அத்தியாயம்: 13, பாடம்: 35, ஹதீஸ் எண்: 1973

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ مَهْدِيٍّ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَلِيمُ بْنُ حَيَّانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مِينَاءَ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو ‏

‏قَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو ‏ ‏بَلَغَنِي أَنَّكَ تَصُومُ النَّهَارَ وَتَقُومُ اللَّيْلَ فَلَا تَفْعَلْ ‏ ‏فَإِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَظًّا وَلِعَيْنِكَ عَلَيْكَ حَظًّا وَإِنَّ لِزَوْجِكَ عَلَيْكَ حَظًّا صُمْ وَأَفْطِرْ صُمْ مِنْ كُلِّ شَهْرٍ ثَلَاثَةَ أَيَّامٍ فَذَلِكَ صَوْمُ الدَّهْرِ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ بِي قُوَّةً قَالَ فَصُمْ صَوْمَ ‏ ‏دَاوُدَ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏صُمْ يَوْمًا وَأَفْطِرْ يَوْمًا فَكَانَ يَقُولُ يَا لَيْتَنِي أَخَذْتُ بِالرُّخْصَةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம், “அம்ரின் மகன் அப்துல்லாஹ்வே! நீ பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வழிபடுவதாக எனக்குச் செய்தி எட்டியது. அவ்வாறு நீ செய்யாதே. ஏனெனில், உனது உடலுக்கு அளிக்க வேண்டிய பங்கு உனக்கு உண்டு. உனது கண்ணுக்கு வழங்க வேண்டிய பங்கும் உனக்கு உண்டு. உன் துணைவிக்கு வழங்க வேண்டிய பங்கும் உனக்கு உண்டு. (சில நாட்கள்) நோன்பு நோற்று, (சில நாட்கள்) நோன்பை விட்டுவிடு! ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நோன்புகள் நோற்பாயாக! இது வருடமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்” என்று சொன்னார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சக்தி உள்ளது (என்னால் அதைவிட அதிகமான நோன்புகள் நோற்க முடியும்)” என்றேன். அவர்கள், “அப்படியானால் தாவூத் (அலை) அவர்கள் நோற்றதைப் போன்று நோன்பு நோற்பாயாக; ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் நோன்பை விட்டுவிடுவாயாக!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல் ஆஸ்

குறிப்பு : இதன் அறிவிப்பாளரான ஸயீத் பின் மீனாஉ (ரஹ்), “அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) (முதுமையடைந்த) பின்னர் ‘(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்களித்த) அந்தச் சலுகையைப் பயன்படுத்தியிருந்தால் நன்றாயிருந்திருக்குமே’ என்று கூறுவார்கள்” என்று குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 13, பாடம்: 35, ஹதீஸ் எண்: 1972

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏غُنْدَرٌ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏زِيَادِ بْنِ فَيَّاضٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا عِيَاضٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ لَهُ ‏ ‏صُمْ يَوْمًا وَلَكَ أَجْرُ مَا بَقِيَ قَالَ إِنِّي أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ قَالَ صُمْ يَوْمَيْنِ وَلَكَ أَجْرُ مَا بَقِيَ قَالَ إِنِّي أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ قَالَ صُمْ ثَلَاثَةَ أَيَّامٍ وَلَكَ أَجْرُ مَا بَقِيَ قَالَ إِنِّي أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ قَالَ صُمْ أَرْبَعَةَ أَيَّامٍ وَلَكَ أَجْرُ مَا بَقِيَ قَالَ إِنِّي أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ قَالَ صُمْ أَفْضَلَ الصِّيَامِ عِنْدَ اللَّهِ صَوْمَ ‏ ‏دَاوُدَ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏كَانَ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம், “(மாதத்தில்) ஒரு நாள் நோன்பு நோற்பீராக! எஞ்சிய நாட்கள் நோன்பு நோற்றதற்குரிய நன்மையும் உமக்கு உண்டு” என்றார்கள். நான், “என்னால் அதைவிட அதிகமாகச் செய்ய முடியும்” என்றேன். அவர்கள், “இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக! எஞ்சிய நாட்கள் நோன்பு நோற்றதற்குரிய நன்மையும் உமக்கு உண்டு” என்றார்கள். நான், “என்னால் அதைவிட அதிகமாகச் செய்ய முடியும்” என்றேன். அவர்கள், “மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! எஞ்சிய நாட்கள் நோன்பு நோற்றதற்குரிய நன்மையும் உமக்கு உண்டு” என்றார்கள். நான், “என்னால் அதைவிட அதிகமாகச் செய்ய முடியும்” என்றேன். அவர்கள், “நான்கு நாட்கள் நோன்பு நோற்பீராக! எஞ்சிய நாட்கள் நோன்பு நோற்றதற்குரிய நன்மையும் உமக்கு உண்டு” என்றார்கள். நான், “என்னால் அதைவிட அதிகமாகச் செய்ய முடியும்” என்றேன். அதற்கு, “அல்லாஹ்விடம் மிகச் சிறந்த நோன்பான தாவூத் (அலை) அவர்களின் நோன்பை நோற்றுக்கொள்வீராக! தாவூத் (அலை) ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் நோன்பை விட்டுவிடுவார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 35, ஹதீஸ் எண்: 1971

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏أَبُو الْمَلِيحِ ‏ ‏قَالَ ‏ ‏دَخَلْتُ مَعَ أَبِيكَ عَلَى ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ‏ ‏فَحَدَّثَنَا ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذُكِرَ لَهُ صَوْمِي فَدَخَلَ عَلَيَّ فَأَلْقَيْتُ لَهُ وِسَادَةً مِنْ ‏ ‏أَدَمٍ ‏ ‏حَشْوُهَا لِيفٌ فَجَلَسَ عَلَى الْأَرْضِ وَصَارَتْ الْوِسَادَةُ بَيْنِي وَبَيْنَهُ فَقَالَ لِي ‏ ‏أَمَا يَكْفِيكَ مِنْ كُلِّ شَهْرٍ ثَلَاثَةُ أَيَّامٍ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ قَالَ خَمْسًا قُلْتُ يَا رَسُولَ اللَّهِ قَالَ سَبْعًا قُلْتُ يَا رَسُولَ اللَّهِ قَالَ تِسْعًا قُلْتُ يَا رَسُولَ اللَّهِ قَالَ أَحَدَ عَشَرَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا صَوْمَ فَوْقَ صَوْمِ ‏ ‏دَاوُدَ ‏ ‏شَطْرُ ‏ ‏الدَّهْرِ صِيَامُ يَوْمٍ وَإِفْطَارُ يَوْمٍ

அபுல்மலீஹ் ஆமிர் பின் உஸாமா (ரஹ்) என்னிடம், “நான் உம்முடைய தந்தையுடன் அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்களிடம் சென்றபோது அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), எங்களிடம் கூறியதாவது”:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எனது நோன்பு குறித்துச் சொல்லப்பட்டது. எனவே, அவர்கள் என்னிடம் வந்தார்கள். அவர்களுக்காக நான் ஈச்ச நாரால் நிரப்பப்பட்டிருந்த தோல் தலையணை ஒன்றை எடுத்துவைத்தேன். அவர்களோ தரையில் அமர்ந்தார்கள். தலையணை எனக்கும் அவர்களுக்கும் இடையில் கிடந்தது. அப்போது அவர்கள் என்னிடம், “ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் (நோன்பு நோற்பது) உமக்குப் போதாதா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! (என்னால் அதைவிட அதிகமாக நோன்பு நோற்க இயலும்)” என்றேன். அவர்கள், “(மாதத்தில்) ஐந்து நாட்கள் (நோற்றுக்கொள்)” என்றார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! (என்னால் அதைவிட அதிகமாக இயலும்)” என்றேன். அவர்கள் “ஏழு நாட்கள் (நோற்றுக்கொள்)” என்றார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! (என்னால் அதைவிட அதிகமாக இயலும்)” என்றேன். அவர்கள், “ஒன்பது நாட்கள். (நோற்றுக்கொள்)” என்றார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! (என்னால் அதைவிட அதிகமாக இயலும்)” என்றேன். அவர்கள், “பதினோரு நாட்கள். (நோற்றுக்கொள்).” என்றார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! (என்னால் அதைவிட அதிகமாக இயலும்)” என்றேன். அதற்கு நபி (ஸல்), “தாவூத் (அலை) அவர்களின் நோன்புக்கு மேல் (சிறப்பான) எந்த நோன்பும் கிடையாது. வருடத்தின் பாதி நாட்கள் (நோன்பு நோற்றலே அது). ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்றலாகும்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) வழியாக அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 35, ஹதீஸ் எண்: 1970

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ دِينَارٍ ‏ ‏أَنَّ ‏ ‏عَمْرَو بْنَ أَوْسٍ ‏ ‏أَخْبَرَهُ عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏
‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أَحَبُّ الصِّيَامِ إِلَى اللَّهِ صِيَامُ ‏ ‏دَاوُدَ ‏ ‏كَانَ يَصُومُ نِصْفَ الدَّهْرِ وَأَحَبُّ الصَّلَاةِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ صَلَاةُ ‏ ‏دَاوُدَ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏كَانَ يَرْقُدُ ‏ ‏شَطْرَ ‏ ‏اللَّيْلِ ثُمَّ يَقُومُ ثُمَّ يَرْقُدُ آخِرَهُ يَقُومُ ثُلُثَ اللَّيْلِ بَعْدَ ‏ ‏شَطْرِهِ ‏

‏قَالَ ‏ ‏قُلْتُ ‏ ‏لِعَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏أَعَمْرُو بْنُ أَوْسٍ ‏ ‏كَانَ يَقُولُ يَقُومُ ثُلُثَ اللَّيْلِ بَعْدَ ‏ ‏شَطْرِهِ ‏ ‏قَالَ نَعَمْ

“அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் ஆண்டில் பாதி நாட்கள் நோன்பு நோற்பார்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத் (அலை) அவர்களின் தொழுகையாகும். அவர்கள் பாதி இரவுவரை உறங்குவார்கள். பிறகு எழுந்து தொழுதுவிட்டுப் பின்னர் இரவின் இறுதிப் பகுதியில் உறங்குவார்கள். இரவின் பாதி நேரம் கழிந்த பின்னர் இரவின் மூன்றிலொரு பகுதி நேரம் நின்று தொழுவார்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)

குறிப்பு : இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான இப்னு ஜுரைஜ் (ரஹ்), “நான் (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) அம்ரு பின் தீனார் (ரஹ்) அவர்களிடம், ‘தாவூத் (அலை) இரவில் பாதி நேரம் கழிந்த பின் இரவின் மூன்றிலொரு பகுதி நேரம்வரை நின்று வழிபடுவார்கள்’ என்று கூறுபவர் அம்ரு பின் அவ்ஸ் (ரஹ்) அவர்களா? என்று கேட்டேன். அதற்கு அம்ரு பின் தீனார் (ரஹ்), ‘ஆம்’ என்றார்கள்” என்பதாகக் கூறுகின்றார்.

அத்தியாயம்: 13, பாடம்: 35, ஹதீஸ் எண்: 1969

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ أَوْسٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ أَحَبَّ الصِّيَامِ إِلَى اللَّهِ صِيَامُ ‏ ‏دَاوُدَ ‏ ‏وَأَحَبَّ الصَّلَاةِ إِلَى اللَّهِ صَلَاةُ ‏ ‏دَاوُدَ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏كَانَ يَنَامُ نِصْفَ اللَّيْلِ وَيَقُومُ ثُلُثَهُ وَيَنَامُ سُدُسَهُ وَكَانَ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا

“அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத் (அலை) அவர்களின் தொழுகையாகும். தாவூத் (அலை) பாதி இரவுவரை உறங்குவார்கள். இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று வழிபடுவார்கள். (பிறகு) ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்பார்கள்; ஒரு நாள் நோன்பை விட்டுவிடுவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 35, ஹதீஸ் எண்: 1968

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْعَبَّاسِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏

‏قَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَقُومُ اللَّيْلَ وَتَصُومُ النَّهَارَ قُلْتُ إِنِّي أَفْعَلُ ذَلِكَ قَالَ فَإِنَّكَ إِذَا فَعَلْتَ ذَلِكَ ‏ ‏هَجَمَتْ ‏ ‏عَيْنَاكَ ‏ ‏وَنَفِهَتْ ‏ ‏نَفْسُكَ لِعَيْنِكَ حَقٌّ وَلِنَفْسِكَ حَقٌّ وَلِأَهْلِكَ حَقٌّ قُمْ وَنَمْ وَصُمْ وَأَفْطِرْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம், “நீர் இரவெல்லாம் நின்று வணங்கி பகலெல்லாம் நோன்பு நோற்பதாகக் கேள்விப்பட்டேனே (அது உண்மையா?)” என்று கேட்டார்கள். நான், “ஆம், நான் அவ்வாறு செய்கிறேன்” என்றேன். அவர்கள், “இவ்வாறு நீர் செய்தால் உம்முடைய கண்கள் மங்கிவிடும்; உமது உடல் நலிந்துவிடும். நீர் உமது கண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன. உமது உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. உம் இல்லத்தாருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. எனவே, நீர் (சிறிது நேரம்) தொழுவீராக; (சிறிது நேரம்) உறங்குவீராக! (ஒரு நாள்) நோன்பு நோற்பீராக! (ஒரு நாள்) நோன்பை விட்டுவிடுவீராக!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 35, ஹதீஸ் எண்: 1967

و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏حَبِيبٍ ‏ ‏سَمِعَ ‏ ‏أَبَا الْعَبَّاسِ ‏ ‏سَمِعَ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏

‏قَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو ‏ ‏إِنَّكَ لَتَصُومُ الدَّهْرَ وَتَقُومُ اللَّيْلَ وَإِنَّكَ إِذَا فَعَلْتَ ذَلِكَ ‏ ‏هَجَمَتْ ‏ ‏لَهُ الْعَيْنُ ‏ ‏وَنَهَكَتْ ‏ ‏لَا صَامَ مَنْ صَامَ الْأَبَدَ صَوْمُ ثَلَاثَةِ أَيَّامٍ مِنْ الشَّهْرِ صَوْمُ الشَّهْرِ كُلِّهِ قُلْتُ فَإِنِّي أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ قَالَ فَصُمْ صَوْمَ ‏ ‏دَاوُدَ ‏ ‏كَانَ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا وَلَا يَفِرُّ إِذَا لَاقَى ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏وَنَفِهَتْ ‏ ‏النَّفْسُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம், “அப்துல்லாஹ் பின் அம்ரு! நீர் இரவெல்லாம் நின்று வணங்கி, பகலெல்லாம் நோன்பு நோற்கிறீர் (என்று கேள்விப்பட்டேன்). நீர் இவ்வாறு செய்தால் உமது கண் களைத்து மங்கிவிடும். காலமெல்லாம் நோன்பு நோற்றவர் நோன்பு நோற்றவர் ஆகமாட்டார். மாதத்தில் மூன்று நோன்பு நோற்பது மாதம் முழுதும் நோன்பு நோற்றதாக அமையும்” என்று சொன்னார்கள். நான், “என்னால் அதைவிட அதிகமாகச் செய்ய முடியும்” என்றேன். “அவ்வாறாயின், (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களின் நோன்பை நோற்பீராக! அவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பார்கள்; (போர் முனையில்) எதிரிகளைச் சந்தித்தால் பின்வாங்கமாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)

குறிப்பு : ஹபீப் பின் அபீ ஸாபித் (ரஹ்) வழி அறிவிப்பில், ‘கண் களைத்து மங்கிவிடும்’ என்பதற்கு பதிலாக “உடல் நலிந்துவிடும்” என்று இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 13, பாடம்: 35, ஹதீஸ் எண்: 1966

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَطَاءً ‏ ‏يَزْعُمُ أَنَّ ‏ ‏أَبَا الْعَبَّاسِ ‏ ‏أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏يَقُولُا ‏

‏بَلَغَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنِّي أَصُومُ أَسْرُدُ وَأُصَلِّي اللَّيْلَ فَإِمَّا أَرْسَلَ إِلَيَّ وَإِمَّا لَقِيتُهُ فَقَالَ أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَصُومُ وَلَا تُفْطِرُ وَتُصَلِّي اللَّيْلَ فَلَا تَفْعَلْ ‏ ‏فَإِنَّ لِعَيْنِكَ حَظًّا وَلِنَفْسِكَ حَظًّا وَلِأَهْلِكَ حَظًّا فَصُمْ وَأَفْطِرْ وَصَلِّ وَنَمْ وَصُمْ مِنْ كُلِّ عَشْرَةِ أَيَّامٍ يَوْمًا وَلَكَ أَجْرُ تِسْعَةٍ قَالَ إِنِّي أَجِدُنِي أَقْوَى مِنْ ذَلِكَ يَا نَبِيَّ اللَّهِ قَالَ فَصُمْ صِيَامَ ‏ ‏دَاوُدَ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏قَالَ وَكَيْفَ كَانَ ‏ ‏دَاوُدُ ‏ ‏يَصُومُ يَا نَبِيَّ اللَّهِ قَالَ كَانَ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا وَلَا يَفِرُّ إِذَا لَاقَى قَالَ مَنْ لِي بِهَذِهِ يَا نَبِيَّ اللَّهِ ‏
‏قَالَ ‏ ‏عَطَاءٌ ‏ ‏فَلَا أَدْرِي كَيْفَ ذَكَرَ صِيَامَ الْأَبَدِ ‏ ‏فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا صَامَ مَنْ صَامَ الْأَبَدَ لَا صَامَ مَنْ صَامَ الْأَبَدَ لَا صَامَ مَنْ صَامَ الْأَبَدَ ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ إِنَّ ‏ ‏أَبَا الْعَبَّاسِ الشَّاعِرَ ‏ ‏أَخْبَرَهُ ‏ ‏قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏أَبُو الْعَبَّاسِ السَّائِبُ بْنُ فَرُّوخَ ‏ ‏مِنْ أَهْلِ ‏ ‏مَكَّةَ ‏ ‏ثِقَةٌ عَدْلٌ

நான் தொடர்ந்து (பகலெல்லாம்) நோன்பு நோற்பதாகவும் இரவெல்லாம் நின்று வழிபடுவதாகவும் நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டிவிட்டது. அவர்கள் என்னை அழைத்து வருமாறு ஆளனுப்பினார்களோ நானாக அவர்களைச் சந்தித்தேனோ, அப்போது அவர்கள், “நீர், விடாமல் நோன்பு நோற்பதாகவும் (உறங்காமல்) இரவெல்லாம் நின்று தொழுவதாகவும் என்னிடம் கூறப்படுகிறதே! அவ்வாறு செய்யாதீர். ஏனெனில், உமது கண்ணுக்கு அளிக்க வேண்டிய பங்கு உமக்குண்டு; உமது உடலுக்கு அளிக்க வேண்டிய பங்கும் உண்டு. உம் வீட்டாருக்கு அளிக்க வேண்டிய பங்கும் உண்டு. எனவே, (சில நாள்) நோன்பு நோற்று, (சில நாள்) நோன்பை விட்டுவிடுவீராக! (சிறிது நேரம்) தொழுவீராக! (சிறிது நேரம்) உறங்குவீராக! பத்து நாட்களுக்கு ஒரு முறை நோன்பு நோற்றுக்கொள்வீராக! (மற்ற) ஒன்பது நாட்களுக்கும் உமக்கு நற்பலன் உண்டு” என்று கூறினார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! அதைவிட அதிகமாகச் செய்வதற்கு நான் சக்தி பெற்றுள்ளேன்” என்றேன். “அவ் வாறாயின் (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களின் நோன்பை நோற்பீராக!” என்றார்கள். “அல்லாஹ்வின் தூதரே! தாவூத் (அலை) எவ்வாறு நோன்பு நோற்பார்கள்?” என்று கேட்டேன். அதற்கு “அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் விட்டுவிடுவார்கள். மேலும், (போர் முனையில்) எதிரிகளைச் சந்திக்கும்போது பின்வாங்கமாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பதிலளித்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! (தாவூத் நபியின் வீரத்தை நான் பெற இயலுமா?) இந்தக் குணத்திற்காக எனக்கு யார் பொறுப்பேற்றுக்கொள்வார்?” என்று கேட்டேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)

குறிப்பு : காலமெல்லாம் நோன்பு நோற்பது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்ன கூறினார்கள் என்று எனக்குத் தெரியாது. “காலமெல்லாம் நோன்பு நோற்றவர், நோன்பு நோற்றவர் ஆகமாட்டார்; காலமெல்லாம் நோன்பு நோற்றவர், நோன்பு நோற்றவர் ஆகமாட்டார்; காலமெல்லாம் நோன்பு நோற்றவர், நோன்பு நோற்றவர் ஆகமாட்டார்” என்று நபியவர்கள் (மூன்று முறை) கூறினார்கள் என்று இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அதாஉ (ரஹ்) கூறுகின்றார்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அபுல் அப்பாஸ் என்பவரைப் பற்றி, “கவிஞர் அபுல்அப்பாஸ் அஸ்ஸாயிப் பின் ஃபர்ரூக் (ரஹ்) மக்காவாசிகளில் ஒருவராவார்; நம்பத் தகுந்தவரும் நேர்மையானவரும் ஆவார் என்று முஸ்லிம் (பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான்) கூறுகிறேன்” என்பதாக ஸஹீஹ் முஸ்லிம் தொகுப்பாசிரியரின் குறிப்பு இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 13, பாடம்: 35, ஹதீஸ் எண்: 1965

و حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ يُوسُفَ الْأَزْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَوْزَاعِيِّ ‏ ‏قِرَاءَةً ‏ ‏قَالَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْحَكَمِ بْنِ ثَوْبَانَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا ‏ ‏عَبْدَ اللَّهِ ‏ ‏لَا تَكُنْ بِمِثْلِ فُلَانٍ كَانَ يَقُومُ اللَّيْلَ فَتَرَكَ قِيَامَ اللَّيْلِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (என்னிடம்), “அப்துல்லாஹ்! இரவில் (அதிகமாக) நின்று வணங்கிவிட்டு, இறுதியில் இரவுத் தொழுகையைக் கைவிட வேண்டிய நிலைக்கு ஆளான இன்னாரைப் போன்று நீரும் ஆகிவிட வேண்டாம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 35, ஹதீஸ் எண்: 1964

حَدَّثَنِي ‏ ‏الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ‏ ‏عَنْ ‏ ‏شَيْبَانَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏مَوْلَى ‏ ‏بَنِي زُهْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏قَالَ وَأَحْسَبُنِي قَدْ ‏ ‏سَمِعْتُهُ ‏ ‏أَنَا مِنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏

‏قَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اقْرَأْ الْقُرْآنَ فِي كُلِّ شَهْرٍ قَالَ قُلْتُ إِنِّي أَجِدُ قُوَّةً قَالَ فَاقْرَأْهُ فِي عِشْرِينَ لَيْلَةً قَالَ قُلْتُ إِنِّي أَجِدُ قُوَّةً قَالَ فَاقْرَأْهُ فِي سَبْعٍ وَلَا تَزِدْ عَلَى ذَلِكَ

என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஒவ்வொரு மாதமும் (ஒரு முறை) குர்ஆனை ஓதி நிறைவு செய்வீராக!” என்றார்கள். அப்போது நான், “அதைவிடவும் அதிக சக்தி எனக்கு உள்ளது” என்று கூறினேன். “அப்படியானால் இருபது இரவுகளில் (ஒரு முறை) ஓதி நிறைவு செய்வீராக!” என்றார்கள். அப்போதும் நான், “அதைவிடவும் அதிக சக்தி எனக்கு உள்ளது” என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அப்படியானால் ஏழு நாட்களில் (ஒரு முறை) ஓதி நிறைவு செய்வீராக! அதைவிட (ஓதுவதை) அதிகமாக்கி விடாதீர்!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)