அத்தியாயம்: 16, பாடம்: 22, ஹதீஸ் எண்: 2600

‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جُوَيْرِيَةُ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ مُحَيْرِيزٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏أَنَّهُ أَخْبَرَهُ: ‏

‏قَالَ أَصَبْنَا ‏ ‏سَبَايَا ‏ ‏فَكُنَّا ‏ ‏نَعْزِلُ ‏ ‏ثُمَّ سَأَلْنَا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ذَلِكَ فَقَالَ لَنَا وَإِنَّكُمْ لَتَفْعَلُونَ وَإِنَّكُمْ لَتَفْعَلُونَ وَإِنَّكُمْ لَتَفْعَلُونَ ‏ ‏مَا مِنْ نَسَمَةٍ كَائِنَةٍ إِلَى يَوْمِ الْقِيَامَةِ إِلَّا هِيَ كَائِنَةٌ

நாங்கள் (பனூ முஸ்தலிக் போரில்) சில போர்க் கைதிகளைப் பெற்றோம். (எங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட பெண் கைதிகளுடன் உடலுறவு கொள்ளவும்) ‘அஸ்லு’ச் செய்து கொள்ளவும் விரும்பினோம். அது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினோம். அப்போது அவர்கள், “நீங்கள் (அஸ்லு) செய்துகொண்டுதான் இருக்கின்றீர்களா? நீங்கள் (அஸ்லு) செய்துகொண்டுதான் இருக்கின்றீர்களா? நீங்கள் (அஸ்லு) செய்துகொண்டுதான் இருக்கின்றீர்களா?” என்று கேட்டுவிட்டு, “மறுமை நாள்வரை உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

Share this Hadith: