அத்தியாயம்: 16, பாடம்: 24, ஹதீஸ் எண்: 2613

‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏الْمُقْرِئُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏عَنْ ‏ ‏جُدَامَةَ بِنْتِ وَهْبٍ أُخْتِ عُكَّاشَةَ ‏ ‏قَالَتْ: ‏

‏حَضَرْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي أُنَاسٍ وَهُوَ يَقُولُ ‏ ‏لَقَدْ هَمَمْتُ أَنْ أَنْهَى عَنْ ‏ ‏الْغِيلَةِ ‏ ‏فَنَظَرْتُ فِي ‏ ‏الرُّومِ ‏ ‏وَفَارِسَ ‏ ‏فَإِذَا هُمْ يُغِيلُونَ أَوْلَادَهُمْ فَلَا يَضُرُّ أَوْلَادَهُمْ ذَلِكَ شَيْئًا ثُمَّ سَأَلُوهُ عَنْ ‏ ‏الْعَزْلِ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَلِكَ الْوَأْدُ الْخَفِيُّ ‏


زَادَ ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏فِي حَدِيثِهِ عَنْ الْمُقْرِئِ وَهِيَ  ” ‏وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ “  ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ إِسْحَقَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ الْقُرَشِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏عَنْ ‏ ‏جُدَامَةَ بِنْتِ وَهْبٍ الْأَسَدِيَّةِ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏ ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي أَيُّوبَ ‏ ‏فِي ‏ ‏الْعَزْلِ ‏ ‏وَالْغِيلَةِ غَيْرَ أَنَّهُ قَالَ ‏ ‏الْغِيَالِ

நான் சிலருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவைக்குச் சென்றேன். அப்போது அவர்கள், “பாலூட்டிக்கொண்டிருக்கும் காலத்தில் மனைவியுடன் உடலுறவு கொள்ள வேண்டாமென நான் தடை விதிக்க எண்ணினேன். பிறகு ரோமர்களும் பாரசீகர்களும் தம் குழந்தைகள், (தாய்ப்) பால் அருந்திக்கொண்டிருக்கும்போதே அவர்கள் தம் மனைவியருடன் உறவு கொண்டும் அதனால் அவர்களுடைய குழந்தைகளுக்கு எந்தப் பாதிப்பும் நேராமலிருப்பது குறித்து யோசித்துப் பார்த்தேன். (எனவே, தடை விதிக்கும் எண்ணத்தைக் கைவிட்டேன்)” என்று கூறிக்கொண்டிருந்தார்கள். பின்னர் அவர்களிடம் அஸ்லுச் செய்வதைப் பற்றி வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அது மறைமுகமான சிசுக் கொலை யாகும்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : உக்காஷா (ரலி) அவர்களின் சகோதரி ஜுதாமா பின்த்து வஹ்பு (ரலி)


குறிப்பு :

அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரீ (ரஹ்) வழியாக உபைதுல்லாஹ் பின் ஸயீத் (ரஹ்) அறிவிப்பதில், “உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை, என்ன பாவத்திற்காகக் கொல்லப்பட்டாள்? என விசாரிக்கப்படும்போது …” எனும் (81:8,9 ஆவது) வசனங்களில் கூறப்பட்டுள்ள சிசுக் கொலைக்கு அஸ்லு ஒத்திருக்கிறது என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.