அத்தியாயம்: 16, பாடம்: 22, ஹதீஸ் எண்: 2606

‏حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ: ‏

‏أَنَّ رَجُلًا أَتَى رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ إِنَّ لِي ‏ ‏جَارِيَةً ‏ ‏هِيَ خَادِمُنَا وَسَانِيَتُنَا وَأَنَا ‏ ‏أَطُوفُ ‏ ‏عَلَيْهَا وَأَنَا أَكْرَهُ أَنْ تَحْمِلَ فَقَالَ ‏ ‏اعْزِلْ ‏ ‏عَنْهَا إِنْ شِئْتَ فَإِنَّهُ ‏ ‏سَيَأْتِيهَا مَا قُدِّرَ لَهَا فَلَبِثَ الرَّجُلُ ثُمَّ أَتَاهُ فَقَالَ إِنَّ ‏ ‏الْجَارِيَةَ ‏ ‏قَدْ حَبِلَتْ فَقَالَ قَدْ أَخْبَرْتُكَ أَنَّهُ ‏ ‏سَيَأْتِيهَا مَا قُدِّرَ لَهَا

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “எங்களுக்குப் பணிவிடை செய்பவளாகவும் தண்ணீர் சுமப்பவளாகவும் என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருக்கின்றாள். அவளிடம் நான் சென்றுவருகிறேன். (அதே சமயம்) அவள் கருவுற்றுவிடுவதை நான் விரும்பவில்லை” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்), “நீ விரும்பினால் அஸ்லுச் செய்துகொள். ஆயினும், அவளுக்கு விதிக்கப்பட்டு இருப்பது அவளிடம் நிச்சயம் வந்துசேரும்” என்றார்கள். அவர் சில நாட்கள் கழிந்த பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அந்த அடிமைப் பெண் கருவுற்றுவிட்டாள்” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவளுக்கு விதிக்கப்பட்டது நிச்சயம் அவளிடம் வந்துசேரும் என உன்னிடம் நான் ஏற்கெனவே தெரிவித்தேன்!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

Share this Hadith: