அத்தியாயம்: 15, பாடம்: 07, ஹதீஸ் எண்: 2056

حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَأَبُو كَامِلٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَوَانَةَ ‏ ‏قَالَ ‏ ‏سَعِيدٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏عَنْ الرَّجُلِ يَتَطَيَّبُ ثُمَّ يُصْبِحُ مُحْرِمًا فَقَالَ مَا أُحِبُّ أَنْ أُصْبِحَ مُحْرِمًا ‏ ‏أَنْضَخُ طِيبًا ‏ ‏لَأَنْ ‏ ‏أَطَّلِيَ ‏ ‏بِقَطِرَانٍ ‏ ‏أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَفْعَلَ ذَلِكَ ‏

‏فَدَخَلْتُ عَلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏فَأَخْبَرْتُهَا أَنَّ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏قَالَ مَا أُحِبُّ أَنْ أُصْبِحَ مُحْرِمًا أَنْضَخُ طِيبًا لَأَنْ أَطَّلِيَ بِقَطِرَانٍ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَفْعَلَ ذَلِكَ فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏أَنَا طَيَّبْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عِنْدَ إِحْرَامِهِ ثُمَّ طَافَ فِي نِسَائِهِ ثُمَّ أَصْبَحَ مُحْرِمًا

நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “ஒருவர் நறுமணப் பொருளைப் பூசிய பின்னர் இஹ்ராமுடன் இருப்பதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நான் நறுமணம் கமழ இஹ்ராமுடன் இருப்பதை விரும்பவில்லை. அவ்வாறு செய்வதைவிட, தாரைப் பூசிக்கொள்வது எனக்கு மிகவும் விருப்பமானதாகும்’ என்று கூறினார்கள். பின்னர் நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று இப்னு உமர் (ரலி) ‘நான் நறுமணம் கமழ இஹ்ராமுடன் இருப்பதை விரும்பவில்லை. அவ்வாறு செய்வதைவிட, தாரைப் பூசிக்கொள்வது எனக்கு மிகவும் விருப்பமானதாகும்’ எனக் கூறினார்கள் என்று தெரிவித்தேன். அதற்கு ஆயிஷா (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இஹ்ராமின்போது அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன். பின்னர் அவர்கள் தம் துணைவியரிடையே வலம் வந்தார்கள். பின்னர் இஹ்ராமுடனே இருந்தார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக முஹம்மத் பின் அல்முன்தஷிர் (ரஹ்)