அத்தியாயம்: 13, பாடம்: 08, ஹதீஸ் எண்: 1834

حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏سَوَادَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏سَمُرَةَ بْنَ جُنْدُبٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏وَهُوَ يَخْطُبُ ‏ ‏يُحَدِّثُ ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏لَا يَغُرَّنَّكُمْ نِدَاءُ ‏ ‏بِلَالٍ ‏ ‏وَلَا هَذَا الْبَيَاضُ حَتَّى يَبْدُوَ الْفَجْرُ ‏ ‏أَوْ قَالَ حَتَّى يَنْفَجِرَ الْفَجْرُ ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو دَاوُدَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏سَوَادَةُ بْنُ حَنْظَلَةَ الْقُشَيْرِيُّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏سَمُرَةَ بْنَ جُنْدُبٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏يَقُولُا ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ هَذَا

“உங்களை (ஸஹர் செய்வதிலிருந்து) பிலாலின் தொழுகை அறிவிப்பு ஏமாற்றிவிட வேண்டாம். (அடிவானில் நீளவாக்கில் தென்படும்) இந்த வெண்மை – வைகறை வெளிப்படும்வரை அல்லது தோன்றும்வரை – ஏமாற்றி(தடுத்து)விட வேண்டாம்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)

குறிப்பு : இந்த ஹதீஸை, அறிவிப்பாளர் ஸமுரா பின் ஜுன்துப் (ரலி), தம் உரையின்போது குறிப்பிட்டார்கள்.

அத்தியாயம்: 13, பாடம்: 08, ஹதீஸ் எண்: 1833

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ سَوَادَةَ الْقُشَيْرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏سَمُرَةَ بْنِ جُنْدُبٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا يَغُرَّنَّكُمْ مِنْ سَحُورِكُمْ أَذَانُ ‏ ‏بِلَالٍ ‏ ‏وَلَا بَيَاضُ الْأُفُقِ الْمُسْتَطِيلُ هَكَذَا حَتَّى ‏ ‏يَسْتَطِيرَ ‏ ‏هَكَذَا ‏

‏وَحَكَاهُ ‏ ‏حَمَّادٌ ‏ ‏بِيَدَيْهِ قَالَ ‏ ‏يَعْنِي مُعْتَرِضًا

“உங்களை ஸஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் தொழுகை அறிவிப்பு ஏமாற்றி(தடுத்து)விட வேண்டாம். அடிவானில் நீள வாக்கில் (செங்குத்தாய்) தெரியும் இந்த வெண்மை – இவ்வாறு (அகலவாக்கில்) பரவும் வரை – ஏமாற்றி(தடுத்து)விட வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)

குறிப்பு : இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அ(கலவாக்கில் பரவலாகத் தெரியும்வரை என்ப)தை அறிவிக்கும்போது, இவ்வாறு என்று தம் இரு கரங்களால் சைகை செய்து (விரித்துக்) காட்டினார்கள்.

அத்தியாயம்: 13, பாடம்: 08, ஹதீஸ் எண்: 1832

و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ سَوَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏سَمُرَةَ بْنِ جُنْدُبٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا يَغُرَّنَّكُمْ أَذَانُ ‏ ‏بِلَالٍ ‏ ‏وَلَا هَذَا الْبَيَاضُ لِعَمُودِ الصُّبْحِ حَتَّى ‏ ‏يَسْتَطِيرَ ‏ ‏هَكَذَا

”உங்களை (ஸஹர் உணவு உண்பதிலிருந்து) பிலாலின் தொழுகை அறிவிப்பு ஏமாற்றி(தடுத்து)விட வேண்டாம். (செங்குத்தாகத் தெரியும்) இந்த வெளிச்சமும் -இவ்வாறு பரவலாகத் தெரியும்வரை – ஏமாற்றி(தடுத்து)விட வேண்டாம். இவ்வாறு (அகலவாக்கில்) பரவலாகத் தெரியும்வரை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 08, ஹதீஸ் எண்: 1831

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ سَوَادَةَ الْقُشَيْرِيِّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏وَالِدِي ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏سَمُرَةَ بْنَ جُنْدُبٍ ‏ ‏يَقُولُا ‏

‏سَمِعْتُ ‏ ‏مُحَمَّدًا ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا يَغُرَّنَّ أَحَدَكُمْ نِدَاءُ ‏ ‏بِلَالٍ ‏ ‏مِنْ السَّحُورِ وَلَا هَذَا الْبَيَاضُ حَتَّى ‏ ‏يَسْتَطِيرَ

“உங்களில் ஒருவர் ஸஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் தொழுகை அறிவிப்பு ஏமாற்றி(தடுத்து)விட வேண்டாம். நீளவாக்கில் (செங்குத்தாகத்) தென்படும் இந்த வெண்மையானது (அடிவானில்) பரவலாகத் தெரியும்வரை அதுவும் உங்களை ஏமாற்றி(தடுத்து)விட வேண்டாம்” என்று முஹம்மது (ஸல்) கூற நான் கேட்டேன்.

அறிவிப்பாளர் : ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 08, ஹதீஸ் எண்: 1830

حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ التَّيْمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ مَسْعُودٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا يَمْنَعَنَّ أَحَدًا مِنْكُمْ أَذَانُ ‏ ‏بِلَالٍ ‏ ‏أَوْ قَالَ نِدَاءُ ‏ ‏بِلَالٍ ‏ ‏مِنْ سُحُورِهِ فَإِنَّهُ يُؤَذِّنُ ‏ ‏أَوْ قَالَ يُنَادِي ‏ ‏بِلَيْلٍ ‏ ‏لِيَرْجِعَ ‏ ‏قَائِمَكُمْ وَيُوقِظَ نَائِمَكُمْ وَقَالَ لَيْسَ أَنْ يَقُولَ هَكَذَا وَهَكَذَا وَصَوَّبَ يَدَهُ وَرَفَعَهَا حَتَّى يَقُولَ هَكَذَا وَفَرَّجَ بَيْنَ إِصْبَعَيْهِ ‏

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو خَالِدٍ يَعْنِي الْأَحْمَرَ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ التَّيْمِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ إِنَّ الْفَجْرَ لَيْسَ الَّذِي يَقُولُ هَكَذَا وَجَمَعَ أَصَابِعَهُ ثُمَّ نَكَسَهَا إِلَى الْأَرْضِ وَلَكِنْ الَّذِي يَقُولُ هَكَذَا وَوَضَعَ الْمُسَبِّحَةَ عَلَى الْمُسَبِّحَةِ وَمَدَّ يَدَيْهِ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏وَالْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ التَّيْمِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَانْتَهَى حَدِيثُ ‏ ‏الْمُعْتَمِرِ ‏ ‏عِنْدَ قَوْلِهِ يُنَبِّهُ نَائِمَكُمْ وَيَرْجِعُ قَائِمَكُمْ ‏ ‏و قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏قَالَ ‏ ‏جَرِيرٌ ‏ ‏فِي حَدِيثِهِ وَلَيْسَ أَنْ يَقُولَ هَكَذَا وَلَكِنْ يَقُولُ هَكَذَا ‏ ‏يَعْنِي الْفَجْرَ هُوَ الْمُعْتَرِضُ وَلَيْسَ بِالْمُسْتَطِيلِ

“உங்களில் ஒருவர் ஸஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் தொழுகை அறிவிப்பு (அல்லது பிலாலின் அழைப்பு) அவரைத் தடுத்துவிட வேண்டாம். உங்களில் (இரவுத் தொழுகை) தொழுதுகொண்டிருப்பவர் (தொழுகையை முடித்துத்) திரும்புவதற்காகவும் உங்களில் உறங்கிக்கொண்டிருப்பவரை எழுப்புவதற்காவுமே பிலால் அறிவிப்புச் செய்கிறார் அல்லது அழைக்கிறார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

குறிப்புகள் : “இதைக் கூறும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது கையைக் கீழே தாழ்த்திப் பின்னர் மேலே உயர்த்திக் காட்டி, இவ்வாறு இவ்வாறு (கீழ் மேலாகச் செங்குத்தாய் தெரியும் வெளிச்சம் ஃபஜ்ரு) அல்ல என்று கூறிவிட்டு, பிறகு தம் கை விரல்களை விரித்துக் காட்டி இவ்வாறு (அடிவானில் நாலா பாகமும் பரவலாகத் தெரியும் வெளிச்சமே ஃபஜ்ரு ஆகும்) என்று கூறினார்கள்” என்று இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறினார்கள்.

அபூகாலித் அல் அஹ்மர் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் கை விரல்களை ஒன்றுசேர்த்து பூமியை நோக்கித் தாழ்த்திக் காட்டி, இவ்வாறு (செங்குத்தான வெளிச்சமாக) இருப்பது ஃபஜ்ரு அல்ல; மாறாக, ஒரு சுட்டு விரல்மீது மற்றொரு சுட்டுவிரல் வைத்துத் தம் இரு கைகளையும் நீட்டிக் காட்டி இவ்வாறு (பரவலான வெளிச்சமாக) இருப்பதே ஃபஜ்ரு ஆகும் என்று கூறினார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

முஅதமிர் பின் சுலைமான் (ரஹ்) வழி அறிவிப்பில், “உங்களில் உறங்கிக்கொண்டிருப்பவரை எழுப்புவதற்காகவும் உங்களில் (இரவுத் தொழுகை) தொழுது கொண்டிருப்பவர் (தொழுகையை முடித்துத்) திரும்புவதற்காகவுமே (பிலால் அறிவிப்புச் செய்கிறார்)” என்பது வரை மட்டும் இடம்பெற்றுள்ளது.

இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) வழி அறிவிப்பில், “இவ்வாறு தெரிவது ஃபஜ்ரு அல்ல; மாறாக, இவ்வாறு தெரிவதே ஃபஜ்ரு ஆகும். அதாவது செங்குத்தானது ஃபஜ்ரு அல்ல; அகலத்தில் பரவியிருப்பதே ஃபஜ்ரு ஆகும்” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 13, பாடம்: 08, ஹதீஸ் எண்: 1829

حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏

‏كَانَ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُؤَذِّنَانِ ‏ ‏بِلَالٌ ‏ ‏وَابْنُ أُمِّ مَكْتُومٍ ‏ ‏الْأَعْمَى فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ ‏ ‏بِلَالًا ‏ ‏يُؤَذِّنُ بِلَيْلٍ فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُؤَذِّنَ ‏ ‏ابْنُ أُمِّ مَكْتُومٍ ‏ ‏قَالَ وَلَمْ يَكُنْ بَيْنَهُمَا إِلَّا أَنْ يَنْزِلَ هَذَا ‏ ‏وَيَرْقَى هَذَا ‏

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْقَاسِمُ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدَةُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ مَسْعَدَةَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏بِالْإِسْنَادَيْنِ كِلَيْهِمَا ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏ابْنِ نُمَيْرٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இரு தொழுகை அறிவிப்பாளர்கள் இருந்தார்கள். (ஒருவர்) பிலால் (ரலி). (மற்றொருவர்) கண் பார்வையற்ற இப்னு உம்மி மக்தூம் (ரலி). அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “பிலால் (பின்)இரவில் தொழுகை அறிவிப்புச் செய்வார். எனவே, இப்னு உம்மி மக்தூம் (ஃபஜ்ருத் தொழுகைக்காக) அழைக்கும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்” என்று சொன்னார்கள்.
அவர் அறிவிப்புச் செய்துவிட்டு இறங்குவார்; இவர் (தொழுகைக்கு) அழைப்பதற்காக ஏறுவார். இதைத் தவிர இருவருக்கிடையே (அதிக இடைவெளி) ஏதும் இருக்காது.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 08, ஹதீஸ் எண்: 1828

حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏

‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏إِنَّ ‏ ‏بِلَالًا ‏ ‏يُؤَذِّنُ بِلَيْلٍ فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى تَسْمَعُوا أَذَانَ ‏ ‏ابْنِ أُمِّ مَكْتُومٍ

“பிலால் (பின்)இரவில் தொழுகை அறிவிப்புச் செய்வார். (நீங்கள் ஸஹர் நேரம் முடிந்து விட்டதாக நினைத்துவிடாதீர்கள்.) இப்னு உம்மி மக்தூமின் தொழுகை அழைப்பை நீங்கள் கேட்கும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 08, ஹதீஸ் எண்: 1827

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏

‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏إِنَّ ‏ ‏بِلَالًا ‏ ‏يُؤَذِّنُ بِلَيْلٍ فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى تَسْمَعُوا تَأْذِينَ ‏ ‏ابْنِ أُمِّ مَكْتُومٍ

“பிலால், (பின்)இரவில் தொழுகை அறிவிப்புச் செய்வார். என்றாலும், (ஃபஜ்ரு தொழுகைக்காக) இப்னு உம்மி மக்தூமின் தொழுகை அழைப்பை நீங்கள் கேட்கும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 08, ஹதீஸ் எண்: 1826

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ سَهْلٍ التَّمِيمِيُّ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي مَرْيَمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو غَسَّانَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو حَازِمٍ ‏
‏عَنْ ‏ ‏سَهْلِ بْنِ سَعْدٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏
‏لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ ‏ ”وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمْ الْخَيْطُ الْأَبْيَضُ مِنْ الْخَيْطِ الْأَسْوَدِ “‏‏

فَكَانَ الرَّجُلُ إِذَا أَرَادَ الصَّوْمَ رَبَطَ أَحَدُهُمْ فِي رِجْلَيْهِ الْخَيْطَ الْأَسْوَدَ وَالْخَيْطَ الْأَبْيَضَ فَلَا يَزَالُ يَأْكُلُ وَيَشْرَبُ حَتَّى يَتَبَيَّنَ لَهُ رِئْيُهُمَا فَأَنْزَلَ اللَّهُ بَعْدَ ذَلِكَ ”مِنْ الْفَجْرِ ‏ “‏‏
‏فَعَلِمُوا أَنَّمَا ‏ ‏يَعْنِي بِذَلِكَ اللَّيْلَ وَالنَّهَارَ

“கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தென்படும்வரை நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள்” எனும் (2:187ஆவது) வசனம் அருளப்பெற்றபோது, நோன்பு நோற்க நாடியுள்ள ஒருவர் தம் இரு கால்களில் (ஒன்றில்) கறுப்புக் கயிற்றையும் (மற்றொன்றில்) வெள்ளைக் கயிற்றையும் கட்டிக்கொண்டு, அவ்விரண்டும் தமது பார்வைக்குத் தெளிவாகப் புலப்படும்வரை சாப்பிட்டுக்கொண்டிருப்பார். ஆகவே, அதற்குப் பின்னர் அல்லாஹ், “மினல் ஃபஜ்ரி” (விடியலின்) எனும் சொல்லையும் சேர்த்து அருளினான். அப்போதுதான் மக்கள், இதன் மூலம் அல்லாஹ் (வெள்ளைக் கயிறு என்றால்) அதிகாலையையும் (கருப்புக் கயிறு என்றால்) இரவையுமே நாடுகிறான் என்பதை அறிந்துகொண்டார்கள்.

அறிவிப்பாளர் : ஸஹ்லு பின் ஸஅத் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 08, ஹதீஸ் எண்: 1825

حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو حَازِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَهْلُ بْنُ سَعْدٍ ‏ ‏قَالَ ‏
‏لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ

” ‏حَتَّى يَتَبَيَّنَ لَكُمْ الْخَيْطُ الْأَبْيَضُ مِنْ الْخَيْطِ الْأَسْوَدِ … “‏‏
‏قَالَ كَانَ الرَّجُلُ يَأْخُذُ خَيْطًا أَبْيَضَ وَخَيْطًا أَسْوَدَ فَيَأْكُلُ حَتَّى يَسْتَبِينَهُمَا حَتَّى أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ”مِنْ الْفَجْرِ‏‏ “فَبَيَّنَ ذَلِكَ

“கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தென்படும்வரை நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள்” எனும் இந்த (2:187 ஆவது) வசனம் அருளப்பெற்றபோது, ஒருவர் வெள்ளைக் கயிறு ஒன்றையும் கறுப்புக் கயிறு ஒன்றையும் எடுத்து வைத்துக்கொண்டு, அவையிரண்டும் பார்வைக்குத் தெளிவாகப் புலப்படும்வரை (ஸஹர் உணவு) சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அதன் பின்னர் அல்லாஹ், “…மினல் ஃபஜ்ரி” (விடியலின்) எனும் சொல்லையும் சேர்த்து அருளி அ(வ்வசனத்)தைத் தெளிவுபடுத்தினான்.

அறிவிப்பாளர் : ஸஹ்லு பின் ஸஅத் (ரலி)