அத்தியாயம்: 13, பாடம்: 14, ஹதீஸ் எண்: 1874

حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏مُحَمَّدَ بْنَ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏عَبَّادَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَقُولُ ‏

‏أَتَى ‏ ‏رَجُلٌ ‏ ‏إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الْمَسْجِدِ فِي رَمَضَانَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ احْتَرَقْتُ احْتَرَقْتُ فَسَأَلَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا شَأْنُهُ فَقَالَ ‏ ‏أَصَبْتُ ‏ ‏أَهْلِي قَالَ ‏ ‏تَصَدَّقْ فَقَالَ وَاللَّهِ يَا نَبِيَّ اللَّهِ مَالِي شَيْءٌ وَمَا أَقْدِرُ عَلَيْهِ قَالَ اجْلِسْ فَجَلَسَ فَبَيْنَا هُوَ عَلَى ذَلِكَ أَقْبَلَ رَجُلٌ يَسُوقُ حِمَارًا عَلَيْهِ طَعَامٌ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَيْنَ الْمُحْتَرِقُ آنِفًا فَقَامَ ‏ ‏الرَّجُلُ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَصَدَّقْ بِهَذَا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَغَيْرَنَا فَوَاللَّهِ إِنَّا لَجِيَاعٌ مَا لَنَا شَيْءٌ قَالَ فَكُلُوهُ

ஒருவர் ரமளானில் பள்ளிவாசலுக்கு வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “நான் கரிந்துபோனேன், அல்லாஹ்வின் தூதரே! நான் கரிந்துபோனேன்” என்றார். “என்ன ஆயிற்று?” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் வினவினார்கள். அவர், “நான் (நோன்பு நோற்றுக் கொண்டு) என் மனைவியுடன் (பகலில்) உடலுறவு கொண்டுவிட்டேன்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “தர்மம் செய்வீராக!” என்றார்கள்.
அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நபியே! (தர்மம் செய்ய) என்னிடம் எதுவும் இல்லை. அதற்கான சக்தியும் எனக்கு இல்லை” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அமர்வீராக!” என்றார்கள். அவர் அமர்ந்தார். அவர் அமர்ந்திருந்தபோது ஒரு கழுதையை ஓட்டிக்கொண்டு (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) ஒருவர் வந்தார். அதன் மீது உணவுப் பொருட்கள் இருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “கரிந்துபோன மேற்படியார் எங்கே?” என்று கேட்டார்கள். அந்த மனிதர் எழுந்து நின்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இதை(ப் பெற்று) தர்மம் செய்வீராக!” என்றார்கள். அவர், “அல்லாஹ்வின் தூதரே! எங்களைவிட்டு மற்றவர்களுக்கா (தர்மம் செய்யச் சொல்கிறீர்கள்)? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்களே பசியோடு இருக்கிறோம். எங்களிடம் எதுவும் இல்லை?” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின், அதை நீங்களே உண்ணுங்கள்!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 14, ஹதீஸ் எண்: 1873

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏

‏جَاءَ ‏ ‏رَجُلٌ ‏ ‏إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ احْتَرَقْتُ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِمَ قَالَ وَطِئْتُ امْرَأَتِي فِي رَمَضَانَ نَهَارًا قَالَ ‏ ‏تَصَدَّقْ تَصَدَّقْ قَالَ مَا عِنْدِي شَيْءٌ فَأَمَرَهُ أَنْ يَجْلِسَ فَجَاءَهُ عَرَقَانِ فِيهِمَا طَعَامٌ فَأَمَرَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ يَتَصَدَّقَ بِهِ ‏
‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏يَحْيَى بْنَ سَعِيدٍ ‏ ‏يَقُولُ أَخْبَرَنِي ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ ‏ ‏أَنَّ ‏ ‏مُحَمَّدَ بْنَ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏عَبَّادَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏تَقُولُ ‏ ‏أَتَى ‏ ‏رَجُلٌ ‏ ‏إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ الْحَدِيثَ وَلَيْسَ فِي أَوَّلِ الْحَدِيثِ تَصَدَّقْ تَصَدَّقْ وَلَا قَوْلُهُ نَهَارًا

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் கரிந்துபோனேன்” என்றார். “ஏன் (உமக்கு என்ன நேர்ந்தது)?” என்று கேட்டார்கள். அவர், “நான் ரமளானில் பகலில் (நோன்பு நோற்றுக்கொண்டு) என் மனைவியுடன் உடலுறவு கொண்டுவிட்டேன்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “தர்மம் செய்வீராக, தர்மம் செய்வீராக!” என்று சொன்னார்கள். அவர், “என்னிடம் ஏதும் இல்லையே?” என்றார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அங்கேயே) அமர்ந்திருக்குமாறு உத்தரவிட்டார்கள். பின்னர் உணவுப் பொருட்கள் உள்ள இரண்டு பெரிய கூடைகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தன. அதை(ப் பெற்று) தர்மம் செய்யுமாறு அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு : அப்துல் வஹ்ஹாப் அஸ்ஸகஃபீ (ரஹ்) வழி அறிவிப்பு, “ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார் …” எனத் தொடங்குகிறது. ஹதீஸின் ஆரம்பத்தில் “தர்மம் செய்வீராக, தர்மம் செய்வீராக!” என்பதும் ‘பகலில்’ எனும் சொல்லும் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 13, பாடம்: 14, ஹதீஸ் எண்: 1872

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏حَدَّثَهُ ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَرَ ‏ ‏رَجُلًا ‏ ‏أَفْطَرَ فِي رَمَضَانَ ‏ ‏أَنْ يُعْتِقَ رَقَبَةً أَوْ يَصُومَ شَهْرَيْنِ أَوْ يُطْعِمَ سِتِّينَ مِسْكِينًا ‏

‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ

ஒருவர் ரமளானில் (பகலில் உடலுறவு கொண்டு) நோன்பை முறித்து விட்டார். “ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; அல்லது (தொடர்ந்து) இரு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும்; அல்லது அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்” என அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 14, ஹதீஸ் எண்: 1871

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏

‏أَنَّ ‏ ‏رَجُلًا ‏ ‏وَقَعَ بِامْرَأَتِهِ فِي رَمَضَانَ فَاسْتَفْتَى رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ذَلِكَ فَقَالَ ‏ ‏هَلْ تَجِدُ رَقَبَةً قَالَ لَا قَالَ وَهَلْ تَسْتَطِيعُ صِيَامَ شَهْرَيْنِ قَالَ لَا قَالَ فَأَطْعِمْ سِتِّينَ مِسْكِينًا ‏

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ عِيسَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَالِكٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ أَنَّ ‏ ‏رَجُلًا ‏ ‏أَفْطَرَ فِي رَمَضَانَ فَأَمَرَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ يُكَفِّرَ بِعِتْقِ رَقَبَةٍ ثُمَّ ذَكَرَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ

ஒருவர் ரமளானில் (நோன்பு வைத்துக்கொண்டு) தம் மனைவியுடன் (பகலில்) உடலுறவில் ஈடுபட்டுவிட்டார். (எனவே), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அது குறித்துத் தீர்ப்புக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஓர் அடிமையை (விடுதலை செய்ய) நீர் பெற்றுள்ளீரா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை” என்றார். “இரு மாதங்கள் (தொடர்ந்து) நோன்பு நோற்க உம்மால் முடியுமா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள். அவர் “இயலாது” என்றார். “அவ்வாறாயின், அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பீராக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

குறிப்பு : இஸ்ஹாக் பின் ஈஸா (ரஹ்) வழி அறிவிப்பு, “ஒருவர் ரமளானில் (பகலில் உடலுறவுகொண்டு) நோன்பை முறித்துவிட்டார். அவரிடம், ஓர் அடிமையை விடுதலை செய்யுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உத்தரவிட்டார்கள்” என தொடங்குகிறது.

அத்தியாயம்: 13, பாடம்: 14, ஹதீஸ் எண்: 1870

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏جَاءَ ‏ ‏رَجُلٌ ‏ ‏إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ هَلَكْتُ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏ ‏وَمَا أَهْلَكَكَ قَالَ ‏ ‏وَقَعْتُ عَلَى امْرَأَتِي ‏ ‏فِي رَمَضَانَ قَالَ هَلْ تَجِدُ مَا تُعْتِقُ رَقَبَةً قَالَ لَا قَالَ فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ قَالَ لَا قَالَ فَهَلْ تَجِدُ مَا تُطْعِمُ سِتِّينَ مِسْكِينًا قَالَ لَا قَالَ ثُمَّ جَلَسَ فَأُتِيَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِعَرَقٍ ‏ ‏فِيهِ تَمْرٌ فَقَالَ تَصَدَّقْ بِهَذَا قَالَ أَفْقَرَ مِنَّا فَمَا بَيْنَ ‏ ‏لَابَتَيْهَا ‏ ‏أَهْلُ بَيْتٍ أَحْوَجُ إِلَيْهِ مِنَّا فَضَحِكَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَتَّى بَدَتْ أَنْيَابُهُ ثُمَّ قَالَ اذْهَبْ فَأَطْعِمْهُ أَهْلَكَ ‏

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ مُسْلِمٍ الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَ رِوَايَةِ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏وَقَالَ بِعَرَقٍ فِيهِ تَمْرٌ وَهُوَ الزِّنْبِيلُ وَلَمْ يَذْكُرْ فَضَحِكَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَتَّى بَدَتْ أَنْيَابُهُ

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “நான் அழிந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்றார். நபி (ஸல்), “உமது அழிவுக்குக் காரணம் என்ன?” என்று கேட்டார்கள். “நான் ரமளானில் (நோன்பு வைத்துக்கொண்டே) என் மனைவியுடன் (பகலில்) உடலுறவு கொண்டு விட்டேன்” என்று அவர் சொன்னார். நபி (ஸல்), “(இதற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்ய உம்மால் இயலுமா?” என்று கேட்டார்கள். அவர், “இயலாது” என்றார். “தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உம்மால் முடியுமா?” என்று நபி (ஸல்) கேட்டார்கள். அவர் “முடியாது” என்றார். “அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உம்மால் இயலுமா?” என்று நபி (ஸல்) கேட்க, அவர் “இயலாது” என்று கூறிவிட்டு அமர்ந்துவிட்டார்.

அப்போது நபி (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழங்கள் உள்ள ஒரு கூடை கொண்டுவரப்பட்டது. நபி (ஸல்) அவரிடம், “இதை(ப் பெற்று) தர்மம் செய்வீராக!” என்று கூறினார்கள். அவர், “எங்களைவிட ஏழையாக இருப்போருக்கா? இந்நகரத்தின் இரு மலைகளுக்கு இடையே எங்களைவிட மிக வறிய நிலையில் எந்த வீட்டாரும் இல்லை” என்றார். நபி (ஸல்) தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்துவிட்டு, “நீர் (இதைப் பெற்றுச்) சென்று, உம் வீட்டாருக்கே உண்ணக் கொடுப்பீராக!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

குறிப்பு : முஹம்மது பின் முஸ்லிம் அல் ஸுஹ்ரி (ரஹ்) வழி அறிவிப்பில், “கூடை என்பது ஸன்பீல் (பெரிய கூடை) ஆகும்” என இடம் பெற்றுள்ளது.

மேலும், “நபி (ஸல்) தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள்” எனும் குறிப்பு அதில் இடம்பெறவில்லை.