அத்தியாயம்: 15, பாடம்: 15.23, ஹதீஸ் எண்: 2158

حَدَّثَنَا ‏ ‏حَامِدُ بْنُ عُمَرَ الْبَكْرَاوِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏بِشْرُ بْنُ الْمُفَضَّلِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِمْرَانُ بْنُ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي رَجَاءٍ ‏ ‏قَالَ ‏

‏قَالَ ‏ ‏عِمْرَانُ بْنُ حُصَيْنٍ ‏ ‏نَزَلَتْ ‏ ‏آيَةُ الْمُتْعَةِ ‏ ‏فِي كِتَابِ اللَّهِ ‏ ‏يَعْنِي ‏ ‏مُتْعَةَ الْحَجِّ ‏ ‏وَأَمَرَنَا بِهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ لَمْ تَنْزِلْ آيَةٌ ‏ ‏تَنْسَخُ ‏ ‏آيَةَ ‏ ‏مُتْعَةِ الْحَجِّ ‏ ‏وَلَمْ يَنْهَ عَنْهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَتَّى مَاتَ قَالَ رَجُلٌ بِرَأْيِهِ بَعْدُ مَا شَاءَ ‏

‏و حَدَّثَنِيهِ ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عِمْرَانَ الْقَصِيرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو رَجَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ‏ ‏بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ قَالَ وَفَعَلْنَاهَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَلَمْ يَقُلْ وَأَمَرَنَا بِهَا

“தமத்துஉ முறை ஹஜ் பற்றிய வசனம் இறைவேதத்தில் அருளப் பெற்றது. அவ்வாறு செய்யுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ‘தமத்துஉ’ முறை ஹஜ் பற்றிய அந்த வசனத்தை மாற்றக்கூடிய வேறெந்த வசனமும் பின்னர் அருளப்பெறவுமில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறக்கும்வரை அதற்குத் தடை விதிக்கவுமில்லை. பின்னர் ஒருவர் (மட்டும்) தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினார்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)


குறிப்பு : யஹ்யா இபுனு ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பில், “…அவ்வாறு செய்யுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை. “…அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஹஜ்ஜுக்குச் சென்றபோது) நாங்கள் அதை செயல்படுத்தினோம்” என்றே இடம்பெற்றுள்ளது.

தமத்துஉ: பார்க்க ஹதீஸ் 2145 குறிப்பு.

அத்தியாயம்: 15, பாடம்: 15.23, ஹதீஸ் எண்: 2157

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الصَّمَدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قَتَادَةُ ‏ ‏عَنْ ‏ ‏مُطَرِّفٍ ‏ ‏عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏تَمَتَّعْنَا ‏ ‏مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَلَمْ يَنْزِلْ فِيهِ الْقُرْآنُ قَالَ رَجُلٌ بِرَأْيِهِ مَا شَاءَ 

‏و حَدَّثَنِيهِ ‏ ‏حَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ وَاسِعٍ ‏ ‏عَنْ ‏ ‏مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ ‏ ‏عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏بِهَذَا الْحَدِيثِ قَالَ ‏ ‏تَمَتَّعَ ‏ ‏نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَتَمَتَّعْنَا ‏ ‏مَعَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஹஜ்ஜுக்காகச் சென்றபோது) நாங்கள் ‘தமத்துஉ’ செய்துள்ளோம். குர்ஆன் வசனம் ஏதும் (அதைத் தடுத்து) அருளப் பெறவில்லை. (பின்னர்) ஒருவர், தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாக கூறினார்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.23, ஹதீஸ் எண்: 2156

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ ‏ ‏عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ الْحُصَيْنِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏اعْلَمْ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏جَمَعَ بَيْنَ حَجٍّ وَعُمْرَةٍ ثُمَّ لَمْ يَنْزِلْ فِيهَا كِتَابٌ وَلَمْ يَنْهَنَا عَنْهُمَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فِيهَا رَجُلٌ بِرَأْيِهِ مَا شَاءَ

அறிந்துகொள்க: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உம்ராவையும் ஹஜ்ஜையும் சேர்த்தார்கள். குர்ஆன் வசனம் ஏதும் (அதைத் தடுத்து) அருளப்பெறவில்லை. (பின்னர்) ஒருவர், தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினார்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.23, ஹதீஸ் எண்: 2155

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُطَرِّفٍ ‏ ‏قَالَ ‏

‏بَعَثَ إِلَيَّ ‏ ‏عِمْرَانُ بْنُ حُصَيْنٍ ‏ ‏فِي مَرَضِهِ الَّذِي تُوُفِّيَ فِيهِ فَقَالَ إِنِّي كُنْتُ مُحَدِّثَكَ بِأَحَادِيثَ لَعَلَّ اللَّهَ أَنْ يَنْفَعَكَ بِهَا بَعْدِي فَإِنْ عِشْتُ فَاكْتُمْ عَنِّي وَإِنْ مُتُّ فَحَدِّثْ بِهَا إِنْ شِئْتَ إِنَّهُ قَدْ سُلِّمَ عَلَيَّ وَاعْلَمْ أَنَّ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَدْ ‏ ‏جَمَعَ بَيْنَ حَجٍّ وَعُمْرَةٍ ثُمَّ لَمْ يَنْزِلْ فِيهَا كِتَابُ اللَّهِ وَلَمْ يَنْهَ عَنْهَا نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ رَجُلٌ فِيهَا بِرَأْيِهِ مَا شَاءَ

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) எந்த நோயால் இறந்துபோனார்களோ அந்த நோயின்போது (என்னிடம் ஆளனுப்பி) என்னை அழைத்தார்கள். நான் சென்றபோது, “நான் உமக்குச் சில ஹதீஸ்களை அறிவிப்பேன். எனக்குப் பின்னர் அவற்றின் மூலம் அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடும். நான் உயிரோடு வாழ்ந்தால் அவற்றை யாருக்கும் அறிவிக்க வேண்டாம். நான் இறந்துவிட்டால் நீர் விரும்பினால் அவற்றை (மக்களிடம்) அறிவிக்கலாம்.

எனக்கு (வானவர்களால்) ஸலாம் சொல்லப்பட்டுவந்தது. அறிக: நபி (ஸல்) உம்ராவையும் ஹஜ்ஜையும் (ஹஜ் காலத்தில்) சேர்த்துள்ளார்கள். பின்னர் அந்நடைமுறையை மாற்றக்கூடிய எந்த இறைவசனமும் அருளப் பெறவில்லை. நபி (ஸல்) அதைத் தடை செய்யவுமில்லை. ஆனால், பின்னர் ஒருவர் அவ்விஷயத்தில் தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினார்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 15.23, ஹதீஸ் எண்: 2154

و حَدَّثَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدِ بْنِ هِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏مُطَرِّفٍ ‏ ‏قَالَ ‏

‏قَالَ لِي ‏ ‏عِمْرَانُ بْنُ حُصَيْنٍ ‏ ‏أُحَدِّثُكَ حَدِيثًا عَسَى اللَّهُ أَنْ يَنْفَعَكَ بِهِ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏جَمَعَ بَيْنَ حَجَّةٍ وَعُمْرَةٍ ثُمَّ لَمْ يَنْهَ عَنْهُ حَتَّى مَاتَ وَلَمْ يَنْزِلْ فِيهِ قُرْآنٌ يُحَرِّمُهُ وَقَدْ كَانَ يُسَلَّمُ عَلَيَّ حَتَّى اكْتَوَيْتُ فَتُرِكْتُ ثُمَّ تَرَكْتُ الْكَيَّ ‏ ‏فَعَادَ ‏
‏و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدِ بْنِ هِلَالٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُطَرِّفًا ‏ ‏قَالَ ‏ ‏قَالَ لِي ‏ ‏عِمْرَانُ بْنُ حُصَيْنٍ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏مُعَاذٍ

என்னிடம் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி), “நான் உமக்கு ஒரு ஹதீஸை அறிவிப்பேன். அதன் மூலம் அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக்கூடும்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உம்ராவையும் ஹஜ்ஜையும் (அடுத்தடுத்து) சேர்த்துச் செய்யச் சொன்னார்கள். பின்னர் அவர்கள் இறக்கும்வரை அதற்குத் தடை விதிக்கவில்லை. அதைத் தடை செய்யும் எந்த இறைவசனமும் அருளப்பெறவுமில்லை. நான் (எனக்கு ஏற்பட்ட மூலநோய்க்காகச்) சூடிட்டுக்கொள்ளும்வரை எனக்கு (வானவர்களால்) ஸலாம் சொல்லப்பட்டுவந்தது. நான் சூடிட்டுக்கொண்டபோது, எனக்கு ஸலாம் சொல்வது கைவிடப்பட்டது. பின்னர் சூடிட்டுக்கொள்வதை நான் கைவிட்டேன்; (ஸலாம்) தொடர்ந்தது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 15.23, ஹதீஸ் எண்: 2153

و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْجُرَيْرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْعَلَاءِ ‏ ‏عَنْ ‏ ‏مُطَرِّفٍ ‏ ‏قَالَ ‏

‏قَالَ لِي ‏ ‏عِمْرَانُ بْنُ حُصَيْنٍ ‏ ‏إِنِّي لَأُحَدِّثُكَ بِالْحَدِيثِ الْيَوْمَ يَنْفَعُكَ اللَّهُ بِهِ بَعْدَ الْيَوْمِ وَاعْلَمْ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَدْ ‏ ‏أَعْمَرَ ‏ ‏طَائِفَةً مِنْ أَهْلِهِ فِي الْعَشْرِ فَلَمْ تَنْزِلْ آيَةٌ ‏ ‏تَنْسَخُ ‏ ‏ذَلِكَ وَلَمْ يَنْهَ عَنْهُ حَتَّى ‏ ‏مَضَى لِوَجْهِهِ ‏ ‏ارْتَأَى كُلُّ امْرِئٍ بَعْدُ مَا شَاءَ أَنْ يَرْتَئِيَ ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏وَكِيعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏الْجُرَيْرِيِّ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏و قَالَ ‏ ‏ابْنُ حَاتِمٍ ‏ ‏فِي رِوَايَتِهِ ارْتَأَى رَجُلٌ بِرَأْيِهِ مَا شَاءَ ‏ ‏يَعْنِي ‏ ‏عُمَرَ

என்னிடம் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி), “நான் இன்றைய தினம் உமக்கு ஒரு ஹதீஸை அறிவிப்பேன்; அதன் மூலம் உமக்கு அல்லாஹ் இதற்குப் பின்னாலும் பயனளிப்பான். அறிந்துகொள்க: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் வீட்டாரில் சிலரை, (ஹஜ் மாதத்தின்) பத்தாவது நாளில் உம்ராவிற்கு இஹ்ராம் பூண அனுமதித்தார்கள். அந்த நடைமுறையை மாற்றக்கூடிய எந்த இறைவசனமும் அருளப்பெறவில்லை; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அதைத் தடை செய்யாமலேயே இறந்துவிட்டார்கள். பின்னர் ஒவ்வொருவரும் தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினர்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரஹ்)

குறிப்பு : முஹம்மத் பின் ஹாத்திம் (ரஹ்) வழி அறிவிப்பில் “…பின்னர் ஒருவர் – அதாவது உமர் (ரலி) – தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினார்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 15.23, ஹதீஸ் எண்: 2152

و حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الْفَزَارِيِّ ‏ ‏قَالَ ‏ ‏سَعِيدٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُلَيْمَانُ التَّيْمِيُّ ‏ ‏عَنْ ‏ ‏غُنَيْمِ بْنِ قَيْسٍ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏

‏عَنْ ‏ ‏الْمُتْعَةِ ‏ ‏فَقَالَ ‏ ‏فَعَلْنَاهَا وَهَذَا يَوْمَئِذٍ كَافِرٌ بِالْعُرُشِ ‏ ‏يَعْنِي بُيُوتَ ‏ ‏مَكَّةَ ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ التَّيْمِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَقَالَ فِي رِوَايَتِهِ ‏ ‏يَعْنِي ‏ ‏مُعَاوِيَةَ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي خَلَفٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحُ بْنُ عُبَادَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ التَّيْمِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَ حَدِيثِهِمَا ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏سُفْيَانَ ‏ ‏الْمُتْعَةُ ‏ ‏فِي الْحَجِّ

நான் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் ‘தமத்துஉ’ முறையைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் “(நபித்தோழர்களாகிய) நாங்கள் அவ்வாறு செய்துள்ளோம். அப்போது இதோ இவர் (முஆவியா) ‘உருஷில்’ அதாவது மக்காவில் (இருந்த வீட்டில்) இறைமறுப்பாளராக இருந்தார்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸ அத் பின் அபீவக்காஸ் (ரலி) வழியாக ஃகுனைம் பின் கைஸ் (ரஹ்)

குறிப்புகள் : அபூ பக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பிலும் “‘இதோ இவர் -அதாவது முஆவியா (ரலி)…” எனும் சொற்றொடர் இடம்பெற்றுள்ளது.

ஸுஃப்யான் (ரஹ்) வழி அறிவிப்பில் “ஹஜ் காலத்தில் உம்ராச் செய்வது (தமத்துஉ)” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 15.23, ஹதீஸ் எண்: 2151

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏بَيَانٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي الشَّعْثَاءِ ‏ ‏قَالَ ‏ ‏أَتَيْتُ ‏ ‏إِبْرَاهِيمَ النَّخَعِيَّ ‏ ‏وَإِبْرَاهِيمَ التَّيْمِيَّ ‏ ‏فَقُلْتُ إِنِّي ‏ ‏أَهُمُّ ‏ ‏أَنْ أَجْمَعَ الْعُمْرَةَ وَالْحَجَّ الْعَامَ ‏ ‏فَقَالَ ‏ ‏إِبْرَاهِيمُ النَّخَعِيُّ ‏ ‏لَكِنْ أَبُوكَ لَمْ يَكُنْ لِيَهُمَّ بِذَلِكَ ‏ ‏قَالَ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏بَيَانٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ التَّيْمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏
‏أَنَّهُ مَرَّ ‏ ‏بِأَبِي ذَرٍّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏بِالرَّبَذَةِ ‏ ‏فَذَكَرَ لَهُ ذَلِكَ فَقَالَ إِنَّمَا ‏ ‏كَانَتْ لَنَا خَاصَّةً دُونَكُمْ

நான் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) மற்றும் இப்ராஹீம் அத்தைமீ (ரஹ்) ஆகியோரிடம் சென்று, “நான் இவ்வருடம் ஹஜ்ஜையும் உம்ராவையும் இணைத்துச் செய்ய முடிவு செய்துள்ளேன்” என்றேன்.

அதற்கு இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்), “ஆனால், உங்கள் தந்தை (அபுஷ் ஷஅஸா) இவ்வாறு செய்பவராக இருக்கவில்லை” என்றார்கள்.

இப்ராஹீம் அத்தைமீ (ரஹ்) கூறினார்கள்:

என் தந்தை யஸீத் பின் ஷரீக் (ரஹ்) (மதீனாவிற்கு அருகிலுள்ள) ‘அர்ரபதா’ எனும் இடத்தில் அபூதர் (ரலி) அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் அபூதர் (ரலி) அவர்களிடம் இதைப் பற்றி வினவியபோது அபூதர் (ரலி), “அது, (நபித்தோழர்களாகிய) எங்களுக்கு மட்டுமே உரிய சலுகையாக இருந்தது; உங்களுக்கு உரியதன்று” என விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் அபிஷ்ஷஅஸா (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 15.23, ஹதீஸ் எண்: 2150

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏فُضَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏زُبَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ التَّيْمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏

‏قَالَ ‏ ‏أَبُو ذَرٍّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏لَا تَصْلُحُ الْمُتْعَتَانِ إِلَّا لَنَا خَاصَّةً ‏ ‏يَعْنِي ‏ ‏مُتْعَةَ النِّسَاءِ ‏ ‏وَمُتْعَةَ الْحَجِّ

இடைக்கால(முத்ஆ)த் திருமணம் செய்வது, ஹஜ் காலத்தில் ‘தமத்துஉ’ செய்வது ஆகிய இரு ‘முத்ஆ’க்களும் (அந்தக் காலத்தில்) எங்களுக்கான சிறப்புச் சலுகைகளாக இருந்தன.

அறிவிப்பாளர் :அபூதர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.23, ஹதீஸ் எண்: 2149

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏عَيَّاشٍ الْعَامِرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ التَّيْمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏كَانَتْ لَنَا رُخْصَةً ‏ ‏يَعْنِي ‏ ‏الْمُتْعَةَ ‏ ‏فِي الْحَجِّ

ஹஜ்ஜில் ‘தமத்துஉ’ செய்வது- (நபித்தோழர்களாகிய) எங்களுக்கு மட்டுமே உரிய சலுகையாக இருந்தது.

அறிவிப்பாளர் :அபூதர் (ரலி)

குறிப்பு : ‘தமத்துஉ’ : பார்க்க ஹதீஸ் 2145இன் குறிப்பு.