அத்தியாயம்: 15, பாடம்: 15.10, ஹதீஸ் எண்: 2085

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَصْبَهَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مَعْقِلٍ ‏ ‏قَالَ ‏

‏قَعَدْتُ إِلَى ‏ ‏كَعْبٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏وَهُوَ فِي الْمَسْجِدِ فَسَأَلْتُهُ عَنْ هَذِهِ الْآيَةِ” : ‏فَفِدْيَةٌ مِنْ صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ ‏ ‏نُسُكٍ ‏ “ ‏فَقَالَ ‏ ‏كَعْبٌ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏نَزَلَتْ فِيَّ كَانَ بِي أَذًى مِنْ رَأْسِي فَحُمِلْتُ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَالْقَمْلُ يَتَنَاثَرُ عَلَى وَجْهِي فَقَالَ ‏ ‏مَا كُنْتُ أُرَى أَنَّ الْجَهْدَ بَلَغَ مِنْكَ مَا أَرَى أَتَجِدُ شَاةً فَقُلْتُ لَا فَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ ” ‏فَفِدْيَةٌ مِنْ صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ ‏ ‏نُسُكٍ “‏ ‏‏قَالَ صَوْمُ ثَلَاثَةِ أَيَّامٍ أَوْ إِطْعَامُ سِتَّةِ مَسَاكِينَ نِصْفَ صَاعٍ طَعَامًا لِكُلِّ مِسْكِينٍ قَالَ فَنَزَلَتْ فِيَّ خَاصَّةً وَهِيَ لَكُمْ عَامَّةً

நான் கஅப் பின் உஜ்ரா (ரலி) அருகில் (கூஃபா) பள்ளியில் அமர்ந்திருந்தேன் அப்போது அவர்களிடம், “..அதற்குப் பரிகாரமாக நோன்பு நோற்க வேண்டும். அல்லது பலியிட வேண்டும்” எனும் இந்த (2:196ஆவது) வசனத்தைப் பற்றிக் கேட்டேன்.

அதற்கு அவர்கள், “இந்த வசனம் என் தொடர்பாகவே அருளப்பெற்றது. எனது தலையில் நோய் தாக்கியிருந்தது. எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தூக்கிச் செல்லப்பட்டேன். எனது தலையிலிருந்த பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்து கொண்டிருந்தன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உனக்கு இவ்வளவு சிரமம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைத்திருக்க வில்லை” என்று கூறிவிட்டு, “உனக்கு ஓர் ஆடு கிடைக்குமா?” என்று கேட்டார்கள். நான், “இல்லை” என்றேன். அப்போதுதான் இந்த (2:196ஆவது) வசனம் அருளப் பெற்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக் கொள். அல்லது தலா ஓர் ஏழைக்கு அரை ‘ஸாஉ’ உணவு வீதம், ஆறு ஏழைகளுக்கு உணவளி” என்று சொன்னார்கள். ஆகவே, இந்த வசனம், குறிப்பாக என் விஷயத்தில் அருளப்பெற்றது. என்றாலும், அதன் சட்டம் உங்கள் அனைவருக்கும் பொதுவானதாகும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : கஅப் பின் உஜ்ரா (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் மஅகில் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment