அத்தியாயம்: 15, பாடம்: 49, ஹதீஸ் எண்: 2281

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّ ‏ ‏سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏أَخْبَرَهُ: ‏

‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏كَانَ ‏ ‏يُقَدِّمُ ضَعَفَةَ أَهْلِهِ فَيَقِفُونَ عِنْدَ الْمَشْعَرِ الْحَرَامِ ‏ ‏بِالْمُزْدَلِفَةِ ‏ ‏بِاللَّيْلِ فَيَذْكُرُونَ اللَّهَ مَا بَدَا لَهُمْ ثُمَّ ‏ ‏يَدْفَعُونَ ‏ ‏قَبْلَ أَنْ يَقِفَ الْإِمَامُ وَقَبْلَ أَنْ ‏ ‏يَدْفَعَ ‏ ‏فَمِنْهُمْ مَنْ يَقْدَمُ ‏ ‏مِنًى ‏ ‏لِصَلَاةِ الْفَجْرِ وَمِنْهُمْ مَنْ يَقْدَمُ بَعْدَ ذَلِكَ فَإِذَا قَدِمُوا رَمَوْا ‏ ‏الْجَمْرَةَ ‏ ‏وَكَانَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏يَقُولُ أَرْخَصَ فِي أُولَئِكَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) தமது குடும்பத்திலுள்ள பலவீனர்களை முன் கூட்டியே (ஃபஜ்ருக்கு முன்பே மினாவிற்கு) அனுப்பிவிடுவார்கள். அதன்படி, அவர்கள் முஸ்தலிஃபாவில் மஷ்அருல் ஹராம் எனுமிடத்தில் இரவில் தங்கியிருந்து, அங்குத் தமக்குத் தெரிந்தவகையில் அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள். இமாம், முஸ்தலிஃபாவில் தங்கியிருந்து திரும்புவதற்கு முன்பே (பலவீனர்கள் மினாவிற்குத்) திரும்பிவிடுவர். அவர்களில் சிலர் ஃபஜ்ருத் தொழுகைக்காக முன்கூட்டியே மினாவிற்குச் சென்றுவிடுவர். இன்னும் சிலர் அதற்குப் பின் செல்வர். மினாவுக்குச் சென்றதும் ‘ஜம்ரா’வில் கல்லெறிவர். “(முதியோர், பெண்கள், நோயாளிகள் போன்ற) இத்தகைய(நலிந்த)வர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (இவ்வாறு செய்ய) அனுமதி யளித்துள்ளார்கள்” என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக ஸாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்)

Share this Hadith: