அத்தியாயம்: 15, பாடம்: 29, ஹதீஸ் எண்: 2175

‏و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏وَأَحْمَدُ بْنُ عِيسَى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْأَسْوَدِ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ ‏ ‏مَوْلَى ‏ ‏أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏حَدَّثَهُ ‏
‏أَنَّهُ كَانَ ‏ ‏يَسْمَعُ ‏ ‏أَسْمَاءَ ‏ ‏كُلَّمَا مَرَّتْ ‏ ‏بِالْحَجُونِ ‏ ‏تَقُولُ صَلَّى اللَّهُ عَلَى رَسُولِهِ وَسَلَّمَ لَقَدْ نَزَلْنَا مَعَهُ هَاهُنَا وَنَحْنُ يَوْمَئِذٍ خِفَافُ الْحَقَائِبِ قَلِيلٌ ‏ ‏ظَهْرُنَا ‏ ‏قَلِيلَةٌ ‏ ‏أَزْوَادُنَا ‏ ‏فَاعْتَمَرْتُ أَنَا وَأُخْتِي ‏ ‏عَائِشَةُ ‏ ‏وَالزُّبَيْرُ ‏ ‏وَفُلَانٌ وَفُلَانٌ فَلَمَّا مَسَحْنَا ‏ ‏الْبَيْتَ ‏ ‏أَحْلَلْنَا ثُمَّ ‏ ‏أَهْلَلْنَا ‏ ‏مِنْ الْعَشِيِّ بِالْحَجِّ ‏
‏قَالَ ‏ ‏هَارُونُ ‏ ‏فِي رِوَايَتِهِ أَنَّ مَوْلَى ‏ ‏أَسْمَاءَ ‏ ‏وَلَمْ يُسَمِّ ‏ ‏عَبْدَ اللَّهِ

அஸ்மா (ரலி) (மக்காவிலுள்ள) ‘அல்ஹஜூன்’ எனும் மலையைக் கடந்து செல்லும் போதெல்லாம், “அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கருணை புரியட்டும்! சாந்தி அளிக்கட்டும்! நாங்கள் (ஒரு பயணத்தில்) அவர்களுடன் இங்கு வந்துத் தங்கினோம். அப்போது எங்களிடம் (பயணத்திற்கான) மூட்டை முடிச்சுகள் சொற்பமாகவே இருந்தன; பயண வாகனங்களும் உணவுகளும் குறைவாகவே இருந்தன.

அப்போது நானும் என் சகோதரி ஆயிஷாவும் (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்களும் இன்ன மனிதரும் இன்ன மனிதரும் உம்ராவிற்காக இஹ்ராம் பூண்டு தல்பியாச் சொன்னோம். நாங்கள் கஅபாவைச் சுற்றி (’ஸயீ’யும் செய்து) வந்ததும் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டோம். பிறகு மாலையில் ஹஜ்ஜுக்காக முஹ்ரிம் ஆனோம்“ என்று கூறுவதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பாளர் : அஸ்மா (ரலி) வழியாக அவர்களின் முன்னாள் அடிமையான அப்துல்லாஹ் பின் கைஸான் (ரஹ்)


குறிப்பு :

ஹாரூன் பின் ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பில், அப்துல்லாஹ் எனும் பெயர் இடம்பெறாமல், “அஸ்மா (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை கூறியதாவது” என்றே இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: