்களுக்காக மாவு கரைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதை அருந்தினார்கள். பின்னர், கிழக்குத் திசையை நோக்கி சைகை செய்து, “இரவு இங்கிருந்து முன்னோக்கி வந்துவிட்டதை நீங்கள் காணும்போது நோன்பாளி நோன்பு துறப்பார்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி)

குறிப்புகள் : அப்துல் வாஹித் (ரஹ்) வழி அறிவிப்பு, “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஒரு பயணத்தில்) சென்றோம். அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும், “இன்னவரே, இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக என்று கூறினார்கள்” என அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அறிவித்ததாகத் தொடங்குகிறது.

ஷுஅபா (ரஹ்) வழி அறிவிப்பில் “ரமளான் மாதத்தில்” எனும் குறிப்போ, “இரவு இங்கிருந்து முன்னோக்கி வந்துவிட்டால் …” எனும் சொற்றொடரோ காணப்படவில்லை. ஹுஷைம் பின் பஷீர் (ரஹ்) அறிவிப்பில் மட்டுமே இவ் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

அத்தியாயம்: 13, பாடம்: 10, ஹதீஸ் எண்: 1842

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏
‏كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي سَفَرٍ فِي شَهْرِ رَمَضَانَ فَلَمَّا غَابَتْ الشَّمْسُ قَالَ يَا ‏ ‏فُلَانُ ‏ ‏انْزِلْ فَاجْدَحْ لَنَا قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ عَلَيْكَ نَهَارًا قَالَ انْزِلْ ‏ ‏فَاجْدَحْ ‏ ‏لَنَا قَالَ فَنَزَلَ ‏ ‏فَجَدَحَ ‏ ‏فَأَتَاهُ بِهِ فَشَرِبَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ قَالَ بِيَدِهِ ‏ ‏إِذَا غَابَتْ الشَّمْسُ مِنْ هَا هُنَا وَجَاءَ اللَّيْلُ مِنْ هَا هُنَا فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ

நாங்கள் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். சூரியன் மறைந்ததும் ஒருவரிடம், “இன்னவரே, (வாகனத்திலிருந்து) இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள். அவர், “அல்லாஹ்வின் தூதரே! பகல் இன்னும் எஞ்சியுள்ளதே?” என்று சொன்னார். “இன்னவரே, (வாகனத்திலிருந்து) இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்று (மீண்டும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள். எனவே, அவர் இறங்கிவந்து, மாவு கரைத்துக் கொண்டுவந்தார். நபி (ஸல்) அதை அருந்திவிட்டு, “சூரியன் இங்கிருந்து மறைந்து, இரவு அங்கிருந்து வந்துவிட்டால் நோன்பாளி நோன்பு துறப்பார்” என்று கையால் சைகை செய்து கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 10, ஹதீஸ் எண்: 1841

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏وَاتَّفَقُوا فِي اللَّفْظِ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏و قَالَ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏و قَالَ ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمِ بْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا أَقْبَلَ اللَّيْلُ وَأَدْبَرَ النَّهَارُ وَغَابَتْ الشَّمْسُ فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ ‏
‏لَمْ يَذْكُرْ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏فَقَدْ

“பகல் போய், சூரியன் மறைந்து, இரவு வந்துவிட்டால் நோன்பாளி நோன்பு துறப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உமர் (ரலி)