அத்தியாயம்: 13, பாடம்: 22, ஹதீஸ் எண்: 1925

و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعْدُ بْنُ سَعِيدٍ ‏ ‏أَخْبَرَتْنِي ‏ ‏عَمْرَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ صَوْمَيْنِ يَوْمِ الْفِطْرِ وَيَوْمِ الْأَضْحَى

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 22, ஹதீஸ் எண்: 1924

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَوْنٍ ‏ ‏عَنْ ‏ ‏زِيَادِ بْنِ جُبَيْرٍ ‏ ‏قَالَ ‏

‏جَاءَ رَجُلٌ إِلَى ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏فَقَالَ إِنِّي نَذَرْتُ أَنْ أَصُومَ يَوْمًا فَوَافَقَ يَوْمَ أَضْحَى ‏ ‏أَوْ فِطْرٍ ‏ ‏فَقَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏أَمَرَ اللَّهُ تَعَالَى بِوَفَاءِ النَّذْرِ وَنَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ صَوْمِ هَذَا الْيَوْمِ

ஒருவர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வந்து, “நான் ஒரு நாள் நோன்பு நோற்க நேர்ச்சை செய்தேன். அது ஹஜ்ஜுப் பெருநாளாக, அல்லது நோன்புப் பெருநாளாக அமைந்துவிட்டது” என்று சொன்னார். அதற்கு இப்னு உமர் (ரலி), “உயர்ந்தோன் அல்லாஹ் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டுள்ளான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இந்த நாளில் நோன்பு நோற்பதைத் தடை விதித்துள்ளார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக ஸியாத் பின் ஜுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 22, ஹதீஸ் எண்: 1923

و حَدَّثَنَا ‏ ‏أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ صِيَامِ يَوْمَيْنِ يَوْمِ الْفِطْرِ ‏ ‏وَيَوْمِ النَّحْرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நோன்புப் பெருநாள் மற்றும் குர்பானி செய்யும் (ஹஜ்ஜுப் பெரு)நாள் ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) வழியாக யஹ்யா பின் உமாரா (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 22, ஹதீஸ் எண்: 1922

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ وَهُوَ ابْنُ عُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏قَزَعَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏سَمِعْتُ مِنْهُ حَدِيثًا فَأَعْجَبَنِي فَقُلْتُ لَهُ ‏ ‏آنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَأَقُولُ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا لَمْ أَسْمَعْ قَالَ سَمِعْتُهُ يَقُولُ ‏ ‏لَا يَصْلُحُ الصِّيَامُ فِي يَوْمَيْنِ يَوْمِ الْأَضْحَى وَيَوْمِ الْفِطْرِ مِنْ رَمَضَانَ

அபூஸயீத் (ரலி) அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை நான் செவியுற்றேன். அது எனக்கு வியப்பூட்டவே, “இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுறாத ஒன்றை அவர்கள் கூறியதாகச் சொல்வேனா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘ஹஜ்ஜுப் பெருநாள், நோன்புப் பெருநாள் ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்பது தகாது’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) வழியாக கஸஆ பின் யஹ்யா (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 22, ஹதீஸ் எண்: 1921

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ صِيَامِ يَوْمَيْنِ يَوْمِ الْأَضْحَى وَيَوْمِ الْفِطْرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஜ்ஜுப் பெருநாள், நோன்புப் பெருநாள் ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்கக் கூடாதெனத் தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 22, ஹதீஸ் எண்: 1920

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عُبَيْدٍ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ أَزْهَرَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏

‏شَهِدْتُ الْعِيدَ مَعَ ‏ ‏عُمَرَ بْنِ الْخَطَّابِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏فَجَاءَ فَصَلَّى ثُمَّ انْصَرَفَ فَخَطَبَ النَّاسَ فَقَالَ ‏ ‏إِنَّ هَذَيْنِ يَوْمَانِ نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ صِيَامِهِمَا يَوْمُ فِطْرِكُمْ مِنْ صِيَامِكُمْ وَالْآخَرُ يَوْمٌ تَأْكُلُونَ فِيهِ مِنْ ‏ ‏نُسُكِكُمْ

நான் (ஹஜ்ஜுப்) பெருநாள் தொழுகையில் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடன் கலந்துகொண்டேன். அவர்கள் வந்து (முதலில்) தொழுதுவிட்டுப் பின்னர் மக்களுக்கு உரையாற்றும்போது, “இரண்டு நாட்களில் நோன்பு நோற்கக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை விதித்துள்ளார்கள். ஒன்று, உங்கள் நோன்பிலிருந்து நீங்கள் விடுபடும் நோன்புப் பெருநாள் ஆகும். மற்றொன்று உங்கள் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியை நீங்கள் உண்ணும் (ஹஜ்ஜுப்) பெருநாள் ஆகும்” என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : உமர் (ரலி) வழியாக ஸஅத் பின் உபைத் (ரஹ்)