அத்தியாயம்: 16, பாடம்: 15, ஹதீஸ் எண்: 2570

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏وَعَاصِمُ بْنُ النَّضْرِ التَّيْمِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏مُعْتَمِرٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ حَبِيبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مِجْلَزٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ: ‏

لَمَّا تَزَوَّجَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏زَيْنَبَ بِنْتَ جَحْشٍ ‏ ‏دَعَا الْقَوْمَ فَطَعِمُوا ثُمَّ جَلَسُوا يَتَحَدَّثُونَ قَالَ فَأَخَذَ كَأَنَّهُ يَتَهَيَّأُ لِلْقِيَامِ فَلَمْ يَقُومُوا فَلَمَّا رَأَى ذَلِكَ قَامَ فَلَمَّا قَامَ قَامَ مَنْ قَامَ مِنْ الْقَوْمِ ‏


زَادَ ‏ ‏عَاصِمٌ ‏ ‏وَابْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏فِي حَدِيثِهِمَا قَالَ فَقَعَدَ ثَلَاثَةٌ ‏ ‏وَإِنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏جَاءَ لِيَدْخُلَ فَإِذَا الْقَوْمُ جُلُوسٌ ثُمَّ إِنَّهُمْ قَامُوا فَانْطَلَقُوا قَالَ فَجِئْتُ فَأَخْبَرْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُمْ قَدْ انْطَلَقُوا قَالَ فَجَاءَ حَتَّى دَخَلَ فَذَهَبْتُ أَدْخُلُ فَأَلْقَى الْحِجَابَ بَيْنِي وَبَيْنَهُ قَالَ وَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏” ‏يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلَّا أَنْ يُؤْذَنَ لَكُمْ إِلَى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ ‏ ‏إِنَاهُ ‏ ‏إِلَى قَوْلِهِ ‏ ‏إِنَّ ذَلِكُمْ كَانَ عِنْدَ اللَّهِ عَظِيمًا ‏“

நபி (ஸல்), ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) அவர்களை மணமுடித்தபோது மக்களை  (வலீமா விருந்துக்கு) அழைத்தார்கள். மக்கள் (விருந்து) உண்டுவிட்டு, அமர்ந்து பேசிக்கொண்டே இருந்தனர். நபி (ஸல்) எழுந்துபோகத் தயாராவதைப் போன்று காட்டலானார்கள். ஆனால், மக்கள் எழுந்தபாடில்லை. அதைக் கண்டபோது நபி (ஸல்) (அங்கிருந்து வெளியேற) எழுந்துவிட்டார்கள். அவர்கள் எழுந்துவிடவே மற்றவர்களும் எழுந்துவிட்டனர்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

ஆஸிம் (ரஹ்) மற்றும் இப்னு அப்தில் அஃலா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில்,

— ஆனால், மூன்று பேர் மட்டும் அமர்ந்து (பேசிக்)கொண்டேயிருந்தார்கள். நபி (ஸல்) (ஸைனப் (ரலி) இருந்த வீட்டுக்குள்) செல்லப்போனார்கள். அப்போதும் அவர்கள் (மூவரும்) அமர்ந்து (பேசிக்) கொண்டேயிருந்தார்கள். இறுதியாக, அவர்கள் (மூவரும்) எழுந்து சென்றுவிட்டார்கள்.

நான் சென்று, “அவர்கள் எழுந்து சென்றுவிட்டார்கள்” என நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். மீண்டும் (வெளியே) வந்து பார்த்துவிட்டு நபி (ஸல்) உள்ளே சென்றார்கள். நானும் அவர்களுடன் உள்ளே நுழையப்போனேன். அதற்குள் நபி (ஸல்) எனக்கும் தமக்குமிடையே திரையைப் போட்டுவிட்டார்கள்.

அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “இறைநம்பிக்கை கொண்டோரே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள்” என்று தொடங்கும் (33:53ஆவது) வசனத்தை அருளினான் –- என்ற கூடுதல் தகவல் இடம்பெற்றுள்ளது.