அத்தியாயம்: 15, பாடம்: 28, ஹதீஸ் எண்: 2172

‏حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏قَالَ ‏ ‏سَأَلْنَا ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏عَنْ رَجُلٍ قَدِمَ بِعُمْرَةٍ فَطَافَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَلَمْ يَطُفْ بَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏أَيَأْتِي امْرَأَتَهُ ‏ ‏فَقَالَ ‏
‏قَدِمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَطَافَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏سَبْعًا وَصَلَّى خَلْفَ ‏ ‏الْمَقَامِ ‏ ‏رَكْعَتَيْنِ وَبَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏سَبْعًا وَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ ‏
‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏عَنْ ‏ ‏حَمَّادِ بْنِ زَيْدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ

நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “ஒருவர் உம்ராவிற்காக வந்து, கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துவிட்டார். ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ செய்யவில்லை. இந்நிலையில், அவர் (இஹ்ராமிலிருந்து நீங்கி) தம் மனைவியுடன் உறவு கொள்ளலாமா?” என்று கேட்டோம்.

அதற்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மக்காவிற்கு) வந்தபோது கஅபாவை ஏழு முறைச் சுற்றிவந்தார்கள். பிறகு மகாமு இப்ராஹீமிற்குப் பின்னால் (நின்று) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு ஸஃபா-மர்வாவுக்கிடையேயும் ஏழு முறை (ஓடினார்கள்). உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது” என்று இப்னு உமர் (ரலி) விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக அம்ரு பின் தீனார் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 28, ஹதீஸ் எண்: 2171

‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏بَيَانٍ ‏ ‏عَنْ ‏ ‏وَبَرَةَ ‏ ‏قَالَ ‏ ‏سَأَلَ رَجُلٌ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏أَطُوفُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَقَدْ أَحْرَمْتُ بِالْحَجِّ فَقَالَ وَمَا يَمْنَعُكَ قَالَ إِنِّي رَأَيْتُ ابْنَ فُلَانٍ يَكْرَهُهُ وَأَنْتَ أَحَبُّ إِلَيْنَا مِنْهُ رَأَيْنَاهُ قَدْ فَتَنَتْهُ الدُّنْيَا فَقَالَ وَأَيُّنَا ‏ ‏أَوْ أَيُّكُمْ لَمْ تَفْتِنْهُ الدُّنْيَا ‏ ‏ثُمَّ ‏
‏قَالَ رَأَيْنَا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَحْرَمَ بِالْحَجِّ وَطَافَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَسَعَى بَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏
‏فَسُنَّةُ اللَّهِ وَسُنَّةُ رَسُولِهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَحَقُّ أَنْ تَتَّبِعَ مِنْ سُنَّةِ فُلَانٍ إِنْ كُنْتَ صَادِقًا

இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஒருவர், “நான் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் பூண்டவுடன், கஅபாவைச் சுற்றி வரலாமா?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி), “உமக்கு அதிலென்ன ஐயம்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இன்னாரின் மகன் அவ்வாறு (தவாஃப்) செய்வதை வெறுப்பதாக நினைக்கிறேன். ஆனால், அவரைவிட நீங்களே எங்கள் அன்புக்குரியவர். அவர் உலகக் குழப்பத்தின் சோதனையில் சிக்கிக் கொண்டிருக்கின்றார்” என்று கூறினார்.

அதற்கு இப்னு உமர் (ரலி), “நம்மில் / உங்களில் யாரைத்தான் இவ்வுலகம் சோதிக்காமல் விட்டது?” என்று கூறிவிட்டுப் பின்னர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஜ்ஜுக்காக இஹ்ராம் பூண்டவுடன் கஅபாவைச் சுற்றி வந்ததையும் ஸஃபா-மர்வாவுக்கிடையே ஓடி (ஸயீ) வந்ததையும் நாங்கள் கண்டோம்.

நீர் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதில்) உண்மையாளராய் இருந்தால், எவருடைய வழிமுறையையும்விட அல்லாஹ்வின் நெறியும் அவனுடைய தூதரின் வழிமுறையும்தாம் பின்பற்றுவதற்கு மிகவும் தகுதியானவையாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக வபரா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 28, ஹதீஸ் எண்: 2170

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْثَرٌ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ أَبِي خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏وَبَرَةَ ‏ ‏قَالَ ‏ ‏كُنْتُ جَالِسًا عِنْدَ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ أَيَصْلُحُ لِي أَنْ أَطُوفَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏قَبْلَ أَنْ آتِيَ الْمَوْقِفَ فَقَالَ نَعَمْ فَقَالَ فَإِنَّ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏يَقُولُ لَا تَطُفْ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏حَتَّى تَأْتِيَ الْمَوْقِفَ ‏
‏فَقَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏فَقَدْ ‏ ‏حَجَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَطَافَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏قَبْلَ أَنْ يَأْتِيَ الْمَوْقِفَ ‏
‏فَبِقَوْلِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَحَقُّ أَنْ تَأْخُذَ أَوْ بِقَوْلِ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏إِنْ كُنْتَ صَادِقًا

நான் (ஒரு முறை) இப்னு உமர் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து, “நான் (ஹஜ்ஜின்போது) அரஃபாவுக்குச் செல்வதற்கு முன் கஅபாவைச் சுற்றிவருவது சரிதானா?” என்று கேட்டார்.

அதற்கு இப்னு உமர் (ரலி), “ஆம் (சரிதான்)” என்றார்கள். அதற்கு அவர், “நீ அரஃபாவுக்குச் செல்வதற்கு முன் கஅபாவைச் சுற்றிவராதே! என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியிருக்கின்றாரே?” என்று கேட்டார்.

இப்னு உமர் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்துள்ளார்கள். அப்போது அவர்கள் அரஃபாவுக்குச் செல்வதற்கு முன் கஅபாவைச் சுற்றினார்கள். நீர் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதில்) உண்மையாளராய் இருந்தால், நீர் கடைப்பிடிப்பதற்குத் தகுதியானது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொல்லா? அல்லது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சொல்லா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக வபரா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்)