அத்தியாயம்: 15, பாடம்: 59, ஹதீஸ் எண்: 2314

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏صَالِحِ بْنِ كَيْسَانَ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ يَسَارٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏أَبُو رَافِعٍ: ‏

‏لَمْ يَأْمُرْنِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ أَنْزِلَ ‏ ‏الْأَبْطَحَ ‏ ‏حِينَ خَرَجَ مِنْ ‏ ‏مِنًى ‏ ‏وَلَكِنِّي جِئْتُ ‏ ‏فَضَرَبْتُ ‏ ‏فِيهِ ‏ ‏قُبَّتَهُ ‏ ‏فَجَاءَ فَنَزَلَ ‏

قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏فِي رِوَايَةِ ‏ ‏صَالِحٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏سُلَيْمَانَ بْنَ يَسَارٍ ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏قُتَيْبَةَ ‏ ‏قَالَ عَنْ ‏ ‏أَبِي رَافِعٍ ‏ ‏وَكَانَ عَلَى ‏ ‏ثَقَلِ ‏ ‏النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மினாவிலிருந்து புறப்பட்டுச் சென்றபோது ‘அல்அப்தஹ்’ எனுமிடத்தில் இறங்கித் தங்குமாறு என்னைப் பணிக்கவில்லை. நானாகச் சென்று அந்த இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கூடாரத்தை அமைத்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்து அங்குத் தங்கினார்கள்.

அறிவிப்பாளர் : அபூராஃபிஉ அஸ்லம் (ரலி)


குறிப்பு :

குதைபா பின் ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பில், “அபூராஃபிஉ (ரலி) நபி (ஸல்) அவர்களின் பயணச் சாமான்களைக் கொண்டு சென்றார்கள்” எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது.