அத்தியாயம்: 15, பாடம்: 38, ஹதீஸ் எண்: 2209

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ إِسْحَقَ الْمُسَيَّبِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَنَسٌ يَعْنِي ابْنَ عِيَاضٍ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ ‏ ‏أَخْبَرَهُ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اسْتَقْبَلَ ‏ ‏فُرْضَتَيْ الْجَبَلِ ‏ ‏الَّذِي بَيْنَهُ وَبَيْنَ الْجَبَلِ الطَّوِيلِ نَحْوَ ‏ ‏الْكَعْبَةِ ‏ ‏يَجْعَلُ الْمَسْجِدَ الَّذِي بُنِيَ ثَمَّ يَسَارَ الْمَسْجِدِ الَّذِي بِطَرَفِ ‏ ‏الْأَكَمَةِ ‏ ‏وَمُصَلَّى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَسْفَلَ مِنْهُ عَلَى ‏ ‏الْأَكَمَةِ ‏ ‏السَّوْدَاءِ يَدَعُ مِنْ ‏ ‏الْأَكَمَةِ ‏ ‏عَشْرَةَ أَذْرُعٍ أَوْ نَحْوَهَا ثُمَّ ‏ ‏يُصَلِّي مُسْتَقْبِلَ ‏ ‏الْفُرْضَتَيْنِ ‏ ‏مِنْ الْجَبَلِ الطَّوِيلِ الَّذِي بَيْنَكَ وَبَيْنَ ‏ ‏الْكَعْبَةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (‘தூத் தவா’வில்) கஅபாவின் திசையில் அமைந்த ஓர் உயரமான மலையின் இரு குன்றுகளை நோக்கி(அல்லாஹ்வை வணங்கி)னார்கள். (அதாவது தற்போது) அங்கு கட்டப்பட்டுள்ள பள்ளிவாசலை, மேட்டுப் புறத்தில் அமைந்த தொழும் இடத்திற்கு இடப்பக்கமாக ஆக்கிக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுத இடம், கருப்பு மேட்டிற்குக் கீழே சுமார் பத்து முழம் தள்ளி இருந்தது. உமக்கும்* கஅபாவிற்கும் இடையே அமைந்த உயரமான மலையின் இரு குன்றுகளை நோக்கித் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி வழியாக நாஃபிஉ (ரஹ்)


குறிப்பு:
*“உமக்கும்“ என்று இப்னு உமர் (ரலி) அவர்களால் குறிப்பிடப்படுபவர், அவரின் மாணவரும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளருமான நாஃபிஉ (ரஹ்) ஆவார்.

அத்தியாயம்: 15, பாடம்: 38, ஹதீஸ் எண்: 2208

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ إِسْحَقَ الْمُسَيَّبِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَنَسٌ يَعْنِي ابْنَ عِيَاضٍ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ ‏ ‏حَدَّثَهُ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَنْزِلُ ‏ ‏بِذِي طَوًى ‏ ‏وَيَبِيتُ بِهِ حَتَّى يُصَلِّيَ الصُّبْحَ حِينَ يَقْدَمُ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَمُصَلَّى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَلِكَ عَلَى ‏ ‏أَكَمَةٍ ‏ ‏غَلِيظَةٍ لَيْسَ فِي الْمَسْجِدِ الَّذِي بُنِيَ ثَمَّ وَلَكِنْ أَسْفَلَ مِنْ ذَلِكَ عَلَى ‏ ‏أَكَمَةٍ ‏ ‏غَلِيظَةٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மதீனாவிலிருந்து) மக்காவுக்குச் செல்லும்போது ‘தூத் தவா’ எனும் இடத்தில் இறங்குவார்கள்; ஸுப்ஹுத் தொழும்வரை அங்கேயே இரவில் தங்கியிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுத இடம் அங்குள்ள கெட்டியான மேட்டின் மீது அமைந்துள்ளது. அங்குத் தற்போது பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ள இடம் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுத) இடமன்று. மாறாக, அந்தப் பள்ளிவாசலுக்குக் கீழ்ப்புறமாக அமைந்துள்ள கெட்டியான மேடுதான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுத) அந்த இடமாகும்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர்

அத்தியாயம்: 15, பாடம்: 38, ஹதீஸ் எண்: 2207

و حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ عُمَرَ: ‏
كَانَ ‏ ‏لَا يَقْدَمُ ‏ ‏مَكَّةَ ‏ ‏إِلَّا بَاتَ ‏ ‏بِذِي طَوًى ‏ ‏حَتَّى يُصْبِحَ وَيَغْتَسِلَ ثُمَّ يَدْخُلُ ‏ ‏مَكَّةَ ‏ ‏نَهَارًا وَيَذْكُرُ عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ فَعَلَهُ

இப்னு உமர் (ரலி) மக்காவிற்கு வந்தால், ‘தூத் தவா’வில் இரவில் தங்காமல் இருக்க மாட்டார்கள். காலையில் குளித்துவிட்டுப் பின்னர் பகல் நேரத்தில் மக்காவினுள் நுழைவார்கள். நபி (ஸல்) அவர்களும் அவ்வாறே செய்வார்கள் என அவர்கள் குறிப்பிடுவார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 38, ஹதீஸ் எண்: 2206

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَعُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَحْيَى وَهُوَ الْقَطَّانُ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَاتَ ‏ ‏بِذِي طَوًى ‏ ‏حَتَّى أَصْبَحَ ثُمَّ دَخَلَ ‏ ‏مَكَّةَ

قَالَ ‏ ‏وَكَانَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏يَفْعَلُ ذَلِكَ ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏ابْنِ سَعِيدٍ ‏ ‏حَتَّى صَلَّى الصُّبْحَ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَوْ قَالَ حَتَّى أَصْبَحَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘தூத் தவா’ எனுமிடத்தில் இரவில் தங்கி விட்டுக் காலையில் மக்காவில் நுழைந்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்புகள் :
“இப்னு உமர் (ரலி) அவர்களும் அவ்வாறே செய்வார்கள்” என்று இதன் அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) கூறுகின்றார். உபைதுல்லாஹ் பின் ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பில், “நபி (ஸல்) ஸுப்ஹுத் தொழும்வரை தங்கியிருப்பார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.