அத்தியாயம்: 13, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1999

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدَةَ ‏ ‏وَعَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ ‏ ‏سَمِعَا ‏ ‏زِرَّ بْنَ حُبَيْشٍ ‏ ‏يَقُولُا ‏

سَأَلْتُ ‏ ‏أُبَيَّ بْنَ كَعْبٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏فَقُلْتُ إِنَّ أَخَاكَ ‏ ‏ابْنَ مَسْعُودٍ ‏ ‏يَقُولُ مَنْ يَقُمْ ‏ ‏الْحَوْلَ ‏ ‏يُصِبْ لَيْلَةَ الْقَدْرِ فَقَالَ رَحِمَهُ اللَّهُ أَرَادَ أَنْ لَا يَتَّكِلَ النَّاسُ أَمَا إِنَّهُ قَدْ عَلِمَ أَنَّهَا فِي رَمَضَانَ وَأَنَّهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ وَأَنَّهَا لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ ثُمَّ حَلَفَ لَا ‏ ‏يَسْتَثْنِي أَنَّهَا لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ فَقُلْتُ بِأَيِّ شَيْءٍ تَقُولُ ذَلِكَ يَا ‏ ‏أَبَا الْمُنْذِرِ ‏ ‏قَالَ بِالْعَلَامَةِ أَوْ بِالْآيَةِ الَّتِي أَخْبَرَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهَا تَطْلُعُ يَوْمَئِذٍ لَا شُعَاعَ لَهَا

நான் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், “தங்கள் சகோதரர் இப்னு மஸ்ஊத் (ரலி) ‘வருடம் முழுவதும் (இரவில்) நின்று வழிபடுபவர் லைலத்துல் கத்ரு இரவை அடைந்துகொள்வார்’ என்று கூறுகின்றாரே?” என்று கேட்டேன். அதற்கு உபை (ரலி),“இப்னு மஸ்ஊதுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! மக்கள் ஒரு நாள் மட்டும் (வழிபாடுகளில்) சார்ந்து இருந்துவிடக்கூடாது என அவர்கள் கருதினார்கள் (போலும்)! லைலத்துல் கத்ரு இரவு ரமளான் மாதத்தில்தான் உள்ளது என்பதையும் அதன் கடைசிப் பத்தில்தான் உள்ளது என்பதையும் அது (ரமளானின்) இருபத்தேழாவது இரவுதான் என்பதையும் இப்னு மஸ்ஊத் அறிந்தே உள்ளார்கள்” என்று பதிலளித்தார்கள். பிறகு அல்லாஹ் நாடினால் என்று கூறாமல், “அது (ரமளானின்) இருபத்தேழாவது இரவே ஆகும்” என்று சத்தியமிட்டுச் சொன்னார்கள். நான், “அபுல் முன்திரே! எதை வைத்து அவ்வாறு கூறுகின்றீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு உபை (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடம் ‘அன்றைய நாளில் (காலையில்) சூரியன் சுடரின்றி உதிக்கும்’ என்று கூறினார்கள். அந்த அடையாளத்தின் மூலமே (அறிந்துகொண்டேன்)” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உபை பின் கஅப் (ரலி) வழியாக, ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment