அத்தியாயம்: 15, பாடம்: 15.03, ஹதீஸ் எண்: 2032

و حَدَّثَنِي ‏ ‏عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏النَّضْرُ بْنُ مُحَمَّدٍ الْيَمَامِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِكْرِمَةُ يَعْنِي ابْنَ عَمَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو زُمَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏

‏كَانَ الْمُشْرِكُونَ يَقُولُونَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ قَالَ فَيَقُولُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَيْلَكُمْ ‏ ‏قَدْ قَدْ ‏ ‏فَيَقُولُونَ إِلَّا شَرِيكًا هُوَ لَكَ تَمْلِكُهُ وَمَا مَلَكَ يَقُولُونَ هَذَا وَهُمْ يَطُوفُونَ ‏ ‏بِالْبَيْتِ

இணைவைப்பாளர்கள் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரும்போது, “லப்பைக், லா ஷரீக்க லக்” (உன் அழைப்பை ஏற்றோம். உனக்கு இணை ஏதுமில்லை) என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களுக்குக் கேடுதான். போதும்! போதும்! (இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள்)” என்பார்கள். (ஏனெனில்,) இணைவைப்பாளர்கள் தொடர்ந்து, “இல்லா ஷரீக்கன் ஹுவ லக்க. தம்லிகுஹு வ மா மலக் (ஆனால், உனக்கு ஓர் இணையாளன் இருக்கின்றான்; அவனுக்கு நீ எசமானன். அவன் எவருக்கும் எசமான் அல்லன்; அல்லது அவனுக்கும் அவனுடைய உடமைகளுக்கும் நீயே அதிபதி) என்றும் கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.03, ஹதீஸ் எண்: 2031

و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ فَإِنَّ ‏ ‏سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏أَخْبَرَنِي عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُهِلُّ ‏ ‏مُلَبِّدًا ‏ ‏يَقُولُ ‏ ‏لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ لَا يَزِيدُ عَلَى هَؤُلَاءِ الْكَلِمَاتِ وَإِنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏كَانَ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَرْكَعُ ‏ ‏بِذِي الْحُلَيْفَةِ ‏ ‏رَكْعَتَيْنِ ثُمَّ إِذَا اسْتَوَتْ بِهِ النَّاقَةُ قَائِمَةً عِنْدَ ‏ ‏مَسْجِدِ ذِي الْحُلَيْفَةِ ‏ ‏أَهَلَّ ‏ ‏بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ وَكَانَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏يَقُولُ كَانَ ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏يُهِلُّ ‏ ‏بِإِهْلَالِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ هَؤُلَاءِ الْكَلِمَاتِ وَيَقُولُ لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ فِي يَدَيْكَ لَبَّيْكَ ‏ ‏وَالرَّغْبَاءُ ‏ ‏إِلَيْكَ وَالْعَمَلُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது தலைமுடியைக் களிம்பு தடவிப் படியவைத் திருந்த நிலையில் “லப்பைக், அல்லாஹும்ம லப்பைக்; லப்பைக், லா ஷரீக்க லக்க லப்பைக்; இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக்க வல் முல்க்; லா ஷரீக்க லக்” என்று கூறியதை நான் கேட்டேன். அவர்கள் (தமது தல்பியாவில்) இதைவிடக் கூடுதலாக வேறெதையும் கூற மாட்டார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

குறிப்பு : “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பின்னர் துல்ஹுலைஃபா பள்ளியின் அருகில் தமது ஒட்டகம் சரியாக நிலைக்கு வந்ததும் தல்பியா கூறி இஹ்ராம் பூணுவார்கள்” என்று (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறுவார்கள் என்றும்

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியவாறே (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) தல்பியா கூறி இஹ்ராம் பூணுவார்கள். லப்பைக், அல்லாஹும்ம லப்பைக்; லப்பைக் வ ஸஅதைக். வல்கைரு ஃபீ யதைக்; லப்பைக், வர்ரஃக்பாஉ இலைக்க வல்அமல் எனக் கூறுவார்கள்” என்று (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) குறிப்பிடுவார்கள் என்றும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஸாலிம் பின் அப்தில்லாஹ் கூறுகிறார்கள்.

அத்தியாயம்: 15, பாடம்: 15.03, ஹதீஸ் எண்: 2030

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبَّادٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَاتِمٌ يَعْنِي ابْنَ إِسْمَعِيلَ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏وَنَافِعٍ ‏ ‏مَوْلَى ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏وَحَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ إِذَا اسْتَوَتْ بِهِ رَاحِلَتُهُ قَائِمَةً عِنْدَ ‏ ‏مَسْجِدِ ذِي الْحُلَيْفَةِ ‏ ‏أَهَلَّ ‏ ‏فَقَالَ ‏ ‏لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ ‏ ‏قَالُوا ‏ ‏وَكَانَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏يَقُولُ هَذِهِ تَلْبِيَةُ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

‏قَالَ ‏ ‏نَافِعٌ ‏ ‏كَانَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏يَزِيدُ مَعَ هَذَا ‏ ‏لَبَّيْكَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ بِيَدَيْكَ لَبَّيْكَ ‏ ‏وَالرَّغْبَاءُ ‏ ‏إِلَيْكَ وَالْعَمَلُ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى يَعْنِي ابْنَ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏ ‏تَلَقَّفْتُ ‏ ‏التَّلْبِيَةَ مِنْ ‏ ‏فِي رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِهِمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) துல்ஹுலைஃபா பள்ளியின் அருகில் தமது வாகன ஒட்டகம் சரியாக நிலைக்கு வந்த பிறகு, “லப்பைக், அல்லாஹும்ம லப்பைக்; லப்பைக், லா ஷரீக்க லக்க லப்பைக்; இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக்க வல்முல்க், லா ஷரீக்க லக்” என்று தல்பியா கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

குறிப்பு : “இதுவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முழங்கிய தல்பியா ஆகும்” என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறுவார்கள் என மக்கள் கூறினர்.

மேலும், இதனுடன் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), “லப்பைக், லப்பைக் வ ஸஅதைக். வல்கைரு பியதைக் லப்பைக். வர்ரஃக்பாஉ இலைக்க வல்அமல்” என்றும் கூறுவார்கள் என்று அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

யஹ்யா இப்னு ஸயீத் (ரஹ் வழி அறிவிப்பு, “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வாயிலிருந்து (நேரடியாகவே) தல்பியாவைக் கற்றேன்” என்று இப்னு உமர் (ரலி) கூறுவதாகத் தொடங்குகிறது.

அத்தியாயம்: 15, பாடம்: 15.03, ஹதீஸ் எண்: 2029

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏
‏أَنَّ تَلْبِيَةَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ قَالَ ‏

‏وَكَانَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏يَزِيدُ فِيهَا ‏ ‏لَبَّيْكَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ بِيَدَيْكَ لَبَّيْكَ ‏ ‏وَالرَّغْبَاءُ إِلَيْكَ وَالْعَمَلُ

“லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக், இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக்க, வல்முல்க், லா ஷரீக்க லக்” என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முழங்கிய தல்பியா ஆகும்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

குறிப்பு : தல்பியாவின் பொருள் : “இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். இறைவா! உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். உனக்கே நான் கீழ்ப்படிகின்றேன். உனக்கு இணை துணை கிடையாது. உனக்கே எல்லாப் புகழும். அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையானவர் எவருமிலர்”

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) “லப்பைக் லப்பைக் வ ஸஅதைக், வல்கைரு பி யதைக், லப்பைக் வர்ரஃக்பாஉ இலைக்க வல்அமல்” என்று கூடுதலாகக் கூறுவார்கள் என்று இதன் அறிவிப்பாளரான நாஃபிஉ (ரஹ்) கூறுகின்றார்.

அதன் பொருள் ; “இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். உனக்கே நான் கீழ்ப்படிகின்றேன். நன்மைகள் அனைத்தும் உன் கரங்களில். இதோ வந்துவிட்டேன். வேண்டுதல்கள் உன்னிடமே. நற்செயல்கள் உனக்காகவே”