அத்தியாயம்: 15, பாடம்: 08, ஹதீஸ் எண்: 2065

حَدَّثَنِي ‏ ‏أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏خَرَجَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَاجًّا وَخَرَجْنَا مَعَهُ قَالَ فَصَرَفَ مِنْ أَصْحَابِهِ فِيهِمْ ‏ ‏أَبُو قَتَادَةَ ‏ ‏فَقَالَ خُذُوا سَاحِلَ الْبَحْرِ حَتَّى تَلْقَوْنِي قَالَ فَأَخَذُوا سَاحِلَ الْبَحْرِ فَلَمَّا انْصَرَفُوا قِبَلَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَحْرَمُوا كُلُّهُمْ إِلَّا ‏ ‏أَبَا قَتَادَةَ ‏ ‏فَإِنَّهُ لَمْ يُحْرِمْ فَبَيْنَمَا هُمْ يَسِيرُونَ إِذْ رَأَوْا حُمُرَ وَحْشٍ فَحَمَلَ عَلَيْهَا ‏ ‏أَبُو قَتَادَةَ ‏ ‏فَعَقَرَ مِنْهَا أَتَانًا فَنَزَلُوا فَأَكَلُوا مِنْ لَحْمِهَا قَالَ فَقَالُوا أَكَلْنَا لَحْمًا وَنَحْنُ مُحْرِمُونَ قَالَ فَحَمَلُوا مَا بَقِيَ مِنْ لَحْمِ ‏ ‏الْأَتَانِ ‏ ‏فَلَمَّا أَتَوْا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا أَحْرَمْنَا وَكَانَ ‏ ‏أَبُو قَتَادَةَ ‏ ‏لَمْ يُحْرِمْ فَرَأَيْنَا حُمُرَ وَحْشٍ فَحَمَلَ عَلَيْهَا ‏ ‏أَبُو قَتَادَةَ ‏ ‏فَعَقَرَ مِنْهَا أَتَانًا فَنَزَلْنَا فَأَكَلْنَا مِنْ لَحْمِهَا فَقُلْنَا نَأْكُلُ لَحْمَ صَيْدٍ وَنَحْنُ مُحْرِمُونَ فَحَمَلْنَا مَا بَقِيَ مِنْ لَحْمِهَا فَقَالَ ‏ ‏هَلْ مِنْكُمْ أَحَدٌ أَمَرَهُ أَوْ أَشَارَ إِلَيْهِ بِشَيْءٍ قَالَ قَالُوا لَا قَالَ فَكُلُوا مَا بَقِيَ مِنْ لَحْمِهَا ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏شَيْبَانَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏فِي رِوَايَةِ ‏ ‏شَيْبَانَ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمِنْكُمْ أَحَدٌ أَمَرَهُ أَنْ يَحْمِلَ عَلَيْهَا أَوْ أَشَارَ إِلَيْهَا ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏شُعْبَةَ ‏ ‏قَالَ أَشَرْتُمْ أَوْ أَعَنْتُمْ أَوْ أَصَدْتُمْ ‏ ‏قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏لَا أَدْرِي قَالَ أَعَنْتُمْ ‏ ‏أَوْ أَصَدْتُمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்டார்கள். அவர்களுடன் நாங்களும் புறப்பட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் தோழர்களில் சிலரை வேறு வழியில் திருப்பிவிட்டார்கள். அவர்களில் நானும் ஒருவன். அப்போது, “கடற்கரை வழியாகச் செல்லுங்கள்; நாம் சந்திப்போம்” என்று கூறினார்கள். அவ்வாறே நபித்தோழர்கள் கடற்கரை வழியாகச் செல்லத் தொடங்கினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து சேர்ந்தபோது, என்னைத் தவிர அவர்கள் அனைவரும் இஹ்ராம் பூண்டிருந்தனர். நான் இஹ்ராம் பூண்டிருக்கவில்லை. இவ்வாறு அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, காட்டுக் கழுதைகளைக் கண்டனர். அவற்றை நான் தாக்கி, ஒரு பெட்டைக் கழுதையின் காலை வெட்டி(அதை வேட்டையாடி)னேன்.
பிறகு அவர்கள் (ஓரிடத்தில்) இறங்கி அதன் இறைச்சியைச் சாப்பிட்டனர்; “நாம் இஹ்ராம் பூண்ட நிலையில் (வேட்டைப் பிராணியின்) இறைச்சியைச் சாப்பிட்டுவிட்டோமே” என்று கூறினர்.

பிறகு அந்தக் கழுதையின் இறைச்சியில் எஞ்சியுள்ளதை எடுத்துக்கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் இஹ்ராம் பூண்டிருந்தோம்; அபூகத்தாதா இஹ்ராம் பூண்டிருக்கவில்லை. இந்நிலையில் நாங்கள் (வழியில்) காட்டுக் கழுதையைக் கண்டோம். அபூகத்தாதா அவற்றைத் தாக்கி, ஒரு பெட்டைக் கழுதையின் காலை வெட்டி(வேட்டை யாடி)னார். பின்னர் நாங்கள் (ஓரிடத்தில்) இறங்கி அதன் இறைச்சியிலிருந்து சிறிதளவை உண்டோம். பிறகு, ‘வேட்டையாடப்பெற்ற பிராணியின் இறைச்சியை இஹ்ராம் பூண்டிருந்த நிலையில் சாப்பிடுகிறோமே’ என்று (எங்களிடையே) பேசிக்கொண்டோம். பிறகு அதன் இறைச்சியில் எஞ்சியதை எடுத்துவந்திருக்கிறோம்” என்று கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களில் எவரேனும் அதைத் தாக்குமாறு அவரைப் பணித்தாரா, அல்லது அதை நோக்கி சைகை ஏதும் செய்தாரா?” என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் ‘இல்லை’ என்றனர். “அப்படியானால் அதன் எஞ்சிய இறைச்சியை நீங்கள் உண்ணுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூகத்தாதா (ரலி) வழியாக அவருடைய மகன் அப்துல்லாஹ் (ரஹ்)

குறிப்புகள் : ஷைபான் (ரஹ்) வழி அறிவிப்பில், “உங்களில் யாரேனும் அதைத் தாக்குமாறு அவரைத் தூண்டினாரா, அல்லது தாக்குமாறு சைகை செய்தாரா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள் என இடம்பெற்றுள்ளது.

ஷுஅபா (ரஹ்) வழி அறிவிப்பில் “நீங்கள் சைகை செய்தீர்களா, அல்லது (அவருக்கு) உதவி செய்தீர்களா, அல்லது நீங்களே வேட்டையாடினீர்களா?” என்று கேட்டார்கள் எனக் காணப்படுகிறது.

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்), நீங்கள் (அவருக்கு) உதவி செய்தீர்களா என்று கேட்டார்களா? அல்லது நீங்கள் வேட்டையாடினீர்களா என்று கேட்டார்களா” என்று எனக்குச் சரியாக நினைவில்லை என்று ஷுஅபா (ரஹ்) கூறுகின்றார்.

Share this Hadith:

Leave a Comment