அத்தியாயம்: 15, பாடம்: 47, ஹதீஸ் எண்: 2269

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ أَبِي خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏سَعِيدُ بْنُ جُبَيْرٍ: ‏

أَفَضْنَا ‏ ‏مَعَ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏حَتَّى أَتَيْنَا ‏ ‏جَمْعًا ‏ ‏فَصَلَّى بِنَا الْمَغْرِبَ وَالْعِشَاءَ بِإِقَامَةٍ وَاحِدَةٍ ثُمَّ انْصَرَفَ فَقَالَ هَكَذَا صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي هَذَا الْمَكَانِ

நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் (அரஃபாவிலிருந்து) திரும்பி முஸ்தலிஃபாவிற்கு வந்து சேர்ந்தபோது, அவர்கள் ஒரேயோர் இகாமத்தில் எங்களுக்கு மஃக்ரிபையும் இஷாவையும் (அடுத்தடுத்துத்) தொழுவித்த பின்னர், “இவ்வாறே இந்த இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்குத் தொழுவித்தார்கள்” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 47, ஹதீஸ் எண்: 2268

‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الثَّوْرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏سَلَمَةَ بْنِ كُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ: ‏

جَمَعَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ ‏ ‏بِجَمْعٍ ‏ ‏صَلَّى الْمَغْرِبَ ثَلَاثًا وَالْعِشَاءَ رَكْعَتَيْنِ بِإِقَامَةٍ وَاحِدَةٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷாவையும் அடுத்தடுத்துத் தொழுதார்கள். ஒரேயோர் இகாமத்தில் மூன்று ரக்அத்கள் மஃக்ரிபையும் இரண்டு ரக்அத்கள் இஷாவையும் அடுத்தடுத்துத் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 47, ஹதீஸ் எண்: 2267

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏وَسَلَمَةَ بْنِ كُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ: ‏

أَنَّهُ ‏ ‏صَلَّى الْمَغْرِبَ ‏ ‏بِجَمْعٍ ‏ ‏وَالْعِشَاءَ بِإِقَامَةٍ ثُمَّ حَدَّثَ عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏أَنَّهُ صَلَّى مِثْلَ ذَلِكَ وَحَدَّثَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَنَعَ مِثْلَ ذَلِكَ ‏

و حَدَّثَنِيهِ ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏صَلَّاهُمَا بِإِقَامَةٍ وَاحِدَةٍ

ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்), (தமது ஹஜ்ஜின்போது) முஸ்தலிஃபாவில் ஒரு இகாமத்தில் மஃக்ரிபையும் இஷாவையும் (அடுத்தடுத்துத்) தொழுதார்கள். பிறகு, “இவ்வாறே இப்னு உமர் (ரலி) அவர்களும் தொழுதார்கள்” என்றும், “அவ்வாறே நபி (ஸல்) அவர்களும் தொழுவார்கள் என இப்னு உமர் (ரலி) கூறினார்கள்” என்றும் அறிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக ஸலமா பின் குஹைல் (ரஹ்)


குறிப்பு :

வகீஉ (ரஹ்) வழி அறிவிப்பில், “மஃக்ரிபையும் இஷாவையும் ஒரேயோர் இகாமத்தில் (அடுத்தடுத்துத்) தொழுதார்கள்” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 47, ஹதீஸ் எண்: 2266

‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّ ‏ ‏عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏أَبَاهُ ‏ ‏قَالَ: ‏

جَمَعَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ ‏ ‏بِجَمْعٍ ‏ ‏لَيْسَ بَيْنَهُمَا سَجْدَةٌ وَصَلَّى الْمَغْرِبَ ثَلَاثَ رَكَعَاتٍ وَصَلَّى الْعِشَاءَ رَكْعَتَيْنِ ‏

فَكَانَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏يُصَلِّي ‏ ‏بِجَمْعٍ ‏ ‏كَذَلِكَ حَتَّى لَحِقَ بِاللَّهِ تَعَالَى

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷாவையும் அடுத்தடுத்துத் தொழுதார்கள். அவற்றுக்கிடையே (கூடுதலான தொழுகைகள்) வேறெதுவும் தொழவில்லை.

(மஃக்ரிப்) மூன்று ரக்அத்கள் தொழுதுவிட்டு, (தொடர்ந்து) இஷாவை இரண்டு ரக்அத்தாக(சுருக்கி)த் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்பு :

“(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), அல்லாஹ்விடம் சென்றடையும்வரை முஸ்தலிஃபாவில் இவ்வாறே தொழுதுவந்தார்கள்” என்று இதன் அறிவிப்பாளரான உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) கூறுகிறார்கள்.

அத்தியாயம்: 15, பாடம்: 47, ஹதீஸ் எண்: 2265

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ: ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَّى الْمَغْرِبَ وَالْعِشَاءَ ‏ ‏بِالْمُزْدَلِفَةِ ‏ ‏جَمِيعًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தமது ஹஜ்ஜின்போது) முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷாவையும் அடுத்தடுத்துத் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 47, ஹதீஸ் எண்: 2264

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَدِيُّ بْنُ ثَابِتٍ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ يَزِيدَ الْخَطْمِيَّ ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏أَبَا أَيُّوبَ ‏ ‏أَخْبَرَهُ: ‏

‏أَنَّهُ ‏ ‏صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي حَجَّةِ الْوَدَاعِ الْمَغْرِبَ وَالْعِشَاءَ ‏ ‏بِالْمُزْدَلِفَةِ ‏

و حَدَّثَنَاه ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏وَابْنُ رُمْحٍ ‏ ‏عَنْ ‏ ‏اللَّيْثِ بْنِ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ رُمْحٍ ‏ ‏فِي رِوَايَتِهِ عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْخَطْمِيِّ ‏ ‏وَكَانَ أَمِيرًا عَلَى ‏ ‏الْكُوفَةِ ‏ ‏عَلَى عَهْدِ ‏ ‏ابْنِ الزُّبَيْرِ

விடைபெறும் ஹஜ்ஜின்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷாவையும் (அடுத்தடுத்துத்) தொழுதேன்.

அறிவிப்பாளர் : அபூஅய்யூப் காலித் பின் ஸைத் (ரலி)


குறிப்பு :

இப்னு ரும்ஹு (ரஹ்) வழி அறிவிப்பில், “எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த அப்துல்லாஹ் பின் யஸீத் அல் கத்மீ (ரஹ்), அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களது ஆட்சியில் கூஃபாவின் ஆளுநராக இருந்தார்” எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 47, ஹதீஸ் எண்: 2263

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏حَمَّادِ بْنِ زَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو الرَّبِيعِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ: ‏

سُئِلَ ‏ ‏أُسَامَةُ ‏ ‏وَأَنَا شَاهِدٌ ‏ ‏أَوْ قَالَ سَأَلْتُ ‏ ‏أُسَامَةَ بْنَ زَيْدٍ ‏ ‏وَكَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَرْدَفَهُ ‏ ‏مِنْ ‏ ‏عَرَفَاتٍ ‏ ‏قُلْتُ كَيْفَ كَانَ يَسِيرُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِينَ ‏ ‏أَفَاضَ ‏ ‏مِنْ ‏ ‏عَرَفَةَ ‏ ‏قَالَ ‏ ‏كَانَ يَسِيرُ ‏ ‏الْعَنَقَ ‏ ‏فَإِذَا وَجَدَ ‏ ‏فَجْوَةً ‏ ‏نَصَّ ‏

و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏وَعَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏وَحُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَزَادَ فِي حَدِيثِ ‏ ‏حُمَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏هِشَامٌ ‏ ‏وَالنَّصُّ ‏ ‏فَوْقَ ‏ ‏الْعَنَقِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அரஃபாவிலிருந்து (முஸ்தலிஃபாவிற்குத்) திரும்பும்போது அவர்களின் பின்னால் (வாகனத்தில்) அமரவைத்திருந்த உஸாமா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அரஃபாவிலிருந்து திரும்பியபோது எவ்வாறு பயணித்தார்கள்?”  என்று வினவப்பட்டது. அப்போது அவர்களுடன் நான் இருந்தேன். அல்லது உஸாமா (ரலி) அவர்களிடம் நான் வினவினேன். அதற்கு உஸாமா (ரலி), “நபியவர்கள் மிதமான வேகத்தில் பயணித்தார்கள். (கூட்ட நெரிசல் காணப்படாத) விசாலமான இடத்தை அடைந்தால் அவர்கள் விரைவாகச் சென்றார்கள்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)


குறிப்பு :

ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) வழி அறிவிப்பில், “மேற்கண்ட ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள ‘அந்நஸ்’ (விரைவு) என்பது, ‘அல் அனக்’ (மிதவேகம்) என்பதைவிடக் கூடுதல் வேகமாகும்” என்று ஹிஷாம் (ரஹ்) விளக்கம் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 47, ஹதீஸ் எண்: 2262

‏حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ: ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَفَاضَ ‏ ‏مِنْ ‏ ‏عَرَفَةَ ‏ ‏وَأُسَامَةُ ‏ ‏رِدْفُهُ ‏ ‏قَالَ ‏ ‏أُسَامَةُ ‏ ‏فَمَا زَالَ يَسِيرُ عَلَى هَيْئَتِهِ حَتَّى أَتَى ‏ ‏جَمْعًا

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அரஃபாவிலிருந்து திரும்பியபோது, அதே நிலையில் (மிதமான வேகத்தில்) தொடர்ந்து பயணம் மேற்கொண்டு முஸ்தலிஃபா போய்ச்சேர்ந்தார்கள்” என்று அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) பயணித்த உஸாமா பின் ஸைத் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 47, ஹதீஸ் எண்: 2261

‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ سِبَاعٍ ‏ ‏عَنْ ‏ ‏أُسَامَةَ بْنِ زَيْدٍ: ‏

أَنَّهُ كَانَ ‏ ‏رَدِيفَ ‏ ‏رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِينَ ‏ ‏أَفَاضَ ‏ ‏مِنْ ‏ ‏عَرَفَةَ ‏ ‏فَلَمَّا جَاءَ ‏ ‏الشِّعْبَ ‏ ‏أَنَاخَ ‏ ‏رَاحِلَتَهُ ‏ ‏ثُمَّ ذَهَبَ إِلَى ‏ ‏الْغَائِطِ ‏ ‏فَلَمَّا رَجَعَ صَبَبْتُ عَلَيْهِ مِنْ ‏ ‏الْإِدَاوَةِ ‏ ‏فَتَوَضَّأَ ثُمَّ رَكِبَ ثُمَّ أَتَى ‏ ‏الْمُزْدَلِفَةَ ‏ ‏فَجَمَعَ بِهَا بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அரஃபாவிலிருந்து (முஸ்தலிஃபாவிற்குத்) திரும்பியபோது அவர்களுக்குப் பின்னால் நான் வாகனத்தில் அமர்ந்திருந்தேன். அவர்கள் அந்தப் பள்ளத்தாக்கிற்கு வந்துசேர்ந்ததும் தமது வாகன ஒட்டகத்தைப் படுக்க வைத்துவிட்டுக் கழிப்பிடம் நோக்கிச் சென்றார்கள். (தமது தேவையை முடித்து) அவர்கள் திரும்பியபோது, அவர்களுக்கு நான் நீர் குவளையிலிருந்து தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் உளூச் செய்தார்கள். பிறகு வாகனத்தில் ஏறிப் புறப்பட்டார்கள். முஸ்தலிஃபா வந்ததும் (இஷா நேரத்தில்) அங்கு மஃக்ரிபையும் இஷாவையும் அடுத்தடுத்துத் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 47, ஹதீஸ் எண்: 2260

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏أُسَامَةَ بْنِ زَيْدٍ: ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمَّا أَتَى ‏ ‏النَّقْبَ ‏ ‏الَّذِي يَنْزِلُهُ الْأُمَرَاءُ نَزَلَ فَبَالَ ‏ ‏وَلَمْ يَقُلْ ‏ ‏أَهَرَاقَ ‏ ‏ثُمَّ دَعَا بِوَضُوءٍ فَتَوَضَّأَ وُضُوءًا خَفِيفًا فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ الصَّلَاةَ فَقَالَ ‏ ‏الصَّلَاةُ أَمَامَكَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தலைவர்கள் (தமது பயணத்தில்) இறங்கி இயற்கைக் கடன்களை நிறைவேற்றும் பள்ளத்தாக்கு வந்தபோது, (தமது வாகனத்திலிருந்து) இறங்கினார்கள். பிறகு சிறுநீர் கழித்தார்கள்$. பிறகு தண்ணீர் கொண்டுவரச் சொல்லிச் சுருக்கமாக உளூச் செய்தார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையா?” என்று கேட்டேன். அதற்கு, தொழுகை உமக்கு எதிரே (உள்ள முஸ்தலிஃபாவில்தான் தொழப்பட) உள்ளது” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)


குறிப்பு :

$சிறுநீர் கழித்தபின் “நீர் ஊற்றிக் கழுவிக்கொண்டார்கள்” என்பதை இந்த ஹதீஸில் அறிவிப்பாளர் உஸாமா (ரலி) குறிப்பிடவில்லை.